வியாழன், 27 மே, 2010

கா.அப்பாதுரையார்

எப்பாத் துறைக்கும்

இவனோர் பழம்புலவன்

அப்பாத் துறை யறிஞன்

ஆழ்ந் தகன்ற - முப்பாலே

நூலறிவு நூறு புலவர்கள் சேரினவன்

காலறிவு காணார் கனிந்து -

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப்பட்ட பன்மொழிப் பெரும் புலவர் கா. அப்பாதுரையார் நினைவு நாள் இந்நாள் (1989).

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்-கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்-களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு.

தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.

ஷேக்ஸ்பியர் கவிதைக் கொத்து (1941) இன்ப மலர் (1945), சிறுகதை விருந்து (1945), விந்தன் கதைகள், புத்-தார்வக் கதைகள், பலநாட்டு சிறுகதைகள், ஆண்டியின் புதையல் (1953) நாட்டுப் புறச் சிறுகதைகள் ( 1954) ஷேக்ஸ்பியர் கதைகள், கட்டுரை முத்தாரம், எண்-ணிய வண்ணம், செந்தமிழ்ச் செல்வம், தளவாய் அரிய-நாதர், குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, பிளாட்டோவின் குடியாட்சி, வருங்காலத் தலைவர்-களுக்கு என்ற எண்ணிறந்த நூல்களை யாத்த பெரு-மகன் ஆவார்.

திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக் கவிஞர் முக்கிய காரணமாவார்.

விடுதலை, லிபரேட்டர் ஏடுகளுடன் அப்பாதுரை-யார் அவர்களுக்கு நெருக்-கம் அதிகமாகும்.

செந்தமிழ்ச் செல்வம், கலைமாமணி, விருதுகள் தமிழ்நாடு அரசால் இவ-ருக்கு அளிக்கப்பட்டன.

5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், சங்கராச்சாரி_ யார்? என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றியனார். அன்று அக் கூட்டத்திற்கு அப்பா-துரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அதில் திடுக்கிடும் ஓர் அரிய தகவலை வெளி-யிட்டார். ஆதி சங்கரர் கடைசியாக எழுதிய நூல் மனேசாப் பஞ்சகம் என்-பதாகும். அதில் ஒரு சுலோ-கம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதி-சங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார் என்ற தகவலைக் கூறினார். (விடுதலை, 15.6.1983).

அப்பாதுரையார் அவர்-கள் பற்றி அறிவுச் சுரங் கம் அப்பாதுரையார் என்னும் அரிய நூலை முகம் மாமணி எழுதியுள்-ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்-கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி ரூ.10 ஆயிரம் பரிசளிக்கிறார்.

- மயிலாடன்


www.viduthalai.com

ஞாயிறு, 16 மே, 2010

ஏன்? ஜாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கணக்கிட்டால், சமூக நீதிக்கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்திட வலுவான ஆதாரங்களைத் தந்து உதவிடும் என்கிறார் சிறந்த அரசியல் நோக்கரும் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ். தற்போது பெர்லினில் விஸ்சன் ஷாப்ட்ஸ் கோலெக்-இல் இருக்கும் இவர் டெல்லி சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞர்.



தப்பான காரணங்களுக்காகச் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் தந்திரம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பது தொடர்பான அறிவிப்பு அவற்றில் ஒன்று. தெலுங்கானா பிரச்சினையைப் போலவே, நீண்ட காலமாகத் தேங்கிக்கிடக்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுத்தாற் போன்ற தோற்றம்தான், இந்தப் பிரச்சினையிலும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டம் போலவே, நாட்டின் நலன் கருதி கையைப் பிசைந்துகொள்ளும் நிலைதான். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சென்சசில் கணக்கெடுப்பது தொடர்பான அறிவிப்-பும்-கூட, நீண்ட நாள்பட்ட கோரிக்கை மீது முற்-போக்கான முடிவு எடுத்ததைப் போலத் தோன்றினாலும்,சமூக நீதிக்கான திட்டங்களைச் செயல்படுத்திட இது உதவக்கூடியது என்றாலும், வேண்டாவெறுப்புடன் செய்யப்படுவது போலக்காட்சி அளித்துத் தேவையற்ற கெடுத-லான விமரிசனங்களை வழக்கமானவர்களிட-மிருந்து வரவழைத்துவிட்டது.

என்னதான் முடிவு என்பதுபற்றி அரசின் மவுனம், குழப்பத்தைத்தான் மேலும் ஏற்படுத்தி-யுள்ளது. ஊடகங்களின் செய்தித் தலைப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் ஜாதிக் கணக்-கெடுப்பு என்றே கூறுகின்றன. காலனி ஆட்சிக்-காலத்தில் செய்யப்பட்டது. போன்று, இந்து மதத்தின் எல்லா ஜாதி, உள் ஜாதிப் பிரிவு-களையும் கணக்கெடுத்துத் தரம்பிரிப்பது போன்று பிரமையை உருவாக்கி விட்டது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுடன், ஓபிசி பிரிவையும் கணக்கெடுப்பது என்கிற அளவில் குறிப்பிட்ட மாதிரி விவரங்கள் சேகரிப்பது மட்டுமே செய்யப்படவிருக்கிறது என பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வகையில் சொன்னால் கணக்கெடுப்பின்போது, எஸ்.சியா, எஸ்டியா எனக்கேட்பதைப் போல ஓபிசியா என்று மட்டுமே கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் பதிலுக்கேற்ப, ஜாதியின் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். மற்றவர்களின் ஜாதி பற்றிய கேள்வி கேட்கப்படமாட்டாது. தற்போதைய சூழலில், இது மிகவும் நாயமான அணுகுமுறை; ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குச் சரியான வகையில் பொருள் கொள்ளும் முறை ஆகும்.

சதிஷ் தேஷ்பாண்டே கூறியது போல, ஜாதி வாரிக்கணக்கெடுப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவற்றிற்குத் தேவை இல்லை. ஓபிசியினரின் ஜாதி பற்றிய முழு கணக்கெடுப்பை நடத்தினால், 80 ஆண்டுக் காலமாகக் கைக்கொள்ளப்படும் திட்டத்தைத் திருப்பிப் போட்டதாக ஆகாது; என்றாலும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட அணுகு முறைகளை தர்க்க ரீதியாக மாற்றுவதாகவே அமையும். கடந்த காலங்களில், கருநாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பிரத்தி-யேகமாக அமைக்கப்பட்ட கமிஷன்களின் மூலம், இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் முன்னோடியானாதும் சிறப்பான வகையிலும் அமைந்தது எனலாம். இந்திய அளவில் மாதிரி சர்வே ஒன்று மண்டல் கமிஷனால் நடத்தப்-பட்டது. அவற்றையெல்லாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்து செய்யப்படாதது இவ்வகை ஆதாரங்கள் பகுதியாகவும் சரிபார்த்திடாமலும் அமைந்திடும் நிலையில் உள்ளன.

முக்கிய விவரம்

இம்மாதிரிக் கணக்கெடுப்பினால் நமக்கு என்ன விவரம் கிடைக்கும்? நிறைய கிடைக்கும். பல்வேறு ஜாதியினர் தொடர்பான எண்ணிக்கை, பிற்படுத்தப்-பட்ட தன்மை தொடர்பான சோதனை முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொடர்பாக முடிவே இல்லாமல் செய்யப்பட்டுவரும் வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சீரமைத்திடும் செயல்களை நடைமுறைக்குக்கொண்டு வர முடியும். ஓபிசியினரின் எண்ணிக்கை தொடர்பான விவாதங்களுக்கு முடிவு கட்டுவதோடு, அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளையும் கணித்திட பெருமளவு உதவும். ஓபிசி தொடர்பான அனைத்து வகையான எண்ணிக்கை பாலின விகிதம், இறப்பு, பிறப்பு கணக்கு, கல்வி, பள்ளி செல்வோர் எண்ணிக்கை, பட்டதாரிகளின் எண்ணிக்கை முதலிய அனைத்து விவரங்களையும் அறிந்திட இயலும். பொருளாதார நிலை, சொத்துகள், தொழிலாளிகளின் தொகை போன்ற பலவற்றை அறிந்திட முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக, இவ்விவரங்கள் கிடைக்கும். இதன்மூலம் இடஒதுக்கீடு முறையைச் செம்மையாகச் செய்திட முடியும். பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்திடவும் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திடவும் முடியும். சீரமைத்திடும் நடவடிக்கைகளை உருவாக்கிட இது உதவாது, சென்சசில் மிகஅதிக ஊதியம் பெறும் வேலைகளையோ, ஏனைய விவரங்களையோ சேகரிப்பதில்லை என்றாலும், இது ஒரு பெரிய முயற்சிதான்.

(ஓபிசி) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு விருப்புத்திட்டம் அன்று தம்மால் சட்டப்படியும் திட்டப்படியும் அங்கீகரிக்கப்பட்ட சமூகக் குழுக்களைக் கணக்கிடாமல் இருந்திட தற்கால மாநிலங்களால் முடியாது. ஓபிசியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விச்சாலை-களிலும் இடஒதுக்கீடு முதலிய பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதானது அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. சரியான, ஆய்வு முறையிலான ஆதாரங்களை நீதித்துறை அடிக்கடி கேட்கிறது. ஓபிசியினர் பற்றிய கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட 2001 சென்சசிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அப்போதைய சென்சஸ் தலைமைப் பதிவாளர் இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஆனாலும் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசில் புறந்தள்ளப்பட்டு விட்டது.

எது சரியான தருணம்?

சென்சஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் இது சாத்தியமா? எல்லா ஜாதிகள் பற்றிய கணக்கெடுப்பை முழுமையாக நடத்திட தற்போது காலம் கடந்திட்ட நிலை என்றாலும், இதுபற்றிய முடிவு முன்னமேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும், இப்போதைய நிலையிலும், ஓபிசி பற்றிய கணக்கெடுப்பு சாத்தியப்படக்கூடியதே! ஓபிசிகளின் சட்டப்பூர்வப்பெயரான சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தேசியக் கமிஷன் ஏற்கெனவே தயாரித்துள்ளது. நாட்டில் உள்ள ஜாதியினரை அடையாளம்காண இப்பட்டியல் அடிப்-படையாக அமையும். ஒவ்வொரு மாநிலத்திலும் மனித இனக் குழு சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஜாதி, இனங்-களின் பட்டியலை இத்துடன் இணைத்துக்-கொள்ளலாம். மாவட்ட அளவில் இப்படிப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது சிரமமாக இருக்கலாம். ஆனாலும், தொழில், மொழி போன்ற சென்சஸ் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இது தொடர்பான ஆட்சேபணைகள் எல்லாமே தவறாக வைக்கப்பட்டனவே தவிர, விஷமத்தனமானவையல்ல.

கொள்கை அளவிலான எதிர்ப்புகள் என்ன? பொது வாழ்க்கையில் ஜாதிக்கு தரப்படும் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக்கூடிய சங்கடம்-தான். ஆனால், எஸ்சி, எஸ்.டியினரைக் கணக்-கிடும் போது ஓபிசியினரைக் கணக்கெடுப்பதில் என்ன மாதிரியான சிரமம் வந்துவிடும்? இதை அரைநூற்றாண்டுக்காலமாக நாம் செய்து வந்திருக்கிறோம். எந்த ஒரு பிரிவு பற்றியும்-அதிகாரப் பூர்வமாகக் கணக்கெடுக்கும் போது எல்லைகள் மாறலாம். ஒவ்வொருவரும் சந்தித்து-வரும் பிரச்சினை தொடர்பானவர்கள் அங்கீ-கரிக்கப்படாமல் இருந்துவரும் நிலையோடு, அவர்களின் கணக்கெடுப்பு தொடர்பான சிரமங்கள் கணக்கிட்டுப் பார்க்கப்பட வேண்டும். மதப்பிரிவினர் தொடர்பான கணக்கெடுப்பு கள் மதச்சாற்பற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவில் அமைந்துவிடாத வரையில், இனவாரிக் கணக்கெடுப்புகள் அமெரிக்க நாட்டை இனவெறி அரசாக ஆக்காத வரையில், இந்தியாவில் மேலும் ஒரு ஜாதிக் குழுவினரைக் கணக்கெடுப்பதானது இந்தியாவை ஜாதிகளின் சிறைச்சாலை என்று ஆக்கிவிட்டது.

எது எப்படியிருப்பினும், ஜாதிகள் தொடர்பான கண்ணோட்டம் நம் கண்களை மூடாமல் அருகில் சென்று பார்த்திடவும், அடையாளம் கண்டிடவும், சிலரைப் பின்னடைவுக்கு ஒதுக்கு வதற்கும் அது காரணமாக அமைந்திருப்பதைக் கண்டறிந்து அந்த ஜாதி முறை எவ்வாறு சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்க, பாலின பிளவுகளுக்கும் காரணியாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுதான் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஆகும்.

நன்றி: தி ஹிண்டு 15.5.2010
தமிழில்: அரசு

.viduthalai.com

அலைப் பேசியில் பகுத்தறிவுப்பாடல்கள்


பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தமது செல்பேசியில் பகுத்தறிவுப் பாடல்களை பதிவிறக்கம் செய்ய, BT <> ACT <> Song Code டைப் செய்து 56700 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (SMS) செய்யவும். உதாரணமாக கீழ்கண்ட பாடல்களில் ஒன்றை தரவிறக்கம் செய்ய BT ACT 552340 என்று டைப் செய்து 56700 என்ற எண்ணுக்கு அனுப்பினால் பகுத்-தறிவுப் பாடல்கள் உங்கள் கைத் தொலை-பேசியை வந்தடையும்.

பாடல் தலைப்பு

பாடல் குறியீட்டு எண்

தமிழினத்தின் 552340

எங்கும் இருக்கின்றார் 552360

ஜாதி ஜாதி 552351

தொண்டு - (௨)552331

நம் நாடு நம் நாடு - (1)552358

பெரியாரை - 552332

தோழா வா தோழா - 552333

அவர்தான் வீரமணி - 552345

உலகாண்டிடும் தலைவர் - 552357

தோழர்களே - 552336

தாலியாம் தாலி - 552356

தமிழரெல்லாம் மானத்தோடு - 552355

தொண்டு - 1 - 552337

பெண்ணே! பெண்ணே! திரும்பிப் பார் -552352

சகுனம் பாத்து - 552339

தன்மான சிங்கமே - 552353

செந்தமிழ் நாட்டினிலே - (1 ) 552338

ஆடு மயிலே - 552362

பெரியார் பெரியார் - 552343

பொன்னுறவாகிய - 552335

பார் உலகில் - 552349


வான் தவழும் - 552350

நம் நாடு நம் நாடு - 552354

ஈரோட்டுச் சிங்கமடா - 552361

செந்தமிழ் நாட்டினிலே - 552334

இன்னும் அடிமையா? - 552341

அய்யாவின் - 552348

அவர்தாம் பெரியார் - (1 ) 552359

அவர்தாம் பெரியார் - (2 )552344

பக்தி வந்தா... - 552346

பத்துவயதில் - 552342

பெரியார் திடல் - 552347


செவ்வாய், 4 மே, 2010

ஒற்றைப்பத்தி

மனோரமா

கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்துவிட்டுத் திரும்பு-பவர்கள் விபத்தில் பலியாகி மரணம் அடையும் பரிதாபச் செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.

திருவாரூரையடுத்த எட்டுக்குடி முருகன் கோயி-லுக்குச் சென்று வந்த சென்னை திருவொற்றியூ-ரைச் சேர்ந்த பக்தகள் 5 பேர் சாலை விபத்தில் பரி-தாபமாகப் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டனர் என்பது நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் (29.4.2010).

அதேபோல, கேரள மாநிலம் கானூர் மற்றும் பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேளாங்-கன்னிக்கு மாதாவைத் தரி-சிக்க காரில் வந்தபோது திரு-வாரூர் அருகே அம்மையப்-பன் அருகே நின்று கொண்-டிருந்த லாரிமீது மோதி அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள் என்பது ஏப்ரல் 30 ஆம் தேதி ஏடு-களில் இடம்பெற்ற தகவல்.

ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால், இதுபோல ஆயிரம் ஆயிரம் விபத்து-கள்; அதில் ஆயிரம் ஆயி-ரம் பக்தர்கள் மரணம்!

இவ்வளவுக்குப் பிறகும் கடவுள், கோயில், பக்தி, தரி-சனம், நேர்த்திக் கடன் என்று மக்கள் அலைகிறார்-கள் என்றால், அவர்களின் பக்தியை, புத்தியை என்ன-வென்று சொல்ல!

ஒருகணம் சிந்தித்தால், புத்திக்கு வேலை கொடுத்-தாலே நல்ல முடிவுக்கு வந்துவிடலாமே!

கோயில்களும் சரி, அதற்குள் வைக்கப்பட்டிருக்-கும் கடவுள் சிலைகளும் சரி, மனிதனால் உருவாக்கப்-பட்டவைதானே!

ஓசையுள்ள கல்லை நீர்

உடைத்து ரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை

மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு வைத்த கல்லில்

பூவும் நீரும் சாத்துறீர்!

ஈசனுக்கு உகந்த கல்லு

எந்த கல்லு சொல்லுமே!

என்று சித்தர் பாடினாரே _ கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

இப்பொழுது ஒரு தகவல் தமிழ்த் திரைப்பட உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மனோரமா! திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவில் அவருக்கு மக்கள் கலையரசி என்று பட்டம் கூட வழங்கப்பட்டது. அதற்குத் தகுதியானவர் அவர் என்பதில் அய்யமில்லை.

அவருக்கு மூட்டு வலி-யாம். வயதான காலத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரக்கூடிய தொல்லைதான் இது. இதற்காக கேரளா சென்று ஆயுர் வேத சிகிச்சைகூட எடுத்துக்கொண்டாராம்; குணமாகவில்லையாம்.

அடுத்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தாராம் _ வேலை ஆகவில்லை. இறுதியில் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்-கொண்டு காரில் திரும்புகையில், விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்பதே நமது ஆவல்!

இதற்குப் பிறகாவது மனோரமாக்கள் திருந்துவார்களா? திருந்தவேண்டும் என்-பதே நமது வேண்டுகோள்.

மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?

- மயிலாடன்
www.viduthalai.com

சனி, 1 மே, 2010

புரட்சிக்கவிஞரின்அறிவியல்பார்வை



நெல்லை சு.முத்து

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அறிவியலும், கவிதையுமாகத் தமிழ் பரப்பியவர் புரட்சிக்கவி பாரதிதாசன். எதிலும் சமுதாயக் கண்ணோட்டம், பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் குறைவில்லை. பாவேந்தரின் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, துணுக்கு போன்ற எல்லா ஊடகங்களிலும் அடிநாதமாக இழையோடும் அறிவியல் கருத்தாழத்தையும், தமிழின் முன்னேற்றத்தையும் எடுத்தெழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.



இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.

கால விரைவினைக்

கடக்கும் வானூர்தி

ஞாலப் பரப்பினைச்

சுருக்கிற்று பார்நீ.

தொலைபேசித் தொடர்பு

தோழமை நட்பு

அலைகடல் மலையை

அறிந்து பெட்பு

வானொலி யாலே

வைய மொழிகள்

தேனொலி யாயின

திக்கெலாம் கனிகள்.

ஏவுகணைகள்

கோள்விட்டுக் கோளைத்

தாவின எங்குமே

நாம் செல்வோம் நாளை.

இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-_2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா _விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு - பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி.

நிலவில் மாந்தர் இறங்கும் நாள்

நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.

ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.

இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய

விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ

சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்

ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே

இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்

ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே

அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:

உங்கள் தெரு வீட்டின்முன்னே

மாடு கட்டி இருக்கும் - _அங்கு

உள்ள சாணி சிறுநீரில்

கொசுக்கள் நோயைப் பெருக்கும்.

அங்கங்கேயும் வீட்டெதிரில்

குப்பைக் கூளம் கிடக்கும் _- எனில்

அதனை நாயும் கோழியும்போய்

கிளறிக் காற்றைக் கெடுக்கும்

தங்குழந்தை தெருவில் பகலில்

வெளிக்குப் போகக் கண்டு _- நல்ல

தந்தையரும் இருட்டினிலே

செய்வார் அந்தத் தொண்டு

கிண்டலைப் பாருங்கள்.

புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,

புகைச்சுருட்டால்

மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை

முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,

ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் _- நல்.

ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்

எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.

நன்றி: தீக்கதிர், 26.4.2010

பார்ப்பான் வயிறு

திருப்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அப்-பொழுது திருப்பதி ஏழு-மலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு, முகேஷ் அம்பானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, கோவி-லின் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதமும் செய்தார்.

இது கோவில் விதி-முறைகளுக்கு எதிரானது, முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலுக்குள்தான் தலைமை அர்ச்சகர் பிர-சாதம் வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறியது ஏன் என்பதற்கு 10 நாள்-களுக்குள் பதில் அளிக்க-வேண்டும் என்று குறிப்-பிட்டு, தலைமை அர்ச்சகர் ஏழுமலையான் கோயில் அதிகாரி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் (தினத்தந்தி, 29.4.2010, பக்கம் 3).

அனைத்து ஜாதியின-ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று ஒரு அரசு சட்டம் செய்தால் _ ஆகம விதிகளைத் தூக்-கிக் கொண்டு உச்சநீதிமன்-றம் வரை இந்த உச்சிக் குடுமிகள் ஓடுகிறார்கள். அதேநேரத்தில், முகேஷ் அம்-பானி போன்ற பெரும் பண முதலாளிகள் என்-றால், கோயில் சம்பிரதா-யங்-களை மலம் துடைக்-கும் காகிதமாகக் கருதி வேறு மாதிரியாக நடந்து-கொள்கிறார்கள்.

ஆங்கிலப் பிறப்பின்-போது, ஜனவரி முதல் தேதி இரவு முழுவதும் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. அவ்வாறு செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியாரும், இராம-கோபாலனும் கரடியாகக் கத்துகின்றார்கள். எந்தக் கோயில் அர்ச்சகரும் அதுபற்றி எல்லாம் காதில் வாங்கிக் கொள்வது கிடை-யாது. காரணம், அர்ச்-சனை என்ற பெயராலே பார்ப்-பனர்களின் கல்லாப்-பெட்டி நிரம்பி வழியுமே! அதுவும் _ முகேஷ் அம்-பானி என்றால் லகரத்தில் தானே தொகை இருக்கும்.

சம்பிரதாயங்கள் ஆக-மங்-களைப் பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? பணம்தான் பாதாளம்-வரை பாயுமே! ஏழுமலை-யா-னைப்-பற்றி மற்றவர்களை-விட அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத்தான் நன்னா தெரியும். அது அடித்து வைக்கப்பட்ட குத்துக்-கல்லு அல்லது அய்ம்-பொன் பொம்மை என்று அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத் தெரியாதா என்ன?

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா என்று அன்று சுவர் எழுத்தாளர் சுப்பை-யன் எழுதியதுதான் நினை-வுக்கு வந்து தொலை-கிறது!

- மயிலாடன்