சனி, 20 மார்ச், 2010




தேவை தமிழ்!

சென்னை மாநகராட்சி மன்றத்தில் ஓர் அருமை-யான முடிவினை எடுத்தி-ருக்கிறார்கள். செய்தியா-ளர்-களிடம் வணக்கத்திற்குரிய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்க-தாகும்.

சென்னை மாநகரில் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளில் தமிழ் கண்டிப்-பாக இடம் பெறவேண்டும். பெரிய எழுத்துக்களில் அது வடிவமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்-கிறது.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு நாட்டின் தலை நகரில் மாநகராட்சி இப்படி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்-ளதை எண்ணி வருந்த வேண்டியுள்ளது என்றாலும் நிலையை நிமிர்த்திட முன் வந்த தமிழுணர்வு மிகவும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

புரட்சிக் கவிஞர் பாடினார்:

வாணிகர் தம் முகவரியை

வரைகின்ற பலகையில், ஆங்கலமா வேண்டும்?

வானுயர்ந்த செந்தமிழால் வரைக என

அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்

என்ற புரட்சிக் கவிஞ-ரின் கனவை நனவாக்கிய-தற்குப் பாராட்டு!

தமிழில் குழந்தைகளுக்-குப் பெயர் சூட்டினால், தங்க மோதிரம் என்று அறிவித்த உணர்வும் நமது மாநகரத் தந்தையையே சாரும்.

தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அண்மைக் காலங்களில் வைக்கப்படும் பெயர்களைக் கேட்டால், குருதி சூடேறுகிறது. நாம் தமிழ்நாட்டில் தான் இருக்-கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. நமது உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரி விலக்கு என்று முதல-மைச்சர் கலைஞர் அறிவிக்க வேண்டிய நிலைதான் இன்றும்.

ஏனிந்த நிலை? நமது கல்வித் திட்டத்தின் கோளாறா? நுகர்வோர் கலாச்சாரமும், புதிய பொரு-ளாதாரமும், ஊடகங்களும், திரைப்படங்களும் தமிழ் மக்களின் சிந்தனைகளைச் சேற்றுக் குட்டைகளாக உருமாற்றி விட்டனவா?

இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். உலகத்-தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த கால கட்டத்தில் மிக மிக மிக_-சிந்திக்கப்பட வேண்டிய, செயல்படவேண்டிய மிகமிக முக்கியமான கருத்து இது.

இன்னொன்று! நமது மதிப்பிற்குரிய தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஆகிய தலைவர்-களின் பெயர்கள் சூட்டப்-பட்ட சாலைகள் அவ்வாறு அழைக்கப்படாமல் இன்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும், மவுண்ட்ரோடு என்றும் பெயர்ப்பலகை-களில் பொறிக்கப்பட்டு உள்ளனவே,- ஊடகங்கள் அழைக்கின்றனவே, அவற்-றையும் தடுக்க வேண்-டாமா?

இதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்-தியதுண்டு. (14.8.1996) காவல்துறை ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்ட-தால் அப்போராட்டம் நிறுத்தப்பட்டது. தேவைப்-பட்டால் திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொள்-ளும். வணக்கத்திற்குரிய சென்னை மாநகரத் தந்தை இதையும் கவனத்தில் கொள்வார்களாக!

- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக