வியாழன், 18 மார்ச், 2010




அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது
அரசின் நடவடிக்கையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 18-_ அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்-களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்-கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர்நீதி-மன்றக் கிளையில் பொது-நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலு-வலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்-துவமனை, தாலுகா அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்-றன. இந்த கோவில்களில் தினமும் பூஜையும் நடத்-தப்படுகிறது. இதுமட்டு-மல்லாமல் பிரதோஷம் போன்ற சிறப்பு நாள்-களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்று-கின்றனர். எல்லா மதத்-தினரும் தங்களது பணி-களுக்காக அரசு அலுவல-கங்களுக்கு வந்து செல்-கின்றனர்.

இதுபோன்ற சூழ்-நிலையில் அரசு அலுவல-கங்களில் இந்து கோவில்-கள் மட்டும் அமைக்கப்-பட்டு பூஜைகள் நடத்-தப்படுவது பிற மதத்-தினரை புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்-களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெ-னவே ஆணை பிறப்பித்-துள்ளது.

இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படு-வதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலி-புல்லா, கே.பி.கே.-வாசுகி ஆகியோர் முன்னிலை-யில் விசாரணைக்கு வந்-தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு அலுவலகங்-களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்-கூடாது என்று ஏற்கெ-னவே அரசு உத்தரவிட்-டுள்ளது. இந்த உத்த-ரவை அமல்படுத்த வேண்-டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்-தரவு பிறப்பிக்கப்பட்-டுள்ளதால் அதை அமல்-படுத்த அரசு தேவை-யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளா-கங்களில் மத நல்லிணக்-கம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக