சனி, 13 மார்ச், 2010

குஜராத் கலவர வழக்கு
நரேந்திரமோடி 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும்

சிறப்பு விசாரணைக் குழு சம்மன்

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்ப-தால், 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குஜராத் முதல-மைச்சர் நரேந்திரமோ-டிக்கு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழு-வதும் கடந்த 2002-ஆம் ஆண்டு பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஆயி-ரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

அகமதாபாத் நகரத்-தில் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த கலவரத்-தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 70 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இது-தொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி ஒரு வழக்கு தொடர்ந்-தார். அந்த வழக்கில், மோடி மற்றும் அவரது ஆள்கள் கலவரத்தில் ஈடுபடு-வோரை கண்டுகொள்-ளாமல் விடும்படி காவல்-துறையினரையும் அதிகாரி-களையும் ஏவினர். கல-வரத்தின்போது அமை-தியை ஏற்படுத்தவே என் கணவர் ஜெப்ரி முயன்-றார். ஆனால், அவரை எரித்துக்கொன்று விட்-டனர். இதற்கு மோடியும் அவரது ஆள்களுமே காரணம் என்று அந்த வழக்கில் அவர் குறிப்-பிட்டு இருந்தார்.

குஜராத் கலவரம் தொடர்பாக, ஜகியா ஜெப்ரியின் புகார் உள்பட பல புகார்கள் நரேந்திர-மோடி மீது நிலுவையில் உள்ளன. அவை பற்றி விசாரணை நடத்த சி.பி.-அய். முன்னாள் இயக்கு-நர் ஆர்.ராகவன் தலை மை-யில் ஒரு சிறப்பு விசா-ரணை குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு, ஜகியா ஜெப்ரியின் வழக்கில் நரேந்திர மோடிக்கு சம்-மன் அனுப்பி உள்ளது.-குஜராத் கலவர வழக்கு-களில் ஜாப்ரி எரித்துக்-கொல்லப்பட்டது தொடர்-பாக விசாரணை நடத்த வேண்டியிருப்ப-தால் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவின் தலைவர் ராகவன் அளித்த பேட்டியில், ஜாப்ரி கொலை வழக்கில் சாட்சி-கள் மற்றும் சாட்சியங்-களில் இருந்து ஏராள-மான ஆதாரங்களை நாங்கள் திரட்டி உள்-ளோம். அவை பற்றி விசா-ரணை நடத்த முதல-மைச்சர் நரேந்திர-மோடியை நேரில் ஆஜ-ராகும்படி சம்மன் அனுப்பி உள்ளோம். அப்-போது அவரிடம், இது-வரை நாங்கள் சேகரித்-துள்ள ஆதாரங்கள் பற்றி விளக்கம் கேட்போம். ஜாப்ரி வழக்கில் மட்டுமே சம்மன் அனுப்பி உள்-ளோம் என்று கூறினார்.

ராகவன் தலைமை-யிலான சிறப்பு விசார-ணை குழு, தனது விசார-ணையை முடித்து, அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதிக்குள் தனது அறிக்-கையை உச்ச நீதிமன்றத்-தில் தாக்கல் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக