வெள்ளி, 31 டிசம்பர், 2010

தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?



தமிழ் மாதம் என்பது சித்திரை,வைகாசி எனத் துவங்குகின்றன.இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.

பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே
அந்த மாசத்தின் பெயராக இருக்கும்.அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

அனேகமாக சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் சித்திரை மாசத்தில் பௌர்ணமி வரும்.அதனால் சித்திரை மாசம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி.மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம்.தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு.பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும்.முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம்.அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.


ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமிய வருவதால் மாகி என்றாயிற்று.இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும.அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.

தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.

சுறவம் முதல் சிலை வரையிலான அய்யன் வள்ளுவன் ஆண்டே தமிழாண்டு.
தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.


பிரபவ முதல் அட்சயவரை உள்ள 60 ஆண்டுகள் நமது தமிழ் ஆண்டுகள்
இல்லை என்பது தமிழ் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இதில் வரும்
ஆண்டுகளின் பெயர் ஒன்றுகூட தமிழில்லை. 60 ஆண்டுகளும் பற்சக்கர
முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தை கணக்கிடுவதற்கு
உதவியாக இல்லை. இதற்கு வழங்கும் கதையோ அறிவுக்கும், அறிவியலுக்கும்,
காலத்திற்கும், கருத்துக்கும் பொருத்தமாக இல்லை.


இவ்வாறு தமிழருக்கு தமிழில் தொடராண்டு இல்லாத குறையை உணர்ந்த
தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர்.

1921-
ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு
எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை

[
மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும்
முடிவெடுத்தனர்.


ஆங்கில ஆண்டுடன் 31 -யைக் கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு.

2002 + 31 = 2033.
தமிழக அரசு திருவள்ளுர் ஆண்டு முறையை 1971 முதல்
நாட்குறிப்பிலும் 1972 -ல் அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து
அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.


தமிழ் திங்கள் (மாதம்)

```````````````````````````````
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.


அவை:--

1.
சுறவம் (தை)

2.
கும்பம் (மாசி)

3.
மீனம் (பங்குனி)

4.
மேழம் (சித்திரை)

5.
விடை (வைகாசி)

6.
ஆடவை (ஆனி)

7.
கடகம் (ஆடி)

8.
மடங்கல் (ஆவணி)

9.
கன்னி (புரட்டாசி)

10.
துலாம் (ஐப்பசி)

11.
நளி (கார்த்திகை)

12.
சிலை (மார்கழி)



இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.


1. மே"ம் 2. ரி"பம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி

7.
துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்.


என்னும் பன்னிரண்டு ராசி(ஓரை)களில் கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,மீனம்
ஆகிய ஐந்தும் தமிழ்ப் பெயர்களே.


மே"ம், ரி" பம், மிதுனம், சிம்ம, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய
ஏழு பெயர்களும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.


அவை முறையே மேழம், விடை, ஆடவை, மடங்கல், நளி, சிலை, சுறவம்
என்று தமிழில் பாவாணர் அவர்களால் மீட்கப்பட்டது