செவ்வாய், 30 மார்ச், 2010

சாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்

என். நரசிம்மன்

(மார்ச் 18 ஆம் தேதி தான் பிடாடி ஆசிரமத்திற்கு கட்டா யம் வருவேன் என்று சாமி நித்யானந்தா உறுதிபடக் கூறினார்; ஆனால் அவ்வ று வரவேயில்லை - மாய மாக மறைந்துவிட்டார்!)

நான் கோயில்களுக்கெல்லாம் அதிகமாகப் போவதில்லை. கடந்த முறை அமெரிக்க நாட்டின் சீட்டிலுக்கு நாங்கள் சென்றிருந்தபோது உங்களின் பிறந்த-நாளன்று, கடவுளின் ஆசி பெற ஒரு கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று என் மனைவி கல்யாணி கூறினார். 2009 ஆகஸ்ட் 27 தேதி எனது 70 ஆவது பிறந்த நாள்.

சீட்டில் நகரத்து நித்யானந்தசாமி வேதகோயில்

போயிங் விமான நகரமாக சீட்டில் நகரின் ரெட்மாண்ட் பகுதியில் உள்ள நித்யானந்தா வேத கோயில்தான் அருகில் உள்ள கோயில் என்று எனது மருமகள் மஞ்சுளா கூறினார். இந்தப் பெயரை அப்போதுதான் முதன் முதலாக நான் கேட்-டேன். கிர்க்லேண்டில் வசிக்கும் எங்-களது இளைய மகன் கவுரங்கும், மரு-மகள் மஞ்சுளாவும் மாலை 6 மணிக்குப் பிறகு அவர்களது டயோடா பியரிஸ் காரில் எங்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்திருந்த எங்களது மூத்த மகன் கவுரவ்கும் சேர்ந்து கொண்டார். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்தக் காரை வாங்கியிருந்த கவுரங், தான் ஒரு நாத்திகன் என்றும், கவுரவ் கோயில்களுக்கும் திருவிழாக்-களுக்கும் அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு அயிட்டங்களுக்காகத்தான் செல்கிறார் என்றும் கூறினார்.

நித்யானந்த வேதக் கோயிலின் வாசலில் இருந்த உயரமான பெண் தொண்டர் ஒருவர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வாழ்க்கைக்கு வேதப் பேரறிவைக் கொண்டு வரும் நோக்கத்தில் நித்யானந்த பரமஹம்சர் கட்டியுள்ள நான்கு கோயில்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் பெங்களூரு-வைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன், தானும் பெங்களூருவுக்கு அருகில் பிடாடியில் உள்ள ஆசிரமத்தில் சில வார காலம் தங்கிவிட்டு இப்-போதுதான் திரும்பியிருப்பதாக அப்பெண் தொண்டர் கூறினார்.

புன்னகையுடன் கூடிய இளைஞரான நித்யானந்த சாமியின் புகைப்படம் வருபவர்களை வரவேற்பது போல் தோற்றமளித்தது. அவரது சிறிய உடலுக்கு அவர் அணிந்திருந்த காவித் தலைப்-பாகை பொருத்தமில்லாதது போலத் தோன்றியது. தரைதளத்தில் ஆசிரமம் அமைந்திருந்த அந்தக் கட்டடம் நகரின் மிகவும் முக்கியமான வணிக வளாகப் பகுதியில் அமைந்திருந்தது. நித்யானந்தா வேத மய்யம் என்ற பெயர்ப்பலகை தனது செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதாக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்-தது. முன்னதாக இருந்த வரவேற்பறையை அடுத்து உள்ளே சற்று பெரிய அறை ஒன்று இருந்தது.

கோயிலின் கருவறைக்குச் செல்லும் வழியில் இருந்த ஹால் பெரியதாக இருந்தது. அழகான, நல்ல நிறம் கொண்ட ஒரு பூசாரி, வழிபாடு சடங்குகளைச் செய்து கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு வயதில் இளைய பயிற்சித் தொண்-டர்கள் உதவி செய்து கொண்டிருந்-தனர். ஊதுவத்தி எரியும் வாசம் வந்து கொண்டிருக்க, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தீர்த்தமும், குங்குமமும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்களில் சில அயல்நாட்டினரும் இருந்தனர். வெளியே வரும் வழியில் இருந்த சிறு அறை ஒன்றில் இலை-களால் ஆன கோப்பைகளில் பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவு நன்கொடை 1 டாலர் என்று பெயர்ப்பலகை தெரிவித்தது.

சோதனை செய்து வெற்றி கண்ட ஆன்மீக வியாபாரம்

சில வார காலத்தில் சுவாமிஜி வர இருக்கும்போது நடத்தப்பட இருக்கும் பயிற்சி முகாமுக்கு ஆள்களை சேர்ப்பதில் தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள் மும்முரமாக இருந்தனர். தங்குமிடம், உணவு உள்-ளிட்ட இந்த முகாமுக்கான நன்-கொடைக் கட்டணம் 6,000 டாலர்கள். மற்ற ஆன்மிகத் தலைவர்களால் சோதனை செய்து வெற்றி பெற்ற ஆன்மிக வியாபாரம் இது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரது ஆசிகளையும், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று கோரியும் வரும் இமெயில் கடிதங்-களைக் கையாளக்கூட இயலாத அளவுக்கு அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் கூட்டம் பெருகியது. தனது ஆசிகளைக் கோரும் இத்த-கைய தொண்டர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 வரை வரதமூர்த்-தியைத் தொழ வேண்டும் என்று ஆலோசனை கூறி சாமிகள் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த பின் நாங்கள் வெளி-யேறினோம்.

நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய பின் சிறிது காலம் சென்றபின், தனது நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர்-போன ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஒருவரைப் பார்த்து, சாமி நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்-பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பிடாடி அருகே உள்ள அவரது ஆசிரமத்-திற்கும் நான் சென்றிருக்கிறேன். நான் சென்றிருந்தபோது அவர் அங்கிருக்கவில்லை; ஆனால் விருந்தோம்பல் நன்றாகவே இருந்தது என்று கூறிய அவர், பாமர மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

கள்ளக் காதல் மட்டுமா?
கள்ள நோட்டுகளுமா?

சாமி நித்யானந்தாவுடன் தமிழ் சினிமா நடிகை ஒருவர் சல்லாபம் செய்த வீடியோ காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது இது. யூடியூப் மற்றும் கூகுல் ஆகிய-வற்றின் மூலம் அவருக்குக் கிடைத்த விளம்பரத்தைவிட மிகப் பெரிய விளம்பரம் இந்த தொலைக் காட்சி ஒளிபரப்பின் மூலம் நித்யானந்தா-வுக்குக் கிடைத்தது. பாலியல் திறமை மட்டுமல்லாமல், கள்ள நோட்டு அடிக்கும் திறமையும் அவருக்கு இருக்-கிறது என்று பேசப்படுவதற்குக் காரணமாக, அவரிடமிருந்து பணத்-தைத் திருடிக் கொண்டு போன ஒருவனிடம் இருந்த அந்தப் பணம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது அமைந்தது.

தற்போது நடைபெறும் கும்ப-மேளாவிற்குப் பிறகு மார்ச் 18 ஆம் தேதிதான் பிடாடி ஆசிரமத்திற்குக் கட்டாயமாக வருவேன் என்று உறுதிபடக்கூறிய நித்யானந்தா அவ்வாறு வரவில்லை என்பதுடன் மாயமாக மறைந்துவிட்டார். கற்பழிப்பு, முறையற்ற பாலியல் உறவு போன்ற ஏழு குற்றச்சாற்றுகள் அவர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்-பட்டுள்ளன. அவரது பக்தர்களும் மற்ற பொதுமக்களும் அவரது வருகைக்-காகக் காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம் சாமியார்களுக்-குக் கெட்ட காலம்தான். ஒன்று வானத்து நட்சத்திரச் சேர்க்கை-களாலோ, அல்லது திரை நட்சத்திரச் சேர்க்கைகளாலோ அவர்களுக்குக் கெட்ட பெயர்தான்.

விபசார தரகர் டில்லி திவேதி சாமியார்

அதிகம் படிக்கவே செய்யாத 39 வயது திவிவேதி டில்லியில் செக்யூரிடி பாதுகாவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மசாஜ் பார்லர் பணியாளராக மாறினார். சதைத் தொழில் நடத்தியதற்காகவும், திருட்டுக் குற்றத்துக்காகவும் பல முறை கைது செய்யப்பட்ட இவர் தன்னைத்தானே சந்த் சாமி பீமானந்த்ஜீ மகராஜ் சித்ர-கூட்வேல் என்று அழைத்துக் கொண்-டார். உயர்ரக விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த அவரது ஆசிர-மத்தில் இல்லாமல், இப்போது அவர் சிறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆளுக்குத் தகுந்தபடி ஒழுக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் உடுப்பி மடம்

இது போன்று எவரோ ஒருவரை வைத்துக் கொண்டு மொத்த ஆன்மிக பெருமக்களையும் குறைகூறக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் இது தவறான கருத்தாகும். மிகவும் தொன்மை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாகக் கருதப்படுவதுமான மாத்வ பிரிவைச் சேர்ந்த உடுபி ஷிரூர் சாமி லட்சுமிவார தீர்த்த மடத்துக்கு மூன்றாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரய சாமிக்கு 15 ஆண்டு காலமாக ஒரு பெண்-ணுடன் பாலியல் தொடர்பு உள்ளது என்று தெரிந்த பிறகும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்றால் என்னவென்று சொல்வது?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடத்து தலைவராக தேர்ந்-தெடுக்கப்பட்ட ஒருவர் கடல் கடந்து பயணம் செய்தவர் என்ற ஒரே கார-ணத்துக்காக கிரஷ்ண விக்ரகத்தைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு, தனது பக்தர் ஒருவரின் மகளின் மீது தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரை மணந்து கொள்ள இருப்பதாகவும் வித்யா பூஷண சாமி கூறியபோது, அவ-ருக்கு எதிராக மாதவ மடம் திரண்டு எழுந்தது. அவர் தனது துறவைக் கைவிட்டு-விட்டார் என்ற போதும், அவரது நேர்மைக்காகப் பாராட்டப்-பட்டார். அவரது பஜனைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்தது; அவரது நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் பெரும் அளவில் விற்பனை ஆயின.

பெண் துறவிகளை கருவுறச் செய்த ஜைனத்துறவி

யார் அதிக அளவு எண்ணிக்கையி-லான பக்தைகளைக் கெடுத்தது என்பதில் ஜெய்பூரில் இருந்த இரு ஜைன முனிவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதுபற்றி பக்தர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, ஒரு முனிவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு இடத்தில் இருந்த மற்றொருவர் புலியை-யும் சைவமாக வளர்க்க முடியும் என்று சொல்லி வந்தவர். இந்த முனிவர், இரண்டு பெண் ஜைனத் துறவிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தார். பல முறை அவர்-கள் கருவுற்று, பின்னர் அவரால் கருக்-கலைப்பு செய்யப்பட்டவர்கள். இந்-நிகழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கூச்சலும், எதிர்ப்பும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்து வெளியேற்றுவது என்பது இல்லாமல், பணபலத்தினால் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரமே மூடி மறைக்-கப்பட்டு புதைக்கப்பட்டது.

பாதிரியாரின் ஒழுக்கக் கேட்டை பார்த்ததால் கொலை செய்யப்பட்ட பெண்

அதனைஅடுத்து, கேரளாவில் பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்ட கிறித்-தவ அமைப்பைச் சார்ந்த கன்னியாஸ்திரீ ஒருவரும் ஓர் ஆணும் கொலை செய்-யப்பட்ட வழக்கு ஒன்று எழுந்தது. பாலியல் உறவு கொண்டிருந்ததைக் கண்-டதுதான் கொலையுண்ட பெண் செய்த குற்றம். இந்த வழக்கை மூடி முறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்தியப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவரின் தீவிர விசாரணையில் முழு உண்மையும் வெளிவந்தது.

வெளிச்சத்துக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று என்றால், வெளியே வராதவை நூறு இருக்கின்றன

வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு வெட்கப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று என்றால், இது போன்ற செய்தி வெளி-வராத நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்கும்போது மக்கள் கூட்டம் ஏன் சாமியார்களையும், சாமி-யாரிணிகளையும் தேடிச் செல்கிறது? ஆன்மிக ஆறுதலைத் தேடிச் செல்-கிறோம் என்று அவர்கள் கூறுவதே ஒரு ஏமாற்றுவேலை. தங்களின் உண்மை-யான அல்லது கற்பனையிலான பிரச்-சினைகள் இது போன்ற சாமியார்களின் பக்கத்தில் இருந்தால் தீர்ந்துவிடும் என்று இந்தப் பக்தர்கள் (இவர்களும் சில-நேரங்களில் கயவர்களே) கருதுவதுதான் உண்மையான காரணமாக இருக்கக்-கூடும்.

நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 29.3.2010

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

விடுதலை

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகையுடன் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் தலைமறைவாகி உள்ள நித்யானந்தா, பிடதியில் உள்ள ‘தியான பீடம்’ ஆசிரமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு புறநகர்ப் பகுதியான பிடதியில் உள்ள ‘தியான பீடம்’ என்ற ஆசிரமம்தான் உலகம் முழுவதிலும் உள்ள நிதியானந்தாவின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை பீடமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆசிரமத்தின் தலைவர் பதவியில் இருந்தும், அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நிதியானந்தா அறிவித்ததாக நேற்றிரவு தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 28 மார்ச், 2010

கதவைத் சாத்து…… கழுதை போகட்டும.


வாடிக்கையாளர் : ஏங்க “சாமி பீடி” இருக்கா?

கடைக்காரர் : “சாமி பீடி” இல்ல…. வேணும்ன்னா “சாமி சி.டி.” இருக்கு….

தரட்டுமா?




ஏதாவது ஒரு டுபாக்கூர் காரணத்தைச் சொல்லி இந்த வாரமும் எழுதுவதற்கு ”ஜூட்” விட்டு விடலாம் என்று பார்த்தால் பரமஹம்ச நித்யானந்தர் படு வேகமாக ”செயல்பட்டு” நம்மையும் செயல்பட வைத்து விட்டார்.

அடச்சே….. எழுதவைத்து விட்டார்.

“மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாயில்லை” என்று மாமேதை மாவோ சொன்னது இத்தகைய ”புண்ணியவான்களை” நினைத்துத்தான் போலிருக்கிறது.

சூரியன் சாய்ந்ததில் இருந்தே ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்…. ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்.கள் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லி.

சரி எப்படியாவது பார்த்துத் தொலைப்போம் என்று அடித்துப் பிடித்துச் சென்று தொலைக்காட்சியைப் பார்த்தால் அதில் ஸ்வாமி நித்யானந்தர் ஏதோ ஒரு நடிகைக்கு அந்தரங்கமாய் அருளாசி வழங்கிக் கொண்டிருந்த காட்சி அமோகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பார்க்கப் பார்க்க தமிழகத்தில் பக்தி மார்க்கம் கட்டிலில் கால் பரப்பிக் கிடப்பது பட்டென்று புரிந்தது.


அன்று கொலை வழக்கில் ஒரு ஜெயேந்திரர்.

நேற்று கருவறை லீலைகளில் தேவநாத குருக்கள்.

இன்று காற்றாய் வரும் நடிகைகளுக்காக கதவைத் திறந்து வைத்திருக்கும் ஒரு நித்யானந்தர்.

பேஷ்……. பேஷ்…… ரொம்ப நன்னாயிருக்கு.

இப்போதெல்லாம் பெண்களில் பாதிப்பேர் வீட்டிலேயே கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். இந்த சாமியார்கள் புராணம் இதே மாதிரி தொடர்ந்தால் நாளை ஆண்கள் கதியும் அதோகதி ஆகிவிடக் கூடிய வாய்ப்புகள் அநேகம் இருக்கிறது.

மாதம் ஒரு சாமியாரோ…… ஒரு பாதிரியாரோ….. இப்படி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.

போன ஆட்சியில் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சியில் அந்த ஆசாமிக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு.

இப்போதிருக்கிற ஆட்சி காலத்தில் ஒருவர் கம்பி எண்ண அனுப்பி வைக்கப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சிக் காலத்தில் அதே ஜென்மத்துக்கு ராஜமரியாதை.

இதை மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிறவர்கள் கடவுளின் ஏஜெண்ட்டுகளும்…… அரசியல் ஏஜெண்ட்டுகளும்தான்.

ஆனால்……

அரளியைச் சாப்பிடு ஆஸ்த்துமா போகட்டும்……..

கடப்பாரையைக் கடி கண்ணு தெரியட்டும்……….

என்று அட்வைஸ் மழையை அள்ளிவிட்ட இந்த நித்யானந்தனோ மற்றவர்கள் மாதிரி இல்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அவரே எழுதுவாரா இப்படி?

“ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை.

வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது. உயிர் போன்றது.

இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம். ஆசையை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம்.

எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்தவுடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.” என்று பொட்டில் அடித்த மாதிரி அவரே ஒரு வார இதழில் எழுதியிருக்கிறார்.

ஆக……

பரமஹம்ஸ நித்யானந்தர் தான் ஒரு எருமை மாடு இல்லை என்று நிரூபிப்பதற்காகப் படுக்கையில் புரண்டதற்குபோய் இப்படியா பிராணனை வாங்குவது.?

”எருமை மாட்டுக்கு ஆசைகள் இல்லையென்று சொன்னது எருமை மாடுகளை அவமதிக்கும் செயல்” என்று புளூகிராஸ் நண்பர்கள் அவர் மீது வழக்கோ……..

அல்லது…….

”அவரைச் சுற்றியுள்ள எருமைகளுக்கும் மரபணு சோதனைகள் நடத்தி ’எருமைகள் அவரால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை’ என்று.டாக்டர்கள் சர்டிபிகேட் தந்தால்தான் அவரை வெளியே விடுவோம்” என்று நாளை எவரும் போராட்டமோ……. நடத்தாமல் இருக்க…..

தூணிலும் இருக்கும்…….

நடிகையின் துகிலிலும் இருக்கும்………

அந்த ஆண்டவன் அருள் புரியக்கடவாராக.

கதவைச் சாத்து கழுதை போகட்டும்.




**********


மத்திய அரசு இந்தியாவில் இன்னமும் பண்டமாற்று முறைதான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்கிறார்கள் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும்.

என்னவோ ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மக்கள் அரிசியைக் கொடுத்து கோதுமையை வாங்கிக் கொள்வதைப் போலவும்….. காய்கறிகளைக் கொடுத்து உப்பும்,சக்கரையையும் பரிமாறிக் கொள்வதைப் போலவும் பினாத்துகிறார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்பட்டால்தான் பரிவர்த்தனையே நடக்கும். அப்படிப் பயணப்பட வேண்டுமென்றால் லாரிகளில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓட்டமுடியாது. அப்படிப்பட்ட மகத்தான தொழில் நுட்பத்தையும் இந்த மேதைகள் நமக்குக் கண்டுபிடித்துத் தரவில்லை.

அப்படியிருக்கையில் டீசல் விலை உயர்ந்தால் லாரி வாடகை உயரும்….. லாரி வாடகை உயர்ந்தால்…. அதில் பயணப்படும் கட்டுமானப் பொருட்கள் தொடங்கி உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் வரைக்கும் அத்தனை பொருட்களது விலையும் கட்டாயம் உயரும் என்பது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் பையனுக்குக் கூடத் தெரியும் ஆனால் உலக வங்கியிலேயே குப்பை கொட்டிய இந்த ”மகாமேதை” மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?

இந்த லட்சணத்தில்…..

“2011 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும்……

அதைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தை எட்டும்…….

18 சதவீதத்தை எட்டியுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு அப்படியே தொபுக்கடீர்ன்னு குறையும்…….

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்தை அதிக அளவுக்கு அதிகரிக்காது…….

ஒட்டுமொத்தமாக 0.4 சதவீதம்தான் பணவீக்கம் இருக்கும்….” என்று ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள்.

”கேட்கிறவன் காங்கிரஸ்காரன்னா….மன்மோகன்சிங்கே மார்க்சீயவாதி”ம்பாங்க போலிருக்கு.

இதில் திருணாமூல் ஒரு ஆர்ப்பாட்டம்……..

வழக்கம்போல் கலைஞர் புறாக் காலில் கட்டிவிட்ட ஒரு கடுதாசி…… என ஜமாய்க்கிறார்கள்.

”தோழமைக் கட்சிகளை எப்படி சரிக்கட்டுவதென்று எங்களுக்குத் தெரியும்.” என்று ஏற்கெனவே ஈழப்பிரச்சனையில் சரிக்கட்டிய அனுபவத்தில் பட்டாசு கிளப்புகிறார் பிரணாப்.

விலைவாசியைக் குறைக்க கொடநாட்டில் முகாமிட்டிருக்கிற புர்ச்சித்தலைவியோ அடுத்த தேர்தல் கூட்டை மனதில் வைத்தபடி ‘பாம்பும் சாகாமல்….. தடியும் உடையாமல்’ அறிக்கை விடுகிறார்.

அதே கணக்கில் இருக்கும் விஜயகாந்த் “மாநில அரசு நினைத்தால் குறைக்கலாம்” என்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோருமே ஒரே கட்சிதான் போலிருக்கிறது. ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு காலம் தள்ளப் போகிற மக்கள் மட்டும்தான் எதிர்க்கட்சி.

மொத்தத்தில்……..

பொருளாதாரமும் சரியாகப் போவதில்லை…….

விக்கிற விலையில் இருக்கிற தாரமும் தாக்குப் பிடிக்கப் போவதில்லை…….

இப்படி ஒத்தை ஆளா காலம் தள்ளுவதற்கு பதிலாக பேசாமல் சுவாமி பாமரானந்தான்னு பேரை மாத்திகிட்டு ஒரு ஆசிரமம் போட்டறதுதான் சரி போலிருக்கிறது.

அப்புறம் என்ன…..

காசுக்குக் காசுமாச்சு.

———– ———–ஆச்சு.
http://pamaran.wordpress.com/

பெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….


”ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்” படத்திற்காகக் கொடுத்த பேட்டி ஜெயராமை சோக ஹஸ்பெண்ட் ஆக்கி விட்டது.

”மலையாளப் படத்தில் வருவது போல நீங்கள் நிஜத்திலும் உங்கள் வீட்டு வேலைக்காரியை “சைட்” அடித்திருக்கிறீர்களா?” என்கிற இந்த நூற்றாண்டின் அதி அத்தியாவசியமான அறிவுபூர்வமான கேள்வியை கேட்டதற்கு பதில் சொல்லப் போய்தான் எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறார் ஜெயராம்.

முதலில் இப்படிப்பட்ட கேள்வி கேட்டவரைத்தான் காலில் இருப்பதைக் கழட்டி “கவனித்திருக்க” வேண்டும். ஆனால் தான் ஏற்கெனவே நடித்திருந்த படத்தின் லட்சணமும், அதற்காக கல்லாவில் போட்டுக் கொண்ட காசும் “கண்ணியவானை” அப்படிச் செய்ய விடுமா?

ஒரு அயோக்கியத்தனமான கேள்விக்கு மற்றொரு அயோக்கியத்தனமான பதிலை சொல்லப்போய் “சகல மரியாதையும்” கிடைத்திருக்கிறது நடிகருக்கு.

அப்புறம் என்ன?

“நான் அக்மார்க் தமிழன்.”

“கும்பகோணத்துத் தமிழன்”

“அய்யோ நான் ஒரிஜினல் தமிழனுங்கோ” எனக் கூப்பாடு மேல் கூப்பாடு போட்டு கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்.

”ஒரு தமிழச்சியை கறுத்த தடித்த மாடு என்று கொச்சைப்படுத்தலாமா? என்பதுதான் இப்போது பலரின் முன்பாகவும் உள்ள கோபம் கொப்பளிக்கும் கேள்வி.

ஆனால் நமது கேள்வியும்…… கோபமும் வேறுவகையானவை.

அது தமிழச்சியாக இருக்கட்டும். அல்லது தெலுங்கச்சியாக இருக்கட்டும். ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்காக வீட்டு வேலைக்கு செல்கின்ற பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பதும்…… அவர்களையெல்லாம் பிஸ்கெட் போட்டால் வாலைக் குழைக்கும் தங்கள் வீட்டு நாயாக கருதுவதும்…… இவர்கள் “சைட்” அடித்தால் உடனே மசிந்துவிடுவார்கள் எனக் கீழ்த்தரமாகக் கற்பனை செய்து கொள்வதும்….. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா என்பதுதான்.

வீட்டு வேலைகளுக்காக செல்லும் பணிப்பெண்களுக்கும் ஒரு துணைவர் இருப்பார் என்பதோ……

அவர்களுக்கும் தங்களைப் போலவே பள்ளிக்குச் செல்லும் மழலைகள் இருக்கும் என்பதையோ…….

காசில்லாவிட்டாலும் கண்ணியமும் சுயமரியாதையும்தான் அவர்களது சொத்து என்பதையோ இந்த அறிவிலிகள் எப்போது உணரப்போகிறார்கள்?

இப்படிக் கேள்வி கேட்கும் ஜென்மங்களுக்கும்…… அதற்கு பல்லை இளித்துக் கொண்டு பதில் சொல்லும் ஜென்மங்களுக்கும்…. தங்களது தாயோ…. தங்கையோ……. அல்லது துணைவியோ…… பல வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து, கண்ட நாய்களது காமப்பார்வைகளுக்குத் தப்பித்து வீடு வந்து சேர்ந்து பசியாற்றி இருந்தால் புரிந்திருக்கும் அந்த வலி.

ஆனால் அவர்கள்தான் வானத்தில் இருந்து வந்து குதித்தவர்களாயிற்றே…. எப்படித் தெரியும் அந்தத் துயர்?

சினிமா மட்டுமில்லை. இந்த கேடு கெட்ட செயலை தமிழகத்தில் உள்ள பல பத்திரிகைகளும் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் “ஜோக்” என்ற பெயரில்.

இன்றல்ல ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்னரே ”பெண்மணி” என்கிற இதழில் “யாருக்கும் வெட்கமில்லை” என்கிற தலைப்பில் இத்தகைய இழிசெயல்களை எதிர்த்து மிகக் கடுமையாக எழுதியிருக்கிறேன். என்ன எழுதி என்ன பயன்? அவரவர்களுக்குப் புரியும் மொழியில் பேசினால்தான் புரியும் போலிருக்கிறது.

வீட்டுப் பணிப்பெண்கள் என்றில்லை………

நர்சுகள்…….

அலுவலக ஸ்டெனோக்கள்…… எனப் பலரையும் நமது ஊடகங்கள் இன்றுவரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

நம்மில் சரிபாதியாய் இருக்கின்ற பெண் இனம்

கல்வி மறுக்கப்பட்டு…..

வேலை மறுக்கப்பட்டு……

மறுமணம் மறுக்கப்பட்டு……

ஜாக்கெட் அணிவது கூட இந்த நூற்றாண்டின் ஆரம்பக் காலம் வரை மறுக்கப்பட்டு…….

தேவரடியார்களாக கோயில்களில் பொட்டுக்கட்டப்பட்டு……….

செத்த கணவனோடு சதியேற்றப்பட்டு…….. என சகிக்கவியலாத சுமைகளைச் சுமந்தே வந்திருக்கிறது.

சமூக மாற்றத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர்களின் வரவால் இன்றுதான் கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது அந்த இனம், ஆனாலும் நவநாகரீகப் போர்வையோடு நயவஞ்சகத்தையே ஊட்டுகின்றன நமது தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும். அதுவும் நகைச்சுவை என்கிற பெயரில்.

எனக்குத் தெரிந்து பெரும்பாலான மலையாளப் படங்கள் தமிழர்களை கேணையர்களாகவே சித்தரிக்கின்றன. வில்லன்களாகவும்……. கையாலாகாதவர்களாகவும்……….. “பாண்டி” என்றும் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லை. அதைப்போலவே தமிழ்ப்படங்களும் கேரளப் பெண்களை கொச்சைப்படுத்தும் கதாபாத்திரங்களாகவே உலாவருகின்றன.

இத்தகைய முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இருதரப்பும்.

பெண் இனத்தை கொச்சைப்படுத்துபவர்கள் வரிசையில் ஊடகங்களுக்குத்தான் பங்குண்டு என்றில்லை. மெத்தப் படித்த மேதாவிகளுக்கும் உண்டு பங்கு.

சிலி நாட்டை சேர்ந்த கவிஞர் பாப்லோ நெரூடா 1929 இல் கொழும்பு நகரில் தங்கியிருந்தபோது ”ஒரு ………… இன பணிப்பெண்ணுடன் உறவு கொண்டேன்” என எழுதியதை மறுத்து ”அந்த பணிப்பெண் நிச்சயம் இந்த சாதி கிடையாது(அதாவது இவரது சாதி). அப்பெண் நிச்சயம்………….சாதிப் பெண் ஆகத்தான் இருக்க முடியும்.”என்று பொங்கியெழுந்து எழுதியவர் இன்றைக்கும் சட்டமன்ற உறுப்பினராகத்தான் இருக்கிறார்.

ஆனால் உண்மையில் வஞ்சிக்கப்படும் பெண் இனத்துக்கு சாதி கிடையாது….. மதம் கிடையாது…. உட்பிரிவுகள் கிடையாது…… பூகோள எல்லைகள் கிடையாது. அத்தகைய கேடுகெட்டதனங்கள் எல்லாம் ஆண் இனத்துக்கே சொந்தமானவை.

ஆக……..

உளறிக்கொட்டியதற்காக நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்கவேண்டியது தமிழினத்தை நோக்கி மட்டுமல்ல.

உழைப்பை உன்னதமாக நேசிக்கும் பெண்ணினம் எங்கெங்கெல்லாம் உள்ளதுவோ அந்தத் திசையெல்லாம் நோக்கி குவியட்டும் அவரது கரங்கள்.
http://pamaran.wordpress.com/

நாமே முத்துக்குமாரைக் கொன்றவர்கள்….


இரவு முழுக்க உறக்கமேயில்லை.

அரைத்தூக்கத்தில்……

துண்டு துண்டாய் வந்து போன கனவில்…..

விழிப்பில்…..

என எங்கும் முத்துக்குமாரே வந்து போனான்.

கடந்த 29 ஆம் தேதி வெள்ளியன்று காலையும் இப்படித்தான்.

மணி ஏழு : எழுந்தவுடனேயே ‘கடந்த வருடம் தம்பி முத்துக்குமார் இதே நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பான்? தனது இறுதி அறிக்கையை அடித்து முடித்திருப்பானோ…..?

மணி ஒன்பது: கொளத்தூரில் கையில் கேனுடன் பேருந்துக்காக காத்துக் கொண்டிருப்பானோ? இல்லை வழக்கம்போல் கையில் காசில்லாமல் சாஸ்திரி பவனை நோக்கி நடக்கத் துவங்கியிருப்பானோ……?

மணி பத்து: சாஸ்திரி பவன் வளாகத்துக்குள் கால் பதித்திருப்பான்.

மணி 10.15 : பாஸ்போர்ட் வாங்க வந்தவர்கள்….. அலுவலக ஊழியர்கள்….. வளாகத்துக்கு வெளியே தேநீர் ஆற்றிக்கொண்டிருக்கும் கடைக்காரர்கள்…… என அனைவர் மீதும் தீர்க்கமாக ஒரு பார்வையை இந்நேரம் படரவிட்டிருப்பான்.

மணி 10.30 : தன்னைத் தீயில் குளிப்பாட்டிக் கொள்வதற்காக கொண்டு வந்திருந்த கேனின் மூடியை நிதானமாக அறுக்கத் தொடங்கியிருப்பான் தம்பி.

மணி 10.40 : உலகை இன்னும் சில மணி நேரங்களில் உலுக்கப்போகும் அந்த அறிக்கையை சலனமின்றி விநியோகிக்கத் தொடங்கியிருப்பான்…….

“ஏங்க என்னங்க ஆச்சு உங்களுக்கு” என்றார் எதிரேயிருந்த என் துணைவி.

“ஒண்ணும் இல்லம்மா…… தம்பி முத்துக்குமார் ஞாபகம் வந்துருச்சு.” என்றபடி அழத் துவங்கினேன் நான்.

இதோ….. இப்போதும் என்னெதிரே அந்த அறிக்கை.

உலகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மானிடரையும் நோக்கி ”உங்கள் மெளனம் நியாயமா?” எனக் கெஞ்சும் அந்த அறிக்கை.

மனித உரிமைகளை சுவாசிக்கும் ஒவ்வொரு செயற்பாட்டாளரையும் “ஈழத்தின் துயருக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?” என கண்ணியமாக வினவும் அந்த அறிக்கை.

இன்னும் சில மணி நேரங்களில் தன் உடலைக் கூறுபோடப் போகும் மருத்துவ நண்பர்களின் மனதுடன் கூட நெருக்கமாக நின்று அறிவுறுத்தும் அந்த அறிக்கை.

காவல்துறையினரைக் கூட பலங்களை உணர்ந்து பலவீனங்களைக் களைந்து கொண்டால் மக்களிடம் எப்படி மகத்தான மதிப்பினைப் பெற முடியும் என நாகரீகத்தில் தோய்த்தெடுத்த வார்த்தைகளால் நிரப்பப்பட்ட அந்த அறிக்கை.

வழக்குரைஞர்களது வீதிக்கு வந்து போராடும் குணத்தையும், அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியதன் அவசியத்தையும் பகிர்ந்து கொண்ட பண்புமிக்க அறிக்கை.

ஆனால்….. அந்த அறிக்கையை இன்னுமொருமுறை படிக்கும் திராணி இல்லை எனக்கு. தம்பி முத்துக்குமாரின் மூச்சு அடங்கிய பின்னர் வந்த மூன்று நாட்களும் நம்மை மூச்சுத் திணற வைத்த நாட்கள்.

”எனது உடலை துருப்புச் சீட்டாக வைத்திருந்து எழுச்சியை உருவாக்குங்கள்.” என்கிற வரிகளின் வலி உணராமல்…… அல்லது ”உணர்ந்து”….. ”உடனே புதைத்துவிட வேண்டும்.” எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள் யார் யார்?

நாம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் அறிவாலயத்தையோ…… போயஸ்தோட்டத்தையோ புண்படுத்தி விடக் கூடாது என ஆலோசனைகளில் ஆழ்ந்தவர்கள் யார் யார்?

தம்பி முத்துக்குமார் ஏற்றுக் கொண்ட ஈழத்தையோ….. அதற்காக அவன் நேசித்த தலைமையையோ அணுவளவும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் முத்துக்குமாரின் உடலைச் சுற்றி கொளத்தூரில் மீன் பிடிக்கக் காத்திருந்தவர்கள் யார் யார்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்குள்.

அவர்கள் கிடக்கட்டும். நான் மட்டும் என்ன வாழ்ந்தேன்? ஒவ்வொரு முறை முத்துக்குமாரின் படத்தைப் பார்க்கும்போதும்….. அவன் நினைவு வரும் போதும் கூனிக் குறுகிப் போகிறேன் நான்.

மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வியாபித்து நின்று கேலி செய்கிறான் அவன்.

என் இயலாமையைப் பார்த்து.

என் கையாலாகாத்தனங்களைப் பார்த்து.

எனது செயலின்மையைப் பார்த்து.

எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சில்லரைத்தனமான நடுத்தரவர்க்கத்து சமாளிப்புகளைப் பார்த்து.

எதுவுமே நடவாதது போல் இயல்பான வாழ்க்கைக்குள் ஒளிந்துகொள்ளத் துடிக்கும் எனது அற்பத்தனங்களைப் பார்த்து.

ஏளனமாய்ச் சிரிக்கிறான் அவன்.

எந்தத் தேர்தல் பாதை முத்துக்குமாரை சாஸ்திரி பவன் வரை துரத்தியதோ…… அதே தேர்தல் பாதைக்கு முத்துக்குமாரையும் இழுத்து வந்து மீண்டும் ஒரு முறை புதைத்தோம் நாம். இலைக்குள்ளும்…. சூரியனுக்குள்ளும்…… ஈழத்தின் சுதந்திரத்தைத் தேடினோம் நாம். தேர்தல் வரை சூடு கிளப்பியது கதிர் அரிவாள். பிணக்குவியல்களைக் கண்டும் வழக்கம்போல் வேடிக்கை பார்த்தது சுத்தியல் அரிவாள். இவர்களுக்கு மத்தியில் என்ன செய்ய முடியும் அர்ப்பணிப்பும் தீரமும் மிக்க இளைஞர்களால்?

ஆனாலும் இவ்வளவு இருட்டடிப்புகளுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கில் கூடி மறையாத முத்துக்குமாருக்காக நடுகல் நட்டிருக்கிறார்கள் திருநெல்வேலி இளைஞர்கள்.

எண்ணற்ற வழக்குரைஞர்கள் சேர்ந்து முத்துக்குமாரின் கனவை நனவாக்க உறுதி பூண்டிருக்கிறார்கள் மதுரையில்.

சென்னையிலும், கோவையிலும் பத்திரிகை உறவுகள் பலபேர் கூடி முத்துக்குமாரின் எண்ணங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இதில் விடுபட்ட ஊர்களும் பேர்களும் அநேகம். இவர்களே நமது நம்பிக்கைகள்.

அமைப்பிற்காகவோ….. ஆட்சிக்காகவோ……. கூட்டணி அதர்மங்களுக்காகவோ ஈழத்தை இரண்டாம்பட்சமாக்காத இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கைக் கீற்றினை நம்முள் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வேளையில் எனது நேசிப்பிற்குரிய கவிஞர் விக்கிரமாதித்தன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்னால்.

நீ

ஒத்துக்கொள்ளாமல் போகலாம்.


அதனால்

என்ன?


என் தோட்டத்தில்

சில சில பூக்கள்.


என் வானத்தில்

கொஞ்சம் கொஞ்சம் நட்சத்திரங்கள்


என் நதியில்

சிறிது நீரோட்டம்.


காத்திருக்கிறேன்

நான்.

இந்தக் கவித்துவமான வரிகள் தரும் நம்பிக்கையைப் போல தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள் நமக்குள் நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்கள்.

அது நிச்சயம் முளைவிட்டு கிளை பரப்பும்.

வயிற்றுவலிக்கான தீர்வுகூட

வாக்குச்சாவடிகளில்தான் இருக்கிறது

என்கிற மூடநம்பிக்கைகளுக்குள்

தம்மைப் புதைத்துக் கொள்ளாத இத்தகைய இளைஞர்கள்தான் நமக்கு

திசைமானிகள்.

அவர்களே நமது வழிகாட்டிகள்.
http://pamaran.wordpress.com/

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


கிருட்டினகிரி, மார்ச் 28_ கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலு-வலக வளாக சுற்றுச் சுவருக்கு அருகாமையில் தேசிய நெடுஞ்சாலைத்-துறைக்கு சொந்தமான மரங்கள் இருக்கின்றன. இதிலுள்ள கொன்றை (எ) (பட்டாகத்தி) மரத்தில் சென்ற 28.2.2010 ஞாயிற்-றுக்கிழமை அதிகாலை-யில் திடீரென (கடவுள்) அம்மன் தோன்றியுள்ள-தாக மூடநம்பிக்கை செய்-தியைப் பரப்பி வந்துள்ள-னர். தேசிய நெடுஞ்சா-லைத் துறை மூலம் இந்த மரத்திற்கு நெம்பர் எழுத வெட்டிவிடப்பட்ட அந்த பகுதி பட்டை வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காது, மூக்கு, கண், வாய் இவற்றை வைத்து ஒரு மந்திரவாதியை அழைத்து மஞ்சள், பொட்டு வைத்து மஞ்சள் சேலைகட்டி, மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட காட்டு-மிராண்டித் தனமான செய்தியை பரப்பி வருப-வர்கள் திம்மாபுரம் கிரா-மத்தை சேர்ந்த நடராசன் மனைவி லட்சுமி, வட்-டார வளர்ச்சி அலுவல-கத்தில் சிமென்ட் மூட்டை தூக்கும் அலுவலகத்தின் பின் பக்கம் குடியிருந்து வரும் சக்திவேல் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த மூடநம்பிக்கை செய்தியை பரப்பி உண்டியல் வசூல் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். லட்சுமி என்பவர் இந்த மரத்தின் அருகில் தேநீர்க் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலு-வ-லக சுற்று சுவருக்கு உள்ளே ஆவின் தேநீர் கடை வைத்துள்ளனர். இதனால் இந்த லட்சுமி-யின் தேநீர் கடை வியா-பாரம் குறைந்துவிட்டது. இதனால் பரப்பரப்பான இந்த மூடநம்பிக்கை ஏற்பாடு செய்து பரப்பி-யுள்ளனர். இச்செய்தியை அறிந்த மாவட்ட தி.க செயலாளர் கோ.திராவி-டமணி, ஒன்றிய செயலா-ளர் சி.சீனிவாசன் இரு-வரும் நேரில் சென்று பார்த்து இது மூடத்த-னமான மோசடி செய்தி என்று கூறி, 1.3.2010 அன்று கிருட்டினகிரி மாவட்ட ஆட்சியர் வே.க.-சண்முகம், தேசிய நெடுஞ்-சாலைத்துறை கோட்டப்-பொறியாளர், ஆகி-யோரை நேரில் சந்தித்து இது போன்ற பரப்பரப்பான மூடநம்பிக்கை செய்தியை பரப்பி மக்களை மூடத்-தனத்தில் ஆழ்த்துபவர்-கள் மீது உரிய நடவ-டிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டு உள்-ளனர்.

மாவட்ட ஆட்சியரும், கோட்டப்பொறியாளரும் உரிய நடவடிக்கை எடுப்-பதாக கூறியுள்-ளனர். உதவி கோட்டப் பொறி-யாளர் அந்த இடத்தில் எந்த வித கட்டடமோ, ஆக்கிர-மிப்போ வராத வகையில் நாங்கள் பார்த்-துக்கொள்-கிறோம் என்று உறுதி கூறியுள்ளார்.

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

சென்னை, மார்ச் 28_ மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்தரவாதமாகும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்கவேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மருத்துவரின் மருந்துச் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ளவர்கள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மய்யத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனைக்குட்டி வெளியே வந்தது

சர்ச்லைட்

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தி-யாவிற்குள் கொண்டுவர துடியாய்த் துடிக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற கல்வித் துறை.

அதற்குப் பல சப்பையான காரணங்களைச் சொன்னார்கள், சொல்லுகிறார்கள்!

அதில் முக்கியமானது, பல கோடி அந்நியச் செலாவணி நமது பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதை இதன்மூலம் தடுக்க உதவிடும்; ஏனெனில், வெளிநாடுகளுக்குச் செல்லும் பல மாணவ, மாணவிகள் இங்கேயே தங்கி, அப்பல்-கலைக் கழகங்கள் இங்கேயே வந்துவிடுவதால், இவைகளில் சேர்ந்து படிப்பார்கள் என்று கூறப்பட்டது.

அப்படி நடக்க அதிக வாய்ப்பே இல்லை என்று அந்த மசோதாவை தயாரித்ததாகச் சொல்லப்படும் திரு. எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் நேற்று நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏற்பாடு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடாது.

காரணம்,

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் இந்திய நாட்டு மாணவர்கள் இரு வகை:

1. வெளிநாட்டிற்குப் போய் அறிவைத் தேடுபவர்கள் ஒருவகை.

2. வெளிநாட்டிற்குக் குடிபெயர இந்தக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துவோர் மற்றொரு வகை.

அப்படிப்பட்ட இரண்டாம் வகையினர் வழக்கம்போல வெளிநாடுகளுக்கு, இங்கே அந்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வந்தாலும்கூட போகமாட்டார்கள் என்பது, மேற்சொன்ன நமது பணம் வெளிநாட்டிற்குப் போவது இதன்மூலம் தடுக்கப்படும் என்பது பொய்யான வாதமாகி விடுகிறதல்லவா?

இரண்டாவதாக, இந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் மிகவும் தரம் வாய்ந்ததாக உள்ள பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் தொடங்கப்படுவதால், தரமான உயர்கல்வியை (நம் நாட்டு புகழ் பெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பல்கலைக் கழகங்கள் தராத கல்வியை) அளிக்க முடியும் என்கிறார் நமது மத்திய கல்வி அமைச்சர்.

ஆனால், அதையும் போட்டு உடைத்து-விட்டார் இந்த கல்வி நிபுணர்.

ஹார்வர்டு போன்ற வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கே அமையப் போவதில்லை. வெளிநாடுகளில் உள்ள முதல் நிலைபிரபல பல்கலைக் கழகங்கள் எவையும் இங்கே வரப்போவதில்லை, வராது.

அடுத்த மட்டத்தில் உள்ளஇரண் டாம் படிநிலை, 3 ஆம் படிநிலைப் பல்-கலைக் கழகங்கள்தான் வரும் நிலை உள்ளது.

ஏன் வரும் தெரியுமா?

இவைகள் தங்களை உலக அளவில் விளம்பரப்படுத்திக் கொள்ளவே அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள, விளம்பரம் பெற, தரப் போட்டியில் ஈடுபடத்தான் வரும் என்று கூறப்படுகிறதே தவிர, நம் நாட்டு மாணவர்கள் தரத்தை உயர்த்த எவ்வளவு தூரம் பயன்படும் என்பது புரியாத புதிர்!

3. பின் ஏன் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களுக்கு வேகமான கதவு திறப்பு என்றால், இந்த மசோதாவின் கர்த்தாவின் கருத்து, பல பல்கலைக்-கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. மத்திய கல்வி அமைப்புகளுக்குத் தெரியவில்லையாம்? அதைத் தடுக்கத்தானாம்! என்னே விசித்திரவாதம்!

உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் வேரில் வெந்நீர் ஊற்றும் அரிய தொண்டு அல்லவா இது?

இந்த நிபுணர் கருத்தும், மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சரின் கருத்தும் முரண்-பாடுகள் நிறைந்தவையாக உள்ளதல்லவா?

கல்வியாளர்களே,

பெற்றோர்களே,

சிந்தியுங்கள்!
விடுதலை

அஞ்சா நெஞ்சன்


அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி கழகத்தில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்-களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பட்டம்.

முன்னாள் இராணுவ வீரரான அவர் தன்மான இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்-களின் படைவரிசையில் தன்னிகரில்லாச் சிப்பாய்.

அவர் மறைந்தபோது (28-3-1949) அவரைப் பற்றி தந்தை பெரியார் வெளிப்-படுத்திய கருத்துகள் - அஞ்சா நெஞ்சன் புகழ் உடலில் என்-றைக்குமே தங்கி ஒளி-விடும் பதக்கங்களாகும்.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளர். மக்களின், சிறப் பாக இளைஞரின் அபி மானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக் கென ஒரு காசும் சேர்த்துக் கொண்டவர் அல்லர். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை தனது பெரும் பணியாகக் கொண்டி ருந்தார்.

அவரைப் பல முறை கண்டித்திருக்கிறேன்; கோபித்திருக்கிறேன். அவர் முன்கோபி. ஆனால் என் னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண் டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் வருவது சகஜம். அதனால் அதில் அவருக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், தன் கருத் தையோ, கொள்கை யையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம் கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரி களை ஏமாற்றியிருப்பாரே யொழிய, அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவர் அல்லர்

நேற்று வரை கூறி வந்த கருத்துக்கு மாறுபாடான ஒரு கருத்தை எங்கோ ஒரு இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ் வித விளக்கமோ, சமா தானமோ எதிர்பார்க்காமல், அக்கருத்தைப் பின் பற்றியே தமது பிரச்சாரத்தை ஆரம் பித்து விடுவார் என்று தந்தை பெரி-யார், அழகிரி பற்றிக் கூறி-னார் என்றால், இது தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட கருத்தல்ல. ஒரு இயக்கம், தலைமை, பின்பற்றுவோர்க்கிடையே இருக்க வேண்டிய பாலத்-தின் இலக்கணம் இது.

தமிழர்களிடையே உள்ள பெருங்குறை - ஸ்தா-பன ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றிடப் பழகிடாத, பக்குவப்படாத குணமாகும்.

அழகிரி பற்றி அய்யா கூறிய இந்தக் கருத்தை தொண்டர்கள் வாசிப்பது மட்டுமல்ல. சுவாசிப்பதும் முக்கிய-மாகும். கலைஞருக்கு கழகத்தில் ஒரு முன்மாதிரி அஞ்சா நெஞ்சன் அழகி-ரியே! அவர் நினைவாகத்-தான் தன் மகனுக்கு அப்-பெயரைச் சூட்டினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா-வுக்கு நடிகவேள் என்ற பட்டம் அளித்ததும் அஞ்சா-நெஞ்சன் அழகிரியே!

அஞ்சாநெஞ்சன் மறைந்த நாளில் அவர் நிலைக்க வைத்துச் சென்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வோம்! வீறு நடை-போடுவோம்!!

வாழ்க பெரியார்! தொடர்க அழகிரியின்பாட்டை!!

- மயிலாடன்
விடுதலை

சனி, 27 மார்ச், 2010

ஒரு சுயமரியாதைக்காரரின் இறுதி விருப்பம்





புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், கவிநாடு மேலவட்டம் மாலையீடு மரகத இல்லம் 909, சண்முகாநகரில் வசிக்கும் மு.பொன்னையா மகன் பொன். கருப்பையா (வயது 63) ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆகிய நான், திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 28ஆம்நாள் (10.02.2010) அன்று முழுமனதுடன் எழுதி வைத்த விருப்ப மடல்.

இப்புவியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மற்ற உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் வாழ்ந்து மறைய வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு, எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக இயலாதோர்க்கு இயன்றதைச் செய்து வாழ்ந்து வருகிறேன்.

இறுகிக் கிடக்கும் பாறைச் சமுதாயத்தில் எறும்பாக ஊரி, சிறு தடத்தையாவது அமைக்க என்னை உருவாக்கிய என் பெற்றோருக்கும், கல்வியோடு கள அனுபவங்களையும் கற்றுத்தந்த அறிவியல் சமூக ஆசான்களுக்கும் நான் நன்றிக் கடனாற்ற வேண்டும்... நான் வாழ்ந்தபோது செய்த சிறுசிறு சேவைகள் காற்றில் கரைந்த கற்பூரமாகிப் போனதையும் நான் உணர்கிறேன். எனவே நான் இறந்த பிறகும் யாருக்காவது பயன்படத் தக்கவனாக விரும்புகிறேன்.

எதிர்பாராத விபத்து காரணமாக எனக்கு மூளைச்சாவு ஏற்படின், எனது உடலுறுப்புகளை, தேவைப்படுபவர்களுக்கு கொடையாக அளிக்க மனப்பூர்வமாக இம்மடல் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.

முதுமை அல்லது நோய்வாய்ப்பட்டு நான் இயற்கை மரணமடைந்தால், எனது இரு விழிகளும் பார்வையிழந்து தவிக்கும் இருவருக்குக் கண்தானம் செய்யப்பட வேண்டும். அதற்கான விழிக்கொடை விருப்ப மடலை புதுக்கோட்டை கண்ணப்பநாயனார் கண்தான அமைப்பிற்கு அளித்துள்ளேன்.

விழிகள் கொடையளிக்கப்பட்ட எனது உடலை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத் துவப் படிப்புக்குப் பயன்படத்தக்க வகையில் கொடையாக அளிக்க இதன்மூலம் நான் ஒப்புதல் அளிக்கிறேன்.

அதற்கான எனது ஒப்புதல் மடல் புதுக்கோட்டை சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மெய்யியல் துறைக்கு 27.01.2010 தேதியில் அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் 171. மேற்கண்ட உறுப்புகள் கொடை மற்றும் உடல் கொடையினை நிறை வேற்றுபவராக, எனது மனைவி யில்லாததால் எனது வாரிசுகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் எனது மூத்த மகன் க.மதிவாணனை நான் நியமித்துள்ளேன்...

எனது இறுதிக்காலம் வரை என்னை அனைத்து நிலையிலும் ஆதரித்து வந்துள்ள என் மகன் க.மதிவாணன் (தலைமை ஆசிரியர்) எனது இறப்பின் தன்மைக்கேற்ப எனது உறுப்புகளையோ உடலையோ உரிய வழிமுறைகளில் உரியவர்களிடம் கொடையாக அளிப்பார். இதில் குறுக்கீடு செய்ய வேறு எவருக்கும் எந்த வகையிலும் உரிமை கிடையாது.

அத்துடன் எனது சுயமரியாதைச் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நான் காலமான பின்னர் எனது உடலுக்கு எந்தவிதமான மத, ஜாதி, சமய சம்பிரதாயச் சடங்குகளும் நடத்தக்கூடாது. உறுப்புகளோ உடலோ ஒப்படைக்கும் முன், என்பால் உண்மையான அன்பு கொண்ட நட்பினர்க்கும் உறவுகளுக்கும் என் விருப்பம் அறிவிக் கப்பட்டு அவர்கள் அஞ்சலி மற்றும் ஒப்படை நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆவன செய்ய என் மகன் மதிவாணன் அறிவுறுத்தப் படுகிறார்.

இது எனது சுய சிந்தனையுடன் எழுதப்பட்ட விருப்ப மடல்.

அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ!


மின்சாரம்

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது ஒரு பழமொழி, இன்றைக்கு இந்தியன் வங்கியும் இந்த வகையில் பூணூல் கயிற்றில் மனு நீதிக் கொடியை ஏற்றி பார்! பார்!! எங்கள் பார்ப்பன தர்பாரைப் பார்! என்று பழிப்புக் காட்டுகிறது தமிழர்களைப் பார்த்து

கடந்த வாரத்தில் இரு தகவல்கள் வெளி-வந்துள்ளன. ஒரு சேதி இந்து ஏடு வெளியிட்ட-தாகும்.

Sankara Nethralaya Activities Hailed என்ற தலைப்பில்18.3.2010 அன்று வெளியானது.

The Bank donated Rs.1 crore to sankara Nethralaya for revamping infrastructure and introducing new services. இன்னொரு தகவல் தினமணியில் (18.3.2010) சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1 கோடி நிதியுதவி என்பது தான் இந்த இரண்-டாவது சேதியாகும்.

இந்தியன் வங்கியின் தலைவராக (Chairman) இருக்கும் எம்.எஸ். சுந்தர்ராஜன் என்ற பார்ப்பனர் இந்த நிறுவனங்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட இந்தியன் வங்கியின் பணத்திலிருந்து அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே! என்ற போக்கில் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ப்பனர்மீது சி.பி.அய். விசார-ணை-யெல்லாம் நடைபெற்றதுண்டு. எப்படியோ அவற்றிலிருந்து எல்லாம் தப்பித்து இந்தியன் வங்கியின் தலைவராகி, தங்கள் இனத்தைச் சேர்ந்த வாளுக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்.

இவ்வளவுக்கும் இந்தப் பார்ப்பனர் வரும் ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நம்ம-வாளுக்கு எதையாவது செய்து கொடுக்க வேண்-டும்-என்ற துரித வெறியில் ஈடுபட்டு இருப்ப-தாகத் தெரிகிறது.

சங்கரா நேத்திராலாயா நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எஸ். பத்ரிநாத் என்ப-வரும் ஆந்திராவைச் சேர்ந்த - _ சங்கர மடத்தின் அத்தியந்த சிஷ்யக் கோடி.

இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சங்கராச்சாரியார் தான் தலைமை விருந்தினர்.



அதேபோல காஞ்சி மடம் ஏனாத்தூரில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் பெயரில் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கும் கொலைக் குற்றத்தின்கீழ் திரிந்து கொண்-டிருக்கும். ஜெயேந்திர சரஸ்வதியிடம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இந்தியன் வங்கித் தலைவர் சுந்தர்ராஜன் கொடுத் துள்ளார்.

வங்கித் தலைவரான சுந்தர்ராஜன் தன்னிச்சையாகத் தூக்கிக் கொடுத்திருக்க முடியாது. அதன் தலைமை அமைப்பின் (Board) ஒப்புதல் பெற்றுத்தான் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்று பல இயக்குநர்கள் அடங்கிய கூட்டத்தில் இதனைத் தீர்மானித்திருப்பர் என்பது உண்மைதான்.

ஆனாலும் அந்த இயக்குநர்களும் யார்? எல்லாம் அக்கிரகாரத்து மடிசஞ்சிக் கூட்டம்தானே!

இந்தியன் இ.பி.கோ. குற்றப் பிரிவின்கீழ் (302, 120-_பி, 34, 201) கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த ஓர் அசிங்கமான பிறவிதான் ஜெயேந்திரர் என்பது ஊர் சிரித்த செய்தியாகும்.

இந்த யோக்கியதையுள்ள ஒரு மனிதரிடம் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கியின் தலைவர் மக்கள் பணத்தை ஒரு கோடி தூக்கிக் கொடுக்கிறார் கொஞ்சம்கூட கூச்ச நாச்ச-மின்றியென்றால், பார்ப்பனர்களின் இனவெறி எந்த நிர்வாணக் கோலத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு கூத்தாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலைக் குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும், எவ்வளவு பெரிய பச்சை இந்த ஜெயேந்திரர் சரஸ்வதி என்பதை, பார்ப்பனப் பெண்ணான அனுராதா ரமணன் என்ற எழுத்-தாளரே தொலைக்காட்சியில் அம்பலப்-படுத்தினாரே!

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் இந்தப் பெரியவாளு உடலுறவு கொண்ட அகோரத்தை என்ன சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

ஆனாலும் பார்ப்பனர்களின் இனப்பற்று இருக்கிறதே அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவி நிற்கும் தடிமன் கொண்டது.

வேசியர்களிடத்தில்கூட வெட்கமிருக்கும்; ஆனால் இந்த வேதியக் குலக் கொழுந்துகளிடம் மருந்துக்கும்கூட வெட்கம், கூச்சம் என்பது கிடையவே கிடையாது என்பதற்கு ஜெயேந்திர சரஸ்வதிகளையும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் சுந்தர்ராஜன்களையும் பார்க்கும்பொழுது புரியவில்லையா?

இந்த ஏனாத்தூர் பல்கலைக் கழகத்திலும், விடுதிகளிலும் பச்சையாக தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடியதே நினைவிருக்கிறதா? திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதே!

இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாயை, தூக்கிக் கொடுத்துள்ளதே -_ அந்தப் பல்கலைக் கழகம் யார் பெயரால் அமைந்தது? மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியான் பெயரால் அமைந்ததுதான்!

அவர் யார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய இந்திய அரசமைப்புக் சட்டத்தின் 17ஆவது பிரிவின்கீழ் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டியவர். அத்தகைய ஒருவரின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு அரசு வங்கி இவ்வளவு பெரிய தொகையைத் தானமாக வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது நல விரும்பிகள் _ தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த அடிப்படையில் சங்கரா நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தது? இதற்குமுன் இந்த மடத்துக்கு எப்பொழுதெல்லாம் அரசு வங்கியின் பணம் தாரை வார்க்கப்பட்டது?

இப்படி நிதியைக் கொடுக்க இந்தியன் வங்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல், நிபந்தனைகள் என்னென்ன? வேறு யார் எல்லாம் இப்படி நன்கொடை கேட்டனர்? அவர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேளுங்கள்! கேளுங்கள்!!

கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தங்கள் குலத் தலைவர் சங்கராச்சாரியார்! அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்களை _ தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் இனநலம் எங்கே? நம் மக்களின் இனநலம் எங்கே? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
நன்றி- விடுதலை

அறிவுச்சோலை விழா அழைக்கிறது


வரும் செவ்வாயன்று (30.3.2010) சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்பான விழா.

தந்தை பெரியார் தம் குடிஅரசு _ களஞ்சியம் ஆறு தொகுதிகள் வெளியிடப்பட உள்ளன. 1926, 1927, 1928 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான தொகுதிகள் இவை. ஒவ்வொரு ஆண்டுக்கும் இரு தொகுதிகள்.

இவை வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட (Selected Works) கட்டுரைகள் அல்ல. அனைத்தும் அடங்கிய (Collected Works) கருத்துப் பெட்டகமாக _ களஞ்சியமாக வெளிவருகிறது. 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கடந்த ஆண்டு அய்யா பிறந்த நாளன்று (17.9.2009) வீடியோ கான்பரன்சிங்மூலம் சேலத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து இப்பொழுது ஆறு தொகுதிகளும் _ அழகான அச்சுப் பொலிவுடன், கண்களில் ஒத்திக்கொள்ளும் நேர்த்தியுடன் காலத்திற்கேற்ற நவீன கோலத்துடன் வெளிவரவிருக்கிறது.

தொழில் ரீதியாக வெளியிடும் பதிப்பகத்தாரே மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் நமது ஏடுகளும், இதழ்களும், வெளியீடுகளும் வெளிவருவதை நெருப்புக்கோழி மனப்பான்மையினர் தவிர்த்து அனைவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

நெஞ்சில் காழ்ப்பு இல்லையென்றால், நேர்மையான விமர்சனங்களும் வரும் அல்லவா?

இவ்வளவு நேர்த்தியாக_ பொருள் செலவுடன் வெளியிட்டாலும் இலாப நோக்கம் சிறிதும் இன்றி பிரச்சார வெறியுடன், நெறியுடன் நன்கொடைகள் பெறப்பட்டு அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும், அடேயப்பா! 80, 85 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய சிந்தனைகளா? தொலைநோக்குப் பார்வையா? என்று மலைக்கத்தான் செய்கிறது.

குடந்தை பெரியவர் வெங்கட்ராமன் அவர்கள் தந்தை பெரியாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள் மறுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நம் குடிஅரசு அதிகமாக மக்களிடம் போகுமே என்பதுதான் அந்த யோசனை.

அதற்குத் தந்தை பெரியார் அளித்த பதில், போகும்தான், அதற்காக இந்த இதழை நான் தொடங்கவில்லை. கொள்கையைப் பரப்புவதற்காக, நான் ஒருவனே அச்சிட்டு நான் ஒருவனே படிக்க நேர்ந்தாலும் கொள்கையில் சமரசம் என்பது கனவிலும் இல்லை என்று கறாராகக் கூறினார்.

அந்தக் கருத்துப் பெட்டகம்தான் குடிஅரசு. இந்த இதழைத் தொடங்க தந்தை பெரியார் விரும்பிய கட்டத்தில் ஆச்சாரியார் இந்த முயற்சி வேண்டாம்? என்று தடுத்தார். திரு.வி.க. அவர்களோ, தாராளமாக நடத்துங்கள், பத்திரிகை நடத்த தகுதியானவர் நீங்கள்தான் என்று தைரியத்தையும், ஆர்வத்தையும் அளித்தார்.

குடிஅரசின் பயணம் 1949 வரை தொடர்ந்தது. இடையில் ஏடுகளின் பெயர்கள் மாறி இருக்கலாம்; அரசுகளின் தடை வாள்கள் தீண்டியிருக்கலாம். ஆனாலும், அய்யாவின் இதழ் பயணம், இலட்சியப் பாட்டையில் வீறுநடை போட்டே வந்தது.

காலத்தால் அழிக்க முடியாத, பணத்தால் எடை போட முடியாத இந்த அறிவுச் செல்வம் தமிழர் இல்லம் ஒவ்வொன்றிலும் இடம்பெற வேண்டாமா?

நமது சந்ததியினர்க்குச் சேர்த்து வைப்பது நிலமோ, பணமோ, நகைகளோ அல்ல!

அறிவுலக ஆசானின் அறிவுச் செல்வமாம் இந்தத் தொகுதிகள் வீட்டுக்கு வீடு வீற்றிருக்கட்டும்.

தாய்ப் பாலோடு இந்தக் குடிஅரசு இதழையும் புகட்டி வந்தால், நோயில் பொல்லா நோயாகிய அறியாமை நோய் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

துணிவையும், அறிவையும் கொடுத்துவிட்டால், துன்பம் துன்பம் அடையும், தோல்வி தோல்வி அடையும். வைத்த அடி விளங்கும் _ வாகை மலர்கள் வணக்கம் கூறி வரவேற்கும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் ஆறு தொகுதிகளையும் வெளியிடுகிறார். நூலகத்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் க. அறிவொளி (சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவர்), திராவிட இயக்கத் தீந்தமிழர் எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோர் கருத்து மணம் கமழவிருக்கின்றனர்.

தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார். ஆன்றோர் பெருமக்கள், தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளர்கள் தொகுதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

வெளியீட்டு விழா அன்று ஆறு தொகுதிகளை வாங்குவோர்க்கு சிறப்பான கழிவு உண்டு. ரூபாய் 370 தள்ளுபடி போக ரூபாய் ஓராயிரத்துக்கு ஆறு தொகுதிகள் கிடைக்கும்.

முதல்வர் கலைஞர் வெளியிட்ட முதல் தொகுதியும் கிடைக்கும். விழாவுக்குக் குடும்பத்தோடு வாருங்கள். நண்பர்களோடு வாருங்கள்.

கருத்துச் செல்வம் குதூகலிக்கும் ஓர் அறிவுச்சோலை விழாவின் மணத்தை நுகரும் வாய்ப்புண்டு _ வாரீர்! வாரீர்!!

வியாபாரம்!




சினிமாவில் சில காட்சிகள் வரும்; நாகப்-பாம்பைப் பார்த்து நாகப்பா என்று சாஷ்-டாங்கமாகக் கும்பிட்-டால், பாம்பு படம் எடுக்காது; கடிக்காது என்றெல்லாம் கதைப்-பார்கள். திரைப்படத்தைப் பார்த்து பாம்பைக் கண்டு கீழே விழுந்து கும்பிடு போட்ட சிறுமி பாம்பு தீண்டியதால் மரணம் அடைந்தாள் என்றெல்-லாம்கூட செய்தி வந்தது (உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த சம்பவம்).

சினிமாதான் இந்தச் சில்லறைத்தனமான சில்லுண்டி வேலைகளில் இறங்குகின்றன என்-றால், ஏடுகளும், இதழ்-களும், அவற்றிற்குச் சளைத்தவையல்ல நாங்-கள் என்று மார்தட்டு-கின்றன.

தலப் புராணம் என்ற தலைப்பில் அவிழ்த்துக் கொட்டும் அறியாமைக் குப்பைகளுக்கு அளவே-யில்லை.

திருப்பதியில் வெங்-கடாசலபதிக்கு மாலை கட்டுவதற்காக திருமலை நம்பி என்பவர் பூ பறித்தார். அப்போது அவ-ரைப் பாம்பு தீண்டிவிட்-டது. அவர் கவலையே படாமல், மாலை கட்டிக் கொண்டு வெங்கடாசல-பதியிடம் போனார்.

பாம்பு கடித்தும் நீ மாலையுடன் என்னிடம் வந்திருக்கிறாயே, நம்பி என்று கேட்டார் பெரு-மாள்.

கடித்த பாம்பு விஷம் இல்லாததாக இருந்தால், தங்களை இங்கு வந்து தரிசிப்பது; விஷமுள்ள பாம்பாக இருந்தால் வைகுண்டத்தில் வந்து சந்திப்பது என்ற வைராக்-கியத்தில் இருந்தேன்! என்று பதில் சொன்னா-ராம் நம்பி.

இப்படி ஒரு தலப் புராணம் ஓர் இதழில். ஒவ்வொரு கோயிலுக்-கும் இதுபோல அற்புதக் கதைகளைக் கட்டி விடு-வது _ அந்தக் கோயி-லின் மீது ஓர் ஈர்ப்பை, நம்பிக்கையை ஏற்படுத்-தும் வர்த்தக ரீதியான தந்திரம் என்பதை மன-தில் வையுங்கள்.

கடவுள் ஒருவரே; அவர் பல நாமகரணங்-கள் கொண்டவர் என்று ஆன்மிகவாதிகள் சொல்-லு-கிறார்களே, அது உண்-மையானால், ஒவ்வொரு கோயிலின் சக்தியின் டிகிரி வேறுபடுவதுபோல் எழுதி வைப்பானேன்?

காரணம் இருக்கிறது_ தன் பக்கம் அதிக எண்-ணிக்கையில் ஈர்த்தால் தானே அவர்களின் பொருள்களைச் சுரண்ட முடியும். உண்டியலை-யும் நிரம்பி வழியச் செய்ய முடியும்?

- மயிலாடன்
விடுதலை
E.V.R. RAMASAMY

வெள்ளி, 26 மார்ச், 2010

வள்ளலார் கோயிலில் உருவ வழிபாடு கூடாது

நீதிமன்றத் தீர்ப்புவள்ளலார் கோயிலில் (லிங்க) உருவ வழிபாடு கூடாது_ இந்து அறநிலை-யத்-துறை உத்திரவிட்டது.

இந்த ஆலயத்தின் அர்ச்சகரான சபாநாத ஒளி சிவாச்சாரியார்_ அறநிலையத்துறை ஆணை-யினை ரத்துச் செய்யக்கோரி உயர்நீதி-மன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்.

வடலூர் வள்ளலார் கோயிலின் கருவறையில் ஜோதியை ஏற்றித்தான் வழிபாடு செய்ய வேண்-டும் என்று வள்ளலாரே கொள்கை வகுத்துத் தந்துவிட்டுப் போயிருக்-கிறார். இந்தக் கோயிலின் பரம்பரை அர்ச்சகரான நான் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கருவறைக்குள் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்தேன். வள்ளலார் கோயில் கருவறையில் உரு வழிபாடு நடத்தக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை தடைவிதித்துவிட்டது. இந்தத் தடையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசா-ரித்த நீதிபதி கே.சந்துரு வள்ளலார் கோயிலில் உருவ வழிபாடு கூடாது என்று தமிழ்நாடு அரசு விதித்த தடை சரியா-னதே என்று சிறப்புமிக்க-தோர் தீர்ப்பினை வழங்கி-யுள்ளார். அது வருமாறு:

வள்ளலாரின் கொள்-கையை அரசு சரியாக பின்பற்றி, இந்த உத்த-ரவை பிறப்பித்துள்ளது. வள்ளலார் கொள்கை-யில், மதத்துக்கு இட-மில்லை. மனிதாபிமானத்-துக்கு-தான் இடமுள்ளது. ஜாதி, மத வேற்றுமை இல்லை. மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது கடமை. வன்முறைக்கு இடமில்லை. ஊனமுற்-றோர், ஏழைகளுக்கு பரிவு காட்ட வேண்டும். எனவே, லிங்க வழிபாடு செய்ய அனுமதிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு உத்தரவு செல்லும் என்-பதே அந்தச் சிறப்புமிக்க தீர்ப்பாகும்.
விடுதலை

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு...

தனி ஆயுதப்படை (Reserve Police) வளாகத்தில்

உமா மகேஸ்வரி ஆலயம்!

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) செல்லும் நெடுஞ்-சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காவல் துறையின் தனி ஆயுதப் படைப் பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. ஒரு நூற்றாண்டைக் கடந்த தொன்மையானது. அன்றைய வெள்ளையர் ஆட்சியின் போது, ஒரு நிகழ்வை - சிவகாசி கொள்ளை என்று வரலாறு பதிவு செய்துள்ளது. இரு பிரிவினரிடையே தலைதூக்கியிருந்த மோதல் போக்கைத் தவிர்ப்பதற்காகவே நிறுவப்பட்டதாகும்!

காவலர்கள் குடியிருப்பு (Reserve Line) ஆயுதக் கிடங்கு, பயிற்சிக்கான விரிந்த மைதானம், அதிகாரிகளுக்கு சிறப்பு இல்-லங்கள் என பழம் பெரும் கட்டடங்கள் போக எஞ்சியுள்ள இடம் காவல் துறை-யின் பார்வையிலேயே இருந்து வந்தது. இங்-குள்ள பயிற்சிக் களம் மாநிலத்தி-லேயே முதன்மையானதாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. வேலியே பயிரை மேய்வது போல் தற்போது இந்த இடம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் கோயில் கட்டும் இடமாக மாறியதுதான் கொடுமை!

சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்-சாலையை ஒட்டிய விலை மதிக்க முடியாத அந்த விளையாட்டுத் திட-லில் காவலர்களும், அதிகாரிகளும் விரும்-பிய அம்மன்கோயில் ஒன்று சிறிய அளவில் எழுந்தது. நீண்ட நெடுங்---கால-மாக மருந்துக்குக் கூட கோயில் இல்-லாதிருந்த இடத்தில் சின்னஞ்சிறிய-தாக அமைந்த அம்மன் கோயில் மெள்ள மெள்ள விரிவடைந்து இன்று 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. உமா மகேஸ்வரி ஆல-யம் என்று பெய-ரிட்டாலும் பிள்ளை-யார், சுப்ரமணியன், சிவலிங்கம், நவக்-கிரகங்கள் என பல சில்லரைக் கோயில்-களும் முளைத்-தெழுந்துள்-ளன. நடை சாத்தவும், நடை திறக்க-வும், வடமொழியில் பூஜை வழி-பாடு-கள் செய்யவும் அர்ச்சகர்கள் நிய-மிக்-கப்-பட்டுள்ளனர். கோயிலைச் செப்-பனிடவும், செம்மைப்படுத்தவும் செம்மண் தேவைப்பட்டது. கோயிலை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் பொட்டல் தரையை நாலடி ஆழத்திற்குத் தோண்டிப் போட்டு சின்னா பின்னப் படுத்தியிருப்பதைப் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே!

கட்டுமான வேலைகளுக்கும், விழாக்-களுக்கும் வெளியில் வசூல் வேட்-டையும் நடக்கிறது. மண் சுமப்-பதும், மலர் அலங்கார வேலைகள் செய்வதும் அரசு சம்பளம் பெறும் காவல்-துறையினர் மட்டுமே! நிரந்தர-மாய் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்-கிகளில் எந்த நேரமும் பக்திப் பாடல்-கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்-றன. பஜனைக் கூட்டத்திற்கும், பக்தி சுரண்டலுக்கும் பஞ்சமில்லை.

இது போன்ற அத்து மீறல்களால் இந்து அல்லாத பிற மதத்தினரின் உள்-ளக்குமுறல் வெளிப் படத் தொடங்-கி-யுள்-ளது. பதற்ற நிலை உருவாகும் சூழல் துளிர் விடுவதையும் மறுப்ப-தற்கில்லை.

அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்-கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

இதனைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நெல்லை மாவட்டம், தாழை-யூத்து, சங்கர் நகரைச் சேர்ந்த முத்து-ராமன் என்பவர் மதுரை உயர்நீதி மன்-றத்-தில் வழக்கு தொடுத்தார். இரண்டு நீதி-பதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு குறிப்-பிடத் தகுந்ததும், பாராட்டுதலுக்குரியது-மாகும்.

அரசு அலுவலகங்களில் மத வழி-பாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவிட்-டுள்-ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்-டியது அரசின் கடமை. உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்-படுத்த அரசு தேவையான நடவடிக்-கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்-களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்-படவேண்டும் என்கிறது தீர்ப்பு! சம்பந்தப்பட்டவர்-களுக்கே வெளிச்சம்!

- சிவகாசி மணியம்

விடுதலை

வியாழன், 25 மார்ச், 2010

திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணமின்றி சேர்ந்து வாழ்வது… எதுவும் தப்பில்லை! –


உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.!

Thursday, March 25, 2010 at 1:50 am 912 views

திருமணத்துக்கு முன் செக்ஸ், திருமணமின்றி சேர்ந்து வாழ்வது… எதுவும் தப்பில்லை! – சுப்ரீம் கோர்ட்

கற்பு, திருமணத்துக்கு முன் செக்ஸ் போன்ற விஷயங்கள் குறித்து நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளானதும், அதைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகள் சில அவர் மீது தமிழகம் முழுக்க 23 வழக்குகள் தொடர்ந்ததும் மறந்திருக்காது என்று நம்புகிறோம்.

இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார் மனுதாரர்களின் சார்பில் வழக்கறிஞர் வாதாடினார். நடிகை குஷ்புவின் கருத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும் என்றும், நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்துவிடும்… தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக அவர் வாதங்களை எடுத்து வைத்தார்.

அப்போது, அந்த வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அந்தக் கேள்விகள் உண்மையில் இந்த சமூகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளே. அவை பற்றிய நமது விமர்சனமல்ல இது. ஆனால் அந்தக் கேள்விகள் சரிதானா? என்ற கூடுதல் கேள்வியுடன், அவற்றை இங்கே முன் வைக்கிறோம்.

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல. அவற்றை தடை செய்ய சட்டத்தில் இடமே இல்லை. இந்த செயல்கள் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத் தயாரா?

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா? சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும், ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது ‘வாழும் உரிமை’. வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.

நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படி பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்த கருத்து, எப்படி குற்றம் ஆகும்? எந்த சட்டவிதியின்படி குற்றம் என்று விளக்குங்கள் பார்பபோம்.

குஷ்புவின் கருத்துகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிடுகிறீர்களே,​​ அதன்படி இந்த பேட்டியைப் படித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்ணையோ பிள்ளையையோ உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

குஷ்புவின் பேட்டிக்கு பிறகு, அதனால் எத்தனை இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை குடும்பங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன என்று விளக்கத் தயாரா?

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் முறைகேடான செயலில்தான் ஈடுபடுவார்கள் என்ற அனுமானத்தில் எப்படி நாம் இறங்க முடியும்?

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று குஷ்பு சொன்னது எந்த சட்டப்படி குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?

சரி, புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா? (இல்லை என்கிறார் வழக்கறிஞர்)பிறகு எப்படி அவர் பாதிக்கப்பட்டார்? எந்த அடிப்படையில் வழக்குத் தொடர்ந்தார்?

நடிகை குஷ்பு தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து.​ அது எப்படி உங்களை பாதிக்கிறது?​ அவர் பேசியது எங்களை பாதிக்கவில்லை என்றனர்.

- இவைதான் நீதிபதிகள் கேட்ட கேள்விகள்.

இதே நீதிபதிகள், கடந்த ஜனவரி 19-ம் தேதி விசாரணையின் போது, குஷ்புவின் கருத்து பொறுப்பற்றது என கண்டனம் தெரிவித்திருந்தனர்.
“குஷ்புவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை ஏற்க முடியாது. அவர் அளித்த பேட்டியின் முழு விவரத்தை இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் கேட்டிருந்தனர். ஒரு மாத காலத்தில் இந்த கண்டனம் வழக்குத் தொடர்ந்த நபர்களுக்கு எதிராகத் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவுக்கு ஸ்பெஷல் சீட்!

இந்த விசாரணை நடந்த போது, நீதிமன்றத்தின் முன் வரிசை இருக்கையில் வழக்கத்துக்கு மாறாக குஷ்புவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பொதுவாக அங்கே சாதாரண மக்கள், மனுதாரர்கள் உட்கார முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதியில்லை என்றுதான் இத்தனை காலமாக கூறிவந்தனர். முதல் முறை குஷ்புவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்ட குஷ்பு, நீதிபதிகளின் கருத்துக்கள் தனக்கு ஆதரவாக வந்ததால் பெரும் மகிழ்ச்சிப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தார்!

-என்வழி

என் உயிருக்கு ஆபத்து

ராஜபக்சேவின் கொடுமைகளை அம்பலப்படுத்துவேன்

பொன்சேகா ரகசியப் பேட்டி

கொழும்பு, மார்ச் 25-_ முறைகேட்டையும் மீறி, ராஜபக்சேயை விட அதிக வாக்குகள் வாங்கி-யதால், என் மீது ராஜ-பக்சே பொறாமைப்படு-கிறார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ராணுவக் கட்டுக்காவலை மீறி அளித்த பேட்டியில் பொன்சேகா கூறியுள்-ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயி-டம் தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தள-பதி சரத் பொன்சேகா, கடந்த மாதம் ராணுவ காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கடற்-படை தலைமையகத்தில் அவர் காவலில் வைக்கப்-பட்டுள்ளார். அவர் மீது போடப்பட்ட 2 குற்றச்-சாற்றுகளுக்காக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடுமை-யான ராணுவக் காவலை-யும் மீறி, இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு பொன்சேகா பேட்டி அளித்துள்ளார். எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் எழுதி அனுப்பி உள்-ளார். அதில் பொன்-சேகா கூறி இருப்ப-தாவது:-

என் மீதான குற்றச்-சாற்றுகள், பொய்யா-னவை. நான் சிறை வைக்கப்பட்டது, சட்ட விரோதம். அதிபர் தேர்-தலில், ராஜபக்சே செய்த முறைகேடுகளையும் மீறி, நான் அவரை விட அதிக வாக்குகள் பெற்றேன். அதனால் அவர் என்-னைப் பார்த்து பொறா-மைப்படுகிறார். அவரது வெற்றியை எதிர்த்து நான் வழக்கு தொடரு-வேன் என்று அவருக்கு தெரியும். எனவே, என் மீது பொய் குற்றச்சாற்று சுமத்தி கைது செய்துள்-ளார்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இருப்-பினும், நாட்டு நலனுக்-காக, ராஜபக்சேயின் உண்மை முகத்தை அம்-பலப்படுத்-துவேன். அதில் பின்-வாங்க மாட்டேன்.

இவ்வாறு பொன்-சேகா கூறியுள்ளார்.

இதற்கிடையே, ராணு-வக் காவலை மீறி பொன்-சேகா தனது பதில்களை அனுப்பியதை அறிந்து இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இது-குறித்து, தேசிய பாது-காப்புக்கான பத்திரிகை மய்ய தலைமை இயக்கு-நர் லட்சுமணன் குலு-கல்லே கூறியதாவது:-

பொன்சேகா எப்படி தனது பதில்களை வெளியே அனுப்பினார் என்று முழு அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது-தொடர்-பாக, அவரது மனைவி அனோமாவிடம் விசா-ரணை நடத்தி உள்-ளோம். அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, பொன்-சேகா அந்நியச் செலாவணியைப் பயன்-படுத்-தியது பற்றியும் விசாரணை நடத்தி-னோம். இதுபோல், ஜனதா விமுக்தி பெர-முனா தலைவர் அனுரா குமார திசநாயகேவி-ட-மும் தனியாக விசா-ரணை நடத்தி உள்-ளோம்.

புதன், 24 மார்ச், 2010

யானைக்குக் கோவணமா?




புனித கங்கை என்று இந்து மதக்காரர்கள் போற்றிப் புகழ்பாடும் கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது போதுமானதல்ல; மேலும் மூவாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்து மதத்தில் புனித நதி என்றும் சிவபெருமான் தலையில் குடியிருக்கும் தெய்வப் பெண் என்றெல்லாம் பிரமாதமாகக் கூறுகிறார்கள்.

சூரிய வம்சத்துப் பிறந்த பகீரதச் சக்ரவர்த்தி தன் பாட்டன் முதலியவர்களின் சரிதங்களைக் கேட்கையில், பிதுர்க்கள் அநேகர் கபிலர் கோபத்-திற்குட்பட்டு சாம்பராய் நரக வேதனைப்படுதல் அறிந்து அதை நீக்க, அநேக ஆண்டுகள் பிர்மன், கங்கை, சிவமூர்த்தி முதலியோரை எண்-ணித் தவம் புரிந்து சிவமூர்த்தியால் கங்கையின் ஏழு துளிகளைப் பூமியில் வரப் பெற்றனர்.

பார்வதிதேவி விளையாட்டாக சிவமூர்த்தியின் கண்களை மூட, அக்கரத்தின் வழிப் பெருகிய நீர் வெள்ளங்கொள்ள, அதைச் சிவமூர்த்தி தரித்தனர் என்றும், விஷ்ணு திரிவிக்கிரம அவதாரங்கொண்டு மூவுலகளந்தபோது திருவடி சுவர்க்கமடைய அண்டமுடைந்து ஆகாய கங்கை கால்வழி ஒழுகியதால் உண்டானது என்றும் கங்கையைப்பற்றி அளந்து கொட்டி-யுள்ளனர்.

இந்தக் கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்றும், செத்த பின் உடலை எரித்து, அந்தச் சாம்பலைக் கங்கையில் கரைத்-தால் மோட்சலோகு கிட்டும் என்றும் அள்ளிக் கொட்டி வைத்துள்ளார்களே _ நமது வினாவெல்லாம் இதுதான்;

இவ்வளவு தெய்வத்தன்மை பொருந்திய கங்காதேவி எப்படி அசுத்தமானாள்? சுத்தப்-படுத்தவேண்டும் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?

கங்கை புனிதமானது _ தெய்வத்தன்மை பொருந்தியது என்பது பொய்யாக இருக்க-வேண்டும். இல்லை, இல்லை, கங்கை புனித-மானவள்தான்; தெய்வத்தன்மை பொருந்திய-வள்தான் என்பது உண்மையானால், அதைச் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; அவ்வாறு அரசு நிதி ஒதுக்கி சுத்தம் செய்ய முற்படுவது தெய்வத்தன்மையை அவமதிப்ப-தாகும் என்றும் இந்து மதக் குத்தகையாளர்கள் குரல் கொடுக்கவேண்டும்.

உண்மையான நிலவரம் என்ன? கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை அதன் பயண தூரம் 2,525 கிலோ மீட்ட-ராகும். வழிநெடுக இந்தக் கங்கையில் கலக்கப்படும் அசுத்தங்களையும், கழிவுகளையும் நினைத்தாலே குடலைப் புரட்டும்.

காசி நகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு இந்தக் கங்கையில் கலக்கும் சாக்கடையின் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள்தோறும் 400 பிணங்கள் எரிக்கப்பட்டு, அவற்றின் சாம்பல் கங்கை நீரில் கரைக்கப்படுகின்றன.

9000 கிழட்டுப் பசுக்கள் இந்தக் கங்கையில் உயிரோடு வீசி எறியப்படுகின்றன. காசியில் பட்டுத் தொழிலில் ஈடுபடுவோர் 2 லட்சம் பேர்கள். இதன் இரசாயனக் கலவை எல்லாம் இந்த நதியில்தான் சங்கமம் ஆகின்றன.

காசியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு மோட்சம் சென்றடையும் நம்பிக்கையில் குளிப்போர் எண்ணிக்கை 70 ஆயிரம்.

1927, 1963, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தத் தூய்மை கெட்ட கங்கை என்னும் சாக்கடையால் கடும் நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கில் மடிந்தனர்.

பொதுவாக இந்தியாவில் குழந்தைகள் மரணம் என்பது 1000_க்கு 94 என்றால், காசி வட்டாரத்தில் அது 133.94 விகிதாச்சாரமாக உள்ளது.

காசியையடுத்து காஜியாபாத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் கழிவுகள் கங்கையில்தான் கலக்கின்றன. இந்தக் கழிவில் ஓபியம் என்ற போதை இருப்பதால், இந்தத் தண்ணீரைக் குடிக்கும் குரங்குகளும் போதை வெறிக்கு ஆளாகின்றனவாம்.

பிகார், பாட்னாவில் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்-கப்படுகின்றன. மிக அதிகமாகப் பாதிக்-கப்படும் நகரம் கொல்கத்தா என்று கூறப்படுகிறது.

இந்தச் சாக்கடைதான் புண்ணிய கங்கையாம், தெய்வாம்சம் பொருந்தியதாம் _ இதனைத்தான் சுத்திகரிக்கப் போகிறார்களாம் _ யானைக்குக் கோவணம் கட்டும் கதைதான்!

நூல் அறிமுக விழா




சி(வ)றந்தது ஒரு செவ்வாய்க்கிழமை!

65 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நேற்று (23.3.2010) நடைபெற்றது ஒரு நேர்த்தியான விழா.

திரும்பிப் பார்க்கிறேன்!

முகம் ஆசிரியர் மாமணி அவர்களால் ஆக்கப் பெற்ற நூல் திரும்பிப் பார்க்கிறேன் என்பதாகும். 192 பக்கங்-களைக் கொண்ட இந்த நூலின் அறிமுக விழா மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர்



மீனாட்சி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.சம காலத்தில் வாழ்ந்த 526 பேர்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்நூலுக்குரிய தனிச்சிறப்பு. நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடக்கத்தில் இதனையே மய்யமாகக் கொண்டு கருத்தினைப் பதிவு செய்தார்.

பதிவு செய்தோமா?

நாம் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோமா? அப்பா பெயர் தெரி-யும், அம்மா பெயர் தெரியும், தாத்தா பெயர் தெரி-யும்; கொள்ளு தாத்தா பெயர் தெரியுமா? கொள்ளு பாட்டி யார் என்ற குறிப்பு நம்மிடம் உண்டா? நமது சமூகத்தில் இது மிகப்பெரிய குறை என்று சொன்ன தமிழர் தலைவர், நூலாசிரியர் சம காலத்தில் வாழ்ந்த 526 பேர்களைப் பதிவு செய்துள்ளதைப் பலபட பாராட்டினார்.



நூல் அறிமுக விழா - ஓர் இலக்கணம்!

நூலை அறிமுகப்படுத்தும் விழாவில் எப்படி பேசவேண்டும்? எதைப் பேசவேண்டும்? எவ்வளவு நேரம் பேசவேண்டும் என்ற ஓர் இலக்கணத்தை ஏற்படுத்தியதுபோல அமைந்திருந்தது ஆசிரியர் அவர்களின் உரை. அங்குக் கூடியிருந்தோர் பல்-துறைச் சான்றோர்ப் பெருமக்கள். இது ஒரு கதம்ப மாலை என்று ஆசிரியர் குறிப்பிட்டது கவித்-துவமும், பொருளும் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

நன்றி மிக முக்கியம்

1. ஒருவரைப் பாராட்டுவது என்பது ஒன்று; அதனைவிட பாராட்டுதலுக்குரிய செயலைச் செய்-தாருக்கு நன்றி காட்டுவது என்பது இன்னொன்று. இது மிக முக்கியம் ஆகும்.

2. நூல்களை வாங்கிப் படிக்கவேண்டும் _ அதன்மூலம் நூலை உருவாக்கியவர்களைத் தாங்கிப் பிடிக்கவேண்டும்.

3. நூலாசிரியர் முகம் மாமணி தொடக்கத்தில் விடுதலையில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றி-யுள்ளார். அங்கு அவர் கற்றுக்கொண்ட சிக்கனத்தை தனது இதழிலும், நூலிலும் கையாண்டுள்ளார். தேவை-யில்லாத சொற்களைக் கையாளவில்லை. இரண்டு வரிகள் என்றாலும், அதில் சிந்தனைப் பொறி கிளம்புகிறது.

கிந்தனார் பதில்கள்!

அவரின் கிந்தனார் பதில்கள் தனித்தன்மையானவை. இன்னொருவரால் பின்பற்றவும் முடியாதது. அறிவில் பட்டதை தயக்கமின்றி யாரையும் விமர்சிக்கக் கூடியவர் _ என்னை உள்பட! தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார்: ஒரு பிரச்சினையை அணுகும்போது அதைப்பற்றி மட்டுமே அலசி ஆராயவேண்டும். அதை எழுதினால் யார் யார் கோபத்துக்கு ஆளாக நேரிடும்? பின்விளைவு என்ன? பக்க விளைவுகள் என்ன? என்று பார்க்கக்-கூடாது என்பார். அந்தப் பார்வை நூலாசிரியர் முகம் மாமணியிடம் இருப்பது பாராட்டத்தக்கது.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற் சென்றிடித்தற் பொருட்டு எனும் திருவள்ளு-வரின் வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரேயாயினுமாகுக, அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும் என்று முதல் குடிஅரசு இதழின் முதல் தலையங்கத்-திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா! அந்த குரு-குலத்துச் சீடரும் அவ்வாறு இருப்பதில் ஆச்சரியமில்லையே!

படிப்பு மூன்றாம் வகுப்புதான்!

4. மூன்றாம் வகுப்புவரைதான் பள்ளிப் படிப்பு. அதன்பின் உழைப்பால், முயற்சியால் பட்டதாரியாகி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்து, அதன்பின் அந்தத் துறையில் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றார் என்பது இன்றைய இளைஞர்களுக்கான வழிகாட்டுதலாகும்.

உழைப்பால் யார் யார் எப்படியெல்லாம் இங்கு முன்-னேறினார்களோ அவர்களைப்பற்றி நம் மாணவர்-களுக்கு, இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுக்க-வேண்-டும். இதில் மற்ற நாட்டுக்காரர்கள்பற்றிய எடுத்துக்-காட்டைவிட இது முக்கியமானது.

பூங்காவில் (சு)வாசித்தவர்!

பூங்காக்களைப் பொழுதுபோக்குக்காக, காதலர்களின் உறைவிடமாகப் பயன்படுத்துபவர்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால், அந்தப் பூங்காக்களை படிப்பகமாக, அறிவை வளர்த்துக் கொள்ளும் நூலகமாக மாற்ற முடி-யும் என்பதைத் தம் வாழ்வில் சாதித்திருக்கிறார் முகம் மாமணி.

பூங்காவால் புத்தறிவு பெற முடியும், புத்தாக்கம் பெற முடியும் என்று ஆக்கிக் காட்டியிருக்கிறார். முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஓர் ஒளிவிளக்கு!

செவ்வாய்க்கிழமைகளில்....

5. இந்த நூல் அறிமுக விழாவில் சிறப்பான இன்-னொரு நூலை அறிமுகப்படுத்தினார் ஆசிரியர்.

சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது வாங்கிய நூல். நூலின் பெயர்Tuesdays with Morrie என்பதாகும். அதன் ஆசிரியர் மிட்ச்சு ஆல்பம் (Mitch Albom) என்பவர்.

மோரி என்பவர் பல்கலைக் கழகப் பேராசிரியர்; பிற்காலத்தில் கடுமையான நோய்க்கு ஆட்பட்டார். மற்றவர்கள் துணையின்றி எதையும் அவர் செய்து-கொள்ள முடியாத நிலை. ஆனாலும், அதுபற்றி அவர் கவலை கொண்டார் இல்லை; முடங்கினார் இல்லை. அவர் எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்; என்னைக் குழந்தைபோல் நினைத்து அன்பு பாராட்டுகிறார்கள். இதைவிட எனக்கு என்ன மகிழ்ச்சி தேவை?

மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார்.

நோய் - ஒரு தடையா?

நோய்வாய்ப்பட்ட நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திய இந்தப் பேரா-சிரியர்பற்றி பல இடங்களிலும் சிறப்பாகப் பேசப்பட்டது.

இவரிடம் பேட்டி எடுத்து தொடர்ச்சியாக ஒளி-பரப்ப-வேண்டும் என்று தொலைக்காட்சியின் உரிமையாளர் ஒருவர் விரும்பினார் _ இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்-சியாகவும் அமையும் என்பது அவரின் எண்ணம்.

திரைப்படமாகவும் வந்தது

அந்தத் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றிய மிட்ச்சு ஆல்பம் என்பவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த ஆல்பம் என்பவர் யார் என்றால், அந்த நோய்வாய்ப்பட்ட பேராசிரியரின் பழைய மாணவர். மிகவும் வசதியாகவும், பொருத்த-மாகவும் போய்விட்டது.

பேராசிரியரைச் சந்தித்தார். தன் இயலாமையை வெளிப்-படுத்தினார் பேராசிரியர். பரவாயில்லை; உங்கள் வசதிக்கு நேரத்தை ஒதுக்கித் தாருங்கள். நான் பேட்டி காணத் தயாராக இருக்கிறேன் என்றார் செய்தியாளர்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையில் பேட்டிக்கு நேரம் ஒதுக்கித் தந்தார்.

(அதுதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு.Tuesdays with Morrie)

எல்லாம் செவ்வாய்க்கிழமைகளில்...

நான் இந்த நூலை வாங்கியதும் ஒரு செவ்வாய்க்-கிழமை. நான் அந்நூலைப்பற்றி இங்கு பேசுவதும் செவ்-வாய்க்கிழமை என்று ஆசிரியர் சொன்னபோது, அரங்-கமே கலகலத்தது. மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளவேண் டாம். எதிர்பாராப் பொருத்தம் என்றார்.

தொடராக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறகு அந்தத் தொடர் சினிமா-வாகவும் எடுக்கப்பட்டது.

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இன்னொரு நூலைப்பற்றியும் மிக அழகுற அறிமுகப்படுத்தினார் விடுதலை ஆசிரியர்.

அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார்

6. இந்த நூலோடு ஒப்பிட்டு இன்னொரு நூலை-யும் அறிமுகப்படுத்தினார் தமிழர் தலைவர்.

அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் என்பதுதான் அந்த நூல்.

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் முதுமை-யடைந்த நிலையில், அவரைச் சந்தித்துச் சந்தித்து அவரிடமிருந்து கருத்துகளையும், தகவல்களையும் பெற்று அறிவுச்சுரங்கம் அப்பாதுரையார் என்ற தலைப்-பில் நூலாகக் கொண்டு வந்தவர்தான் நமது மாமணி முகம் மாமணி என்றார், விடுதலை ஆசிரியர் அவர்கள்,

பெரியார் என் கடவுள் என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் கூறியதாக இந்நூலில் குறிப்-பிடப்பட்டுள்ளது.

‘Tuesdays with Morrie’ என்ற நூலோடு இதனை ஒப்பிட்டுச் சொன்னதை கற்றறிந்த அந்த மாமன்றம் மிகவும் ரசித்து கரவொலி எழுப்பியது.

ரூபாய் பத்தாயிரம் பரிசு

7. சிறந்த பகுத்தறிவுப் படைப்புக்குப் பேராசிரியர் சி. வெள்ளையன் நினைவு அறக்கட்டளை சார்பாக பத்தாயிரம் ரூபாய் அளித்து வருகிறோம்.

முகம் மாமணி அவர்களுக்கு அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் என்ற நூலுக்காக பத்தாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்ற இனிய அறிவிப்போடு தன் உரையை நிறைவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.

75 மணித்துளிகள் நடைபெற்ற இவ்விழா, நூல் அறிமுக விழாவிற்கான நேர்த்தியை வெளிப்படுத்-தியது. அதிக நேரம் இல்லாமலும், அதேநேரத்தில் கருத்-தாழத்துடனும், ஆடம்பரம் இல்லாமலும் நடை-பெற்ற இவ்விழா இத்திசையில் எடுத்துக்-காட்டானது என்பதில் அய்யமில்லை

திலீபன் நினைவுத் தூபி இலங்கை இனவாதிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது



நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் இருந்த காலத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப்பக்க வீதியில் இத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.


சிறிலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலங்களில் இத்தூபி ஓரளவு சேதடைந்திருந்தது. இந்நிலையில் ஏ – 9 நெடுஞ்சாலை மக்களின் பாவனைக்குத் திறக்கப்பட்டதும், தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை ஆரம்பித்து இருந்தனர்.

அத்துடன், சர்வதேச மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் இந்நினைவுத் தூபி இருந்தது. இந்நினைவுத் தூபிக்கு முன்னாள் சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென இந்த நினைவுத் தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. இத்தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த வரலாற்றுத் தடயங்களை அழிக்கின்ற முயற்சிகளை சிறிலங்கா அரசு அண்மையில் மேற்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வாழ்ந்த இருப்பிடங்கள், அவரர்களால் கைவிடப்பட்ட முகாம்கள் மற்றும் அவர்களின் காரியாலயங்கள் போன்ற இடங்கள் வடக்கை நோக்கிப் பயணிக்கின்ற உல்லாசப் பயணிகளின் பெரும் கவனத்தைப் பெற்று வருவதை அடுத்தே, சிறிலங்கா அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 23 மார்ச், 2010

தூக்குக் கயிறு!


1931 மார்ச் திங்கள் இதே நாளில்தான் மூன்று புரட்சியா-ளர்கள் லாகூர் மத்திய சிறை-யில் தூக்கிலிடப்பட்டார்கள். அந்த மாவீரர்கள் தாம் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகியோர் ஆவர்.

அவர்கள் செய்த குற்ற-மென்ன? மதத்தின் பிடியிலி-ருந்த இளைஞர்களைப் புரட்சிப் பாதைக்கு அழைத்து வந்த சீலர்கள்.

1928 ஆம் ஆண்டு சைமன் ஆணையத்திற்கு எதி-ராக நடைபெற்ற பேரணிக்குத் தலைமை தாங்கிய லாலா-லஜபதி ராய் காவல்துறையின் காட்டுவிலங்காண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார்.

அந்தத் தாக்குதலின் தாக்-கம் இந்த வீர இளைஞர்-களைப் பழிவாங்கும் உணர்ச்-சியின் பக்கம் தள்ளியது. அதன் விளைவு, லாகூரில் துணைக் காவல்துறைக் கண்-காணிப்பாளராக இருந்த சாண்டர்ஸ் பகத்சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் ஜவகர்-லால் நேரு எழுதியது என்ன தெரியுமா? பகத்சிங் லாலா-லஜபதியின் கவுரவத்தைக் காப்பாற்றினார் என்று எழுதி-னார்.

இன்னொரு முறை நாடா-ளுமன்றத்தில் எந்த உயிரும் பலியாகாத வண்ணம் வெடி-குண்டை வீசி, தாங்களே முன்-வந்து கைதியாகி, அதன்மூலம் தங்கள் இலட்சியத்தைப் பரப்-புவதற்கான பிரச்சார வாய்ப்-பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட புரட்சி வாச-கங்கள் அடங்கிய காகிதங்-களை வீசி எறிந்தனர்.

நீதிமன்றத்தில் நின்ற-போதும் கூனிக் குறுகவில்லை. வீரச் சிங்கமாக முழக்கமிட்-டனர்.

காந்தியார் நினைத்திருந்-தால் அவர்களின் உயிர்-களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்துண்டு.

புரட்சியாளர்களைத் தனி-மைப்படுத்தி, காந்தி இர்வின் ஒப்பந்தம்மூலம் மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியார் இதில் துரோகம் இழைத்துவிட்டார் என்று பேசப்பட்டது.

1931 மார்ச் 25 அன்று (பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இரு நாள்கள் கழித்து) கராச்-சிக்குக் காந்தியார் வந்தபோது அவருக்கு எதிராகக் கறுப்புக்-கொடி காட்டப்பட்டது.

பகத்சிங் தூக்குக் கயிறை முத்தமிடும் நிலையில், குரு-வாகையைத் துதி செய் என்று கேட்டுக் கொண்டபோது, நான் இறுதிவரை நாத்திகன் என்று கூறி அதனை மறுத்துவிட்டார்.

இந்த வீரர்கள் தூக்கி-லிடப்-பட்டபோது தந்தை பெரியார் குடிஅரசு இதழில் தலையங்கம் தீட்டினார்.

பகத்சிங் தூக்கிலிடப் பட்டு உயிர் துறந்திருக்கா விட்டால், இந்த வெற்றி இவ் வளவு பிரபலத்தில் ஏற்படு வதற்கு ஆதாரமே இருந் திருக்காது. மேலும், பகத் சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால், காந்தியத் திற்கு இன்னமும் ஆக்கமும் ஏற்பட்டிருக்கும். சும்மா தானாக நோய் கொண்டு அவஸ்தைப்பட்டு செத்து சாம்பலாகியிருக்கவேண்டிய பகத்சிங்கு இந்திய மக் களுக்கு - ஏன் உலக மக் களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மன மார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்! பாராட்டு கிறோம்!! பாராட்டுகிறோம்!!! இதே சமயத்தில் நமது அர சாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களைப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாகத் தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம் என்று குடிஅரசில் (29.3.1931) எழுதி-னார் தந்தை பெரியார்!

தூக்குத் தண்டனை ஏற்றதன்--மூலம் தம் புகழைத் தூக்கி நிறுத்-திய நாத்திக சீலர்கள் வாழ்க!

- மயிலாடன்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!


அறிமுகக் குறிப்பு: அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.

இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்த பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான் அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் தி.மு.க அரசின் சதிகளை விளக்கும் வண்ணம் தொடர் பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இங்கே அதை ஒட்டி சமீபத்தில் மதுரையில் அந்த அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தை ம.உ.பா.மை நடத்தியது. அதன் பதிவு கீழே தரப்படுகிறது.

___________________________________

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மதுரையில் 10.3.2010 புதன்கிழமை காலை 9.00 மதி முதல் 5.00 மதி வரை மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் சற்றும் கலையாமல் அமர்ந்திருந்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 29 பேர் அர்ச்சகர்களாகவே கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிதம்பரம் நடராசர் கோவிலை மக்கள் சொத்தாக்கியதைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் பிற போராட்ட அமைப்புகளும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய ராஜூ “அரசியல் சட்டம் 17வது பிரிவு தீண்டாமை குற்றம் என்று கூறுகிறது. ஆனால் ஆலய கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் நுழைய முடியாது என்ற தீண்டாமை இருந்து வருகிறது. அரசியல் சட்டமா? ஆகம விதிகளா? என்று கேள்வி எழும்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? சட்டப்படி போராடி தீர்வு கண்டாலும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினரை நுழைய அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிதம்பரம் போராட்ட அனுபவம் உணர்த்துகிறது. எனவே மக்கள் இந்த கோரிக்கைக்கு பெருவாரியாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டம் வெல்லும்” என்று வலியுறுத்தினார்.

உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட அர்ச்சக மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மேடைகளில் பேசிப் பழக்கமில்லாதவர்கள் மந்திரம் மற்றும் பாடல் வடிவங்களில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.

“வேதம், ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது வருகிற கடவுள் நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகின்றார்கள். ஆகம விதிகளின் படி தலைவழுக்கையாக இருந்தால் கூட அர்ச்சகராக இருக்க தகுதியில்லை. திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டும் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும். ஊனம் இருக்கக் கூடாது. பத்துவிரல்களுக்கு மேலோ, கீழோ இருக்கக் கூடாது.”

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் ஆனந்தன் பார்ப்பனர்களைப் போலவே தோற்றத்தில் இருந்தார். ஆனால் பூணூல் மட்டும் இல்லை. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மிக அழகாக, துல்லியமாக மந்திரங்களை ராகத்துடன் அவர் பாடிக் காட்டி இது எந்த வகையில் பார்ப்பனர்களின் திறமைக்கு குறைவானது என்று கேட்டார்.

மேலும் “படித்து அர்ச்சகராகி நமது பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை வாழுமென்று எதிர்பார்த்த பெற்றோர்களும், நாங்களும் இப்போது வேறு வழியில்லாமல் திகைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைப்படுகின்றனர். இதற்கு யார் காரணம். உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலே, தகுதியில்லாமலே அர்ச்சகர்களாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள், முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இந்த வேலையை செய்யாமலிருந்திருக்கலாம். அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று பெயரளவில் செய்து விட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.” என்றும் குமுறினார்.

மாணவர் சங்க பொருளாளர் திரு.சண்முகம் பார்ப்பனர்களின் பகல் வேசத்தை தோலுரித்துக் காட்டினார். “தன்னை ஒரு பூஜைக்காக அழைத்துச் சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். ஹோமம் ஆரம்பிக்கும் முன் ஒரு சரம் பான்பராக்கை எடுத்து எனக்கு இரண்டு கொடுத்தார். எனக்குப் பழக்கமில்லை என்று சொன்னேன். அவரோ இதைப் போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன்னார். ஆறிப்போன காப்பியை ஹோமத்தில் சுடவைத்து குடித்தார். மறு நாள் காப்பி வரவில்லை என்பதால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை எடுத்து ஹோமத்தில் வைத்து காப்பி போட்டுக் குடித்தார். இது தான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம்.” என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாக பாடி, தான் எத்தனையோ திருமணங்கள் மற்றும் கிரகப்பிரவேசங்கள் நடத்தி வைத்திருக்கிறதாகவும் அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தள்ளியா வைத்துவிட்டார் என்று வினா எழுப்பினார்.

மாணவர்கள் சிலர் “பள்ளியில் பயிற்சி பெறும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தோம். எவ்வளவு நம்பிக்கையோடு கல்வியை கற்றோம். அத்தனையும் பார்ப்பனர்களுடைய சாதி வெறியினாலே தகர்க்கப்பட்டு விட்டது. அதற்கு சட்டமும் துணை நிற்கிறது” என்று மனம் வருந்தினர். மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர விடாமல் பல்வேறு வேண்டாத சக்திகள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மதுரை மாணவர் மாரிமுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் நாங்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தார்.

பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினர் நுழையக்கூடாது. தாங்கள் அழைக்கும் போது மட்டுமே கடவுள் வருவார் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பிள்ளைகளையெல்லாம் கலெக்டர், செக்கரட்டரி, வங்கி மேலாளர், தொழில் அதிபர்கள் ஆக்கிவிட்டு சொகுசாக வாழ்கின்றனர். பார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பார்ப்பனர்களின் வாரிசுகள் கடல் கடந்து கண்டம் கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். பிற சாதியினர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று சொல்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்து நீங்கள் கருவறையைத் தவிர வேறு எங்கும் வரக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அர்ச்சகர் வேலையைத் தவிர வேறு வேலை கிடையாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? எல்லா இடத்திலும் அவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நமக்கெல்லாம் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது எந்த வகையான நீதி?

சாதி, தீண்டாமை, அர்ச்சகராகுவதற்கான தடை, தங்கள் மூலமாக மட்டுமே கடவுள் வருவார் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் பார்ப்பனியமே காரணம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே. ராமசாமி பேசும் போது “நித்யானந்தா, சங்கராச்சாரி போன்றவர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள்தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினுடைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் கடவுளுடைய அவதாரம் என்று சொல்வதும் உத்தமன் என்று சொல்வதும் பொய். பார்ப்பனர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏமாற்று வேலை. நான் ஒருமுறை கோவிலுக்குச் சென்ற போது அங்கே அர்ச்சகர் இல்லை. அர்ச்சகர் இதோ வருவார் அதோ வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அர்ச்சகர் வந்த பாடில்லை. பொறுமை இழந்த நான் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வேன் எனக்கு எல்லா மந்திரங்களும் என்று கூறி கருவறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். அதற்குள் பட்டரை அழைத்து வந்துவிட்டார்கள். சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயரா என்று நான் சவால் விட்டேன். மதுரையிலுள்ள திருப்புகழ் பக்த சபையை கட்டிக்காத்தவர்களிலே நானும் ஒருவன்” என்று கூறினார்.

குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனுர் கிழார் அவர்கள் “வடநாட்டு கடவுளர்களையும் கந்த சஷ்டி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு. நம்மை அறியாமலேயே கொண்டாட வைத்து விட்டார்கள். விநாயகன், ராமன், கிருஷ்ணன், ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் தமிழர்களுக்குரியதே இல்லை” என்று அடித்துக் கூறிய அவர் சைவ சித்தாந்தம் பற்றி அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை மேடையில் அறிமுகம் செய்து பலரும் அதை வாங்கி சென்றார்கள்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் திரு.கி.மகேந்திரன் கி.மகேந்திரன் பேசியது : “1970ல் தந்தை பெரியார் கர்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாபிதி இதற்காக நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். என்னுடைய அரசு அதற்கான சட்டம் ஒன்றினை இயற்றும் என்று கூறினார். கர்ப்பக்கிரகத்துக்குள் நிற சாதியினர் நுழைய முடியாத பிலை என்னுடைய நெஞ்சிலே தைத்திருக்கின்ற முள் என்று கூறினார். பெரியார் மறைந்த போது பெரியாரின் நெஞ்சிலே தைத்த முள்ளோடு அவரை நான் புதைக்கும்படியாக ஆகிவிட்டது என்று கருணாநிதி கூறியதை” கருணாநிதிக்கு நினைவுபடுத்தினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சின்ன ராஜா, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனாதாத்தள பிரமுகர் வேலுச்சாமி, ம.க.இ.க தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு தோழர் குருசாமி, பு.ஜ.தொ.மு.தோழர் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள் சிலரும், தனிநபர்களும், தாங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும் நேரமின்மையின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை. மாலை 5.15 மதியளவில் குமுடி மூலை ஆறுமுகசாமி அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார். அனைத்து ஊடகங்களும் செய்தி சேகரித்துச் சென்றன.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் அர்ச்சக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “”"”வாழ்மிகு வராது பொய்க மதிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க”" என்ற பெரியபுராண பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டம் முடிக்கப்பட்டது.

- தகவல், புகைப்படம்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164

திங்கள், 22 மார்ச், 2010

ராஜபக்சே எதிர்ப்பை மீறி

ராஜபக்சே எதிர்ப்பை மீறி
அய்.நா.குழு இலங்கை வருகை


கொழும்பு, மார்ச் 22_ இலங்கையில் மனித உரிமை வல்லுநர் குழுவை அமைப்பதற்காக அய்.நா. சபை அதிகாரி விரைவில் கொழும்பு வரவுள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததை-யடுத்து இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்து அறிய இக்குழுவை அய்.நா. சபை அமைக்க-வுள்ளது.

இதுகுறித்து அய்.நா. சபையின் ஒருங்கிணைப்-பாளர் நீல் பூனே கொழும்-பில் நடைபெற்ற நிகழ்ச்சி-யொன்றில் கூறியதாவது: அய்.நா. பொதுச்செயலா-ளர் பான் கீ மூனின் அறிவுறுத்தலின்படி இந்த வல்லுநர் குழு அமைக்கப்-பட உள்ளது. இது-தொடர்-பாக ஆலோசனை நடத்த ஏப்ரலில் அய்.நா. சபை மூத்த அதிகாரி ஒருவர் வரவுள்ளார்.

இலங்கையில் தற்-போதுள்ள மனித உரிமை நிலைமை, இலங்கைக்குத் தேவையான உதவிகள் குறித்து அய்.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம் எடுத்துச் சொல்வதற்கு இந்தக் குழு அமைக்கப்-பட-வுள்ளது. மேலும் இலங்கையில் மனித உரி-மையை நிலைநாட்ட என்னென்ன செய்யலாம் என்றும் அந்தக் குழு இலங்கை அரசுக்கு ஆலோ-சனைகளை வழங்கும் என்றார் அவர்.

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக் குழு தேவையில்லை என்று அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இலங்கையில், அய்.நா.வின் மனித உரிமைக் குழு அமைப்பது தேவையில்-லா-தது; சட்டப்படி உரிமை-யற்றதும்கூட என்று ராஜ-பக்சே எதிர்ப்பு தெரிவித்-தார்.

மேலும் பான் கி மூனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது கருத்தையும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது-தொடர்பாக பான் கி மூனுக்கு கடிதமும் எழுதி-யிருந்தார். இந்நிலையில் இலங்கையின் எதிர்ப்பை-யும் மீறி மனித உரிமைக் குழு அமைப்பதற்காக அய்.நா. மூத்த அதிகாரி ஒருவர் கொழும்புக்கு வர-வுள்ளது குறிப்பிடத்-தக்கது.