செவ்வாய், 4 ஜனவரி, 2011

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!:

கவிதை
பதிந்தவர்: நிர்வாகம் திங்கள், 3 ஜனவரி, 2011

அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!

என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?

அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..

குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..

என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?

தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..

கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..

இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..

உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !

மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!

அண்ணன் 03.01.2011                                                           நன்றி -www.vannionline.com 

வெள்ளி, 31 டிசம்பர், 2010

தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?



தமிழ் மாதம் என்பது சித்திரை,வைகாசி எனத் துவங்குகின்றன.இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.

பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே
அந்த மாசத்தின் பெயராக இருக்கும்.அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

அனேகமாக சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் சித்திரை மாசத்தில் பௌர்ணமி வரும்.அதனால் சித்திரை மாசம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி.மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம்.தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு.பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும்.முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம்.அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.


ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமிய வருவதால் மாகி என்றாயிற்று.இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும.அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.

தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.

சுறவம் முதல் சிலை வரையிலான அய்யன் வள்ளுவன் ஆண்டே தமிழாண்டு.
தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.


பிரபவ முதல் அட்சயவரை உள்ள 60 ஆண்டுகள் நமது தமிழ் ஆண்டுகள்
இல்லை என்பது தமிழ் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இதில் வரும்
ஆண்டுகளின் பெயர் ஒன்றுகூட தமிழில்லை. 60 ஆண்டுகளும் பற்சக்கர
முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தை கணக்கிடுவதற்கு
உதவியாக இல்லை. இதற்கு வழங்கும் கதையோ அறிவுக்கும், அறிவியலுக்கும்,
காலத்திற்கும், கருத்துக்கும் பொருத்தமாக இல்லை.


இவ்வாறு தமிழருக்கு தமிழில் தொடராண்டு இல்லாத குறையை உணர்ந்த
தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர்.

1921-
ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு
எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை

[
மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும்
முடிவெடுத்தனர்.


ஆங்கில ஆண்டுடன் 31 -யைக் கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு.

2002 + 31 = 2033.
தமிழக அரசு திருவள்ளுர் ஆண்டு முறையை 1971 முதல்
நாட்குறிப்பிலும் 1972 -ல் அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து
அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.


தமிழ் திங்கள் (மாதம்)

```````````````````````````````
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.


அவை:--

1.
சுறவம் (தை)

2.
கும்பம் (மாசி)

3.
மீனம் (பங்குனி)

4.
மேழம் (சித்திரை)

5.
விடை (வைகாசி)

6.
ஆடவை (ஆனி)

7.
கடகம் (ஆடி)

8.
மடங்கல் (ஆவணி)

9.
கன்னி (புரட்டாசி)

10.
துலாம் (ஐப்பசி)

11.
நளி (கார்த்திகை)

12.
சிலை (மார்கழி)



இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.


1. மே"ம் 2. ரி"பம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி

7.
துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்.


என்னும் பன்னிரண்டு ராசி(ஓரை)களில் கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,மீனம்
ஆகிய ஐந்தும் தமிழ்ப் பெயர்களே.


மே"ம், ரி" பம், மிதுனம், சிம்ம, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய
ஏழு பெயர்களும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.


அவை முறையே மேழம், விடை, ஆடவை, மடங்கல், நளி, சிலை, சுறவம்
என்று தமிழில் பாவாணர் அவர்களால் மீட்கப்பட்டது


செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அயோத்தி: இறுதித் தீர்ப்பு

செப்டம்பர் 24




வரும் 24 ஆம் தேதி அன்று - அயோத்தி தொடர் பான - நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பிரச்சினை செய்யப்பட்ட - அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதற்கான தீர்ப்பு இது.



தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், கலவரம் வெடிக்கும் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக விரிவாகச் செய்யப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.



ஏதோ அயோத்தியில் மட்டுமல்ல; இந்தியா முழுமையுமே அதன் பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துணை இராணுவப் படை உள்பட களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.



தீர்ப்பு பாதகமாக இருந்தால் உச்சநீதிமன்றத் திற்குச் செல்லுவோம் என்று இப்பொழுதே லால்கிஷண் அத்வானி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.



நீதிமன்றம் கூறும் ஒரு தீர்ப்பு நாட்டில் கலவரங்களை உண்டாக்கும் என்ற ஒரு நிலை - நாடு நாகரிகத் துடன்தான் இருக்கிறது என்பதற்கு அடையாளமா?



மதம் என்றால் ஒழுக்கத்தை வளர்க்கக் கூடியது என்று சொல்லுவதெல்லாம் எவ்வளவு பெரிய மோசடி என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?



மதம் யானைகளுக்குப் பிடிக்கலாம்; ஆனால், மனிதனுக்குப் பிடிக்கலாமா? மதம் யாருக்குப் பிடித் தாலும் அது ஆபத்துதான் என்பது யதார்த்தமானது.



மத சம்பந்தமான இதுபோன்ற பிரச்சினையில் - ஏற்கெனவே ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் எந்த நிலைப்பாடோ அது தொடரும் என்று ஒரு முடிவு எடுக் கப்பட்டு இருந்தது. அயோத்தி பிரச்சினையில் அது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது புதிராக உள்ளது.



இந்த ஒரு பிரச்சினையோடு இது முடிந்துவிடக் கூடியதுதானா? வேறு சில இடங்களில் உள்ள வழி பாட்டு நிலையங்கள்பற்றியும் பிரச்சினை எழுப்பப்பட் டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்திக்க வேண்டாமா?



இன்றைக்கு இருக்கிற பெரும்பான்மைக் கோயில் கள் ஒரு காலகட்டத்தில் புத்த விகார்களாக இருந் திருக்கின்றன என்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் உண்டே!



திருப்பதி வெங்கடாசலபதி கோயிலே புத்த விகாராக இருந்ததுதான் என்று ஆய்வுகள் கூறு கின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி கோயில் தாராதேவி ஆலயம் என்பதற்கும், ஏகாம்பரநாதர் கோயில் புத்தர் கோயில் என்பதற்குமான ஆதாரங் களை மயிலை சீனி. வெங்கடசாமி பவுத்தமும் - தமிழும் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.



பல இந்துக் கோயில்களின் இடிபாடுகளில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் பிரச்சினை எழுப்பும் இந்துத்துவாவாதிகள், இந்தப் பிரச்சினைகளையும் திறந்த மனத்தோடு எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.



அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் - ராமன் பிறந்த இடம்தான். இதனை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது - இது எங்கள் நம்பிக்கைப் பிரச்சினை என்று இந்துத்துவாவாதிகள் தொடக்க முதலே கூறிக் கொண்டுதான் வந்திருக்கின்றனர்.



பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இஸ்லாமியர் களுக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றம் கூறினால், அதனை இந்துத்துவாவாதிகள் காவிக் கூட்டம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கான முன்னோட்டமாகத்தான் தொடர்ந்து அவர்கள் கூறிக்கொண்டு வந்ததாகும்.



நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்ட தகவல் களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே! பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயியையும் சம்பந்தப்படுத்தி அந்த ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், பூமிக்கும், ஆகாயத்துக்குமாகத் தாவிக் குதிக்கவில்லையா? நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்க வில்லையா?



மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்ற கருத்துகளை எடுத்துக்கூறி வக்காலத்து வாங்கிப் பேசும் சோ ராமசாமி போன்றவர்கள், லிபரான் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல்தானே எழுதுகோலைப் பிடித்தனர்.



இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று கூக்குரல் போடுபவர்கள், இசு ரேலுடன் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை வெளியில் இருந்து அறிவிக்கத் திட்டம் போட்டவர்கள், நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.



தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக இருந்து சங் பரிவார்க் கும்பல் கலவரங்களில் ஈடுபட்டால், அதோடு அந்த அமைப்புகளுக்கு முடிவுரை எழுதுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்பதே நாட்டின் நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும். நடுவண் அரசு இதில் தெளிவாக இருந்தாகவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
                                   http://www.viduthalai.in/

புதன், 15 செப்டம்பர், 2010

அனுமதியற்ற கோயில்களை அகற்றுக!

அகற்றாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வரவேண்டும்!

உச்சநீதிமன்றம் கண்டிப்பு

தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதி பெறாதவை

 
புதுடில்லி, செப். 15- பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமலோ, வேறு இடங்களுக்கு மாற்றா மலோ இருக்கும் மாநி லங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூறவேண் டும் என்று உச்சநீதி மன்றம் கண்டிப்பான ஓர் ஆணையை செப் டம்பர் 14 இல் பிறப் பித்தது.

தங்களுடைய பதிலை அளிப்பதற்கு உச்சநீதி மன்ற அமர்வு (பெஞ்ச்), இரண்டு வார கால அவ காசம் அளித்துள்ளது. பலமுறை இதைப்பற்றிய விசாரிப்பு நடந்தும், பல மாநிலங்கள், இதைப் பற்றிய பிரமாணப் பத் திரமோ, நடவடிக்கை எடுத்துள்ளதுபற்றிய தகவலோ தரவில்லை என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தன் அதிருப் தியைத் தெரிவித்தது.

தமிழ்நாட்டின்தான் அதிகம்

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற வழி பாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிக மாகும். 77,450 கோயில் கள் தமிழ்நாட்டிலும், 58,253 ராஜஸ்தானிலும், 15,000 குஜராத்திலும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் கட் டப்பட்டுள்ளன.

அருணாசலப் பிர தேசத்தில் பொது இடத் தில் ஒரு வழிபாட்டுத் தலம்கூட இல்லை என்று அம்மாநில அரசு வழக் கறிஞர் குறிப்பிட்டதைக் கேட்டு, அது மிகவும் நாகரிகமான மாநிலம் என்ற புகழ்ச்சியை உச்ச நீதிமன்றத்திடம் பெற்றது.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவா ரங்கள் மற்றும் பிற வழி பாட்டு இடங்களைப் பொது இடங்களில் இருந்தும், பாதைகளில் இருந்தும் அகற்றுமாறும், அவை போக்குவரத் துக்கு இடைஞ்சல் என் றும், நெரிசலை உண் டாக்குகின்றன என்றும், கூட்ட நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின் றன என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.

அனுமதி பெறாதவை

உச்சநீதிமன்றத்தின் பல விசாரணைகள் இது குறித்து நடந்தன. அப் பொழுது மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், அனுமதியற்ற வழிபாட்டு இடங்களை அகற்றி விடுவதாகவும், அவற்றால் உண்டாகும் அசவுகரியங்களைத் தாங்களும் உணர்வதாக வும் தெரிவித்திருந்தன. ஆனால், சொன்னதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எதுவும் நடைபெற வில்லை. 2009 ஆம் ஆண் டில், மத்திய, மாநில அரசுகள், அனுமதி பெறாத கோயில்களைத், தெருக்கள், சாலைகள், பூங்காக்கள் முதலிய இடங் களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக

திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:
1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?

13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?

19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?

36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?

41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46) அவைத் தனித்தனி கடவுள் களா?

47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?

55) மலையரசன் மகனென்றால் என்ன?

56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?

58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?

60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?

61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?

64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69) வருணாசிரமம் உண்டா?

70) உண்டென்றால் ஆதாரம் எது?

71) இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?

73) சைவ மடங்கள் எதற்கு?

74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?



-