ஞாயிறு, 14 மார்ச், 2010

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன
அமெரிக்கா குற்றச்சாற்று


கொழும்பு, மார்ச் 14_- இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்-சகம் குற்றம்சாற்றியுள்-ளது. அமெரிக்க வெளியுற-வுத் துறை அமைச்சகத்-தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்-பான அறிக்கையின் 2009-ஆம் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள-தாவது: இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் தற்போதும், கடத்தல் மற்றும் காணா-மல் போகும் சம்பவங்-களும் அதிகரித்த வண்-ணமே உள்ளன. இந்த செயல்களில் ஈடுபடும் அரசாங்க ஆதரவு குழுக்-களுக்கு எதிரான நட-வடிக்-கைகள் எதுவும் இது-வரையில் மேற்கொள்ளப்-பட-வில்லை.அத்துடன் பல்வேறு வழிகளிலும் கைது செய்யப்படு-கின்ற-வர்கள் துன்புறுத்தப்-படல், மனிதாபிமானம் அற்ற வகையில் பலவந்-தப்படுத்தப்படல், மற்றும் தண்டனைக்கு உட்படுத்-தப்படல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை இடம்-பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான சுதந்திரம் இன்றி நெருக்-கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர்.அவர்கள் மிகவும் அசாதாரண-மான ஒரு பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், உரிமை என்பன முற்று முழுதாக மீறப்பட்டு ள்ளன. அத்துடன் சட்டத்-துக்கு புறம்பான கைது-களும், தடுப்புக் காவல்-களும் அரசாங்கத்தினால் அதிகமாக மேற்கொள்-ளப்பட்டு வருகின்றன. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.எனினும் இலங்கையில் பெரும்-பாலும் அவ்வாறு நடை-பெறுவதில்லை. அத்து-டன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்-பத்திரிகை தாக்கல் உள்-ளிட்ட எந்த நடவடிக்-கை-யும் மேற்கொள்ளப்பட-வில்லை. கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறை-வடைந்த பின்னரும் சிறுவர் போராளிகள் கைது செய்யப்பட்டனர், எனினும் அவர்கள் சிலர் விடுவிக்கப்பட்ட போதி-லும் பெரும்-பான்-மை-யானவர்களின் நிலைமை என்ன வென்று இதுவரை-யில் தகவல் வெளியாக-வில்லை இதேவேளை நாட்-டில் சுதந்திரமான ஊடக செயல்பாடுகளுக்கும், கருத்து வெளியிட்டு சுதந்திரத்துக்கும் பெரிய பாதிப்புகள் காணப்படு-கின்றன. பல்வேறு ஊடக-விலாளர்கள் கைது செய்-யப்பட்டுள்ளதுடன், அர-சாங்கத்துக்கு எதிரான ஊடகவியலாளர்கள் கடத்தப்படல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. அத்துடன் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்காவின் படு-கொலை தொடர்பிலும் குறிப்பிடத்தக்க திருப்-பங்கள் இடம்பெற-வில்லை. ஊடக சுதந்திரத்துக்கு எதிராக பெரும் பங்கம் விளைவிப்பதாக அமை-யும். இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக