சனி, 20 மார்ச், 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு கிடையாதா?

2011 இல் நடைபெற உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி-யாகக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுமையும் பலமாக எழுந்து வருகிறது. திராவிடர் கழகமும் அத்தகைய கணக்கெடுப்பு தேவை என்று வலியுறுத்தி வந்துள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் போடப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட-வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசின் உள்துறை அத்தகைய கணக்கெடுப்பு நடைபெறாது என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

வயது, பாலினம், தாழ்த்தப்பட்டவரா? பிற்படுத்தப்பட்டவரா? எந்த மதத்தைச் சேர்ந்தவர்? தாய் மொழி எது? கல்வித் தகுதி என்ன? எத்தனை மொழிகளை அறிந்தவர்? குடிபெயர்ந்தவரா? செய்யும் தொழில் என்ன? என்ற விவரங்கள் எல்லாம் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எடுக்கப்படும்பொழுது, இந்தியாவின் மிக முக்கியக் கூறான ஜாதி பற்றிய கணக்கெடுப்பை மட்டும் எடுக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுவதாக எந்த இடத்திலும் குறிப்பு இல்லை; மாறாக தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்ற அளவில் மட்டும்தான் உள்ளது. அதாவது வேரை வெட்டமாட்டோம்; இலைகளை மட்டும்தான் வெட்டுவோம் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்திரப் போக்கு.

இதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் (26.11.1957). பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் அப்போராட்-டத்தில் ஈடுபட்டு 3000 பேர் கைது செய்யப்-பட்டு, மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட கருஞ்சட்டைத் தோழர்கள் களப்பலியானார்கள்.

இந்த நிலையில் ஜாதியை ஒரு பக்கத்தில் பாதுகாத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள-மாட்டோம் என்பது எந்த அடிப்படையில் நியாயம்?

சமூகநீதி, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்-குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள நீதிபதிகள் என்ன சொல்லு-கிறார்கள்?

1931_க்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் (லிணீமீ ஞிணீணீ) இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் அளிக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் வினா தொடுக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கப்போவதில்லை என்பதில் சமூகநீதிக்கு_ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் இருப்பதாகவே தெரிகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்ற கணக்குத் தெரிந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் மேலும் உயர்ந்துவிடுமே என்ற அச்சம் உயர்ஜாதி வட்டாரத்தை உலுக்குகிறது.

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற தீர்ப்பும் அடிபட்டுப் போகக்கூடும் என்பதால் உயர்ஜாதி ஆளும் வட்டாரம்-_ நிருவாக வட்டாரம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாக நினைக்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

இதனை எதிர்த்து சமூகநீதியாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்-புக்குக் கீழும்வரும் என்றும் எச்சரிக்கிறோம்.
விடுதலை. 19.03.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக