வியாழன், 18 மார்ச், 2010


கோயில் விழாவிற்காக
உள்ளுர் விடுமுறை தேவையா
?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோயில் விழாவிற்காக உள்ளூர் விடுமுறை தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளுர் கோயில் விழாவிற்காக ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை விடும் வழக்கம் அந்தந்த ஊர்களில் ஏற்பட்டது. அதுவும் அந்த வாரத்தில் வரும் சனிக்கிழமைகளில் பணி நாள் ஏற்படுத்தப்பட்டு பணி சரி செய்யப்படும். இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த காலத்தில் நார்த்தாமலை முத்து-மாரியம்மன் கோயில் தேரோட்டம் பூச்சொரிதல் போன்ற விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அன்றைய நாள் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்-கள் உள்பட அனைத்துத் துறை அலு-வலகங்களும் விடுமுறை அறிவிக்கப்-பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20- கி.மீ தூரத்தில் உள்ளது. அடுத்ததாக திருவப்பூர் முத்துமாரி-யம்மன் கோயில் விழாவிற்கும், பூச்-சொரிதல் தேரோட்டம் போன்றவற்-றிற்-கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளமங்கலம் பெருங்-காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கோரிக்கை விடக் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் மாரியம்மன் கோயில் விழாவிற்கும் விடுமுறைக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் பொது மக்களின் கோரிக்கையாகத்தான் விடு-முறை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆட்சியாளர்களின் பக்கத்திலிருந்து பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்-காக என்றால் அந்தந்த ஊர்களில் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்-ளலாம் என்று வைத்துக் கொள்ளலாமே! அதை விட்டு விட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விடுமுறை விட்டு பணி நாள்களை விரயம் செய்ய வேண்டியதில்லை. இப்பொழுது வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் குளமங்கலம் மற்றும் கொன்னையூர் கோயில்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங்-களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வரு-கிறார்கள் என்பதாகும். அந்தக் கோயில்-களுக்கு அந்த ஊர்களில் இருந்து பக்தர்கள் வரவில்லை என்றால் குடியா முழுகிப் போய்விடும்? அதைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்-டுமா? மேலும் பக்தர்கள் வருகிறார்கள் என்று சொல்லி புதுக்கோட்டை மாவட்ட அலுவலகங்களுக்கு விடு-முறை விட்டால் சிவகங்கை, இராம-நாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் உள்ள பக்தர்களும் அலுவலக அலுவலர்-களும் ஊழியர்களும் விடுமுறை கேட்க மாட்டார்களா? இப்படியே விடுமுறை விட்டுக் கொண்டிருந்தால் அரசு நிருவாகம் செயல்படுவது எப்படி? கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்டம் முழு-வதும் கல்வியை வீணடிக்க-லாமா? பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ_ மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து அவர்-களைத் தேர்ச்சியடைய வைக்க பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒவ்வொரு மணி நேரத்தையும் பொன்னான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் இப்படி பக்தியின் பெயரால் மாவட்டம் முழுவதும் விடுமுறை விட்டுக் கொண்டிருந்தால் கல்வி மட்டுமா பாழாகிறது? அனைத்துத்துறை அலுவலகப் பணிகள் எவ்வளவு போகிறது? அதை முடிக்க அடுத்ததாக பொதுமக்களின் அலைச்சல் எவ்-வளவு? மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கவும் அரசு அலுவலகங்களை மூடிப்போடவும் எந்தச் சட்டத்தில் இயற்றி வைக்கப்பட்டுள்ளது? பணிக்கு வரும்போது இப்படியெல்-லாம் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத்தான் பணிக்குச் சேருகிறார்களா? பக்தர்களுக்கு கருணை காட்டவேண்டும் என்று நினைத்தால் அந்தந்த ஊர்களுக்கு மட்டும் விடுமுறை விட்டுத் தொலைந்து போகட்டுமே! வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் அவர்களது பணியையோ பிழைப்பையோ வருமானத்தையோ விட்டு விட்டு வருவார்கள் போவார்கள். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விசயம்... அதே நேரத்தில் அரசு அலுவலகங்-களையும் கல்வி நிறுவனங்களையும் மூடலாமா? இப்படியே விடுமுறை விட்டுக் கொண்டிருந்தால் வாரம் ஏழு நாளும் மாதம் முப்பது நாளும் வருடம் 365- நாளும் விடுமுறை அறிவித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அப்புறம் எந்தத் துறையிலும் முன்னேற முடியாது. அரசு கொஞ்சம் யோசிக்க-வேண்டும்.

- ம.மு.கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக