புதன், 17 மார்ச், 2010



தமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் மீதான அழுத்தங்களை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது: கரன் பாக்கர்17. 03. 2010, (புதன்),
செய்திகள்தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 ஆவது கூட்டத்தொடரில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக கல்வி அபிவிருத்தி குழு உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. சபையின் உறுப்பினர்களுக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் என்பன தொடர்பில் நாம் தகவல்களை வழங்கியுள்ளோம். பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களை நாம் (பந்தி 86) வரவேற்கிறோம். இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான விதிகள் மீதான வன்முறைகள் தொடர்பான விவகாரங்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இனஅழிப்பு நடவடிக்கைகளும், வேறு சந்தர்ப்பங்களில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் பூகோள அரசியல் ஈடுபாடுகள் அது தொடர்பான விவாதங்களை புறம்தள்ளியுள்ளன. துருக்கியை எடுத்துக்கொண்டால், 3,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து குர்திஷ் இன மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிலர் மீண்டும் திரும்பியபோதும், அவர்களின் நிலமைகள் மிக மோசமாகவே உள்ளன. இந்த காலகட்டத்தில் துருக்கிக்கு பிரதான ஆயுத விநியோகத்தை அமெரிக்காவே மேற்கொண்டு வந்தது. எனவே குர்திஷ் இன மக்களின் எதிர்காலம் என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் பலரும் இன்றுவரை முகாம்களில் உள்ளனர். இந்த நிலமைகளை பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டும் என பந்தி 68 இல் நாம் கேட்டிருந்தோம். மனிதாபிமான நடவடிக்கைகளின் குறைபாடுகள், நாட்டின இறைமை என்ற போர்வையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாது தடுத்தல், உயர் பாதுகாப்பு வலையத்தின் பிரகடனம் போன்றவை தமிழ் மக்களை அவர்களின் செந்த இடங்களுக்கு திரும்புவதையோ அல்லது தமது சொத்துக்களை பார்வையிடுவதையோ தடுத்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிறீலங்கா அரசு சிங்கள மக்களையும், படையினரையும் குடியமர்த்தி வருகின்றது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது. இந்த இடம்பெயர்வுகள் மனிதநேய விதிகளின் கீழ் போர்க்குற்றங்களாகவே கருதப்படும் என பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அது குறித்து செயற்திறனற்று இருப்பது மனிதாபிமான விதிகளை மோசமாக பலவீனப்படுதும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக