ஞாயிறு, 21 மார்ச், 2010

திருமணமான மகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு உரிமை உண்டு

நீதிமன்றம் தீர்ப்பு



பெங்களூரு, மார்ச் 21_ இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மூதாதை-யரின் பூர்வீக சொத்தில் திருமணமான மகளுக்கும் சம பங்கு உண்டு என்று கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சொத்து கொடுக்க மறுப்பு

பெங்களுருவைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண்ணுக்கு அவரது சகோதரர்கள் மூதாதை-யர் சொத்தில் பங்கு கொடுக்க மறுத்தனர். திருமணமான பிறகு சொத்-தில் உரிமை கொண்-டாட முடியாது என்று கூறினர்.

இதையடுத்து அந்தப் பெண் கருநாடக உயர்-நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என். குமார், ஏ.என். வேணுகோ-பால், கவுடா ஆகி-யோரைக் கொண்ட அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

கூட்டு வாரிசுரிமை கொண்ட பாரம்பரிய அல்லது மூதாதையரின் சொத்தில் திருமணமான மகளுக்கு சம பங்கு உண்டு.

1956-ஆம் இந்து வாரிசு-ரிமைச் சட்டம் அம-லுக்கு வந்த நாளில் இருந்து நிலுவையில் உள்ள எல்லா வழக்கு-களுக்கும் இது பொருந்தும்.

இந்த வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-_ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மிக முக்கியமானது. இதன்படி ஓர் இந்துப் பெண் தனது பிறப்பால் மூதாதையர் சொத்துக்கு உரிமை படைத்தவர்களாக இருந்-தார்-கள். இந்த சட்டத் திருத்தம் அமலாக்க தேதி டிசம்பர் 24, 2004 என்ப-தால் இந்த காலக்கட்டத்-திற்குப் பிறகு தான் மூதா-தையர் சொத்தில் மகள் பங்கு கேட்க முடியும்.

சொத்து கேட்பதை தடுக்க முடியாது

எனினும் 2004 டிசம்-பருக்கு முன்பே வாய் வழி ஒப்பந்தம் மூலம் சொத்து பிரிக்கப்பட்டு இருந்தால்கூட சொத்தில் பங்கு கேட்பதில் இருந்து பெண்களை தடுக்க முடியாது.

பதிவு செய்த பாகப்-பிரிவினை தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வந்த சொத்துகள்-மீது மட்டும் தான் பங்கு கேட்டு வழக்கு தொடர முடியாது.

இவ்வாறு தீர்ப்பில்-கூறப்பட்டுள்ளது.

இந்த நீண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி என். குமார் கூறுகையில், ஒரு மகன், தனக்கு மனைவி வரும் வரை தான் பெற்-றோருக்கு மகன்; ஆனால் ஒரு பெண், வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு மகளாகவே இருக்கிறார் என்றார்.
                                                                         விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக