வியாழன், 11 மார்ச், 2010

.

சாமியார்களும் சாதாரண மனிதர்களே - கி.வீரமணி

போலி சாமியார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என்று தி.க.தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். நித்யானந்தா உள்ளிட்ட போலி சாமியார்களை கைது செய்ய வலியுறுத்தி கி.வீரமணி தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி
ஆன்மீகத்தை பரப்புகிறேன் என்ற போர்வையில் காவியுடை அணிந்து தியானப் பயிற்சிகள் மூலம் இளைஞர்களையும், பொதுமக்களையும் போலி சாமியார்கள் ஏமாற்றுகின்றனர். நித்தியானந்தா போன்ற கயவர்களை இனியும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களும் நம்மைப் போல சாதாரண மனிதர்களே. இவர்கள் பலகோடி ரூபாய்க்கு அதிபர்களாக மாற தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் கொடுக்க்ப்பட்ட விளம்பரங்களே காரணம். அதே பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இன்று நித்யானந்தா முகத்தை தோலுறித்துக் காட்டியிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். நித்யானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகைக்கும், தொலைக்காட்சிக்கும் எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இனியும் போலி சாமியார்களை விளம்பரப்படுத்த வேண்டாம்.
போலி டாக்டர் உள்பட பிற துறையில் உள்ளவர்கள் தவறு செய்தால் கைது, சிறை என போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களுக்கு திராவிடர் கழகம் எப்பொழுதும் எதிராகப் போராடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக