புதன், 17 மார்ச், 2010


மே 28-ல் கேரளம் செல்லும் வாகனங்கள் மறிப்பு: ம.தி.மு.க.


முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராக செயல்படும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மே 28}ம் தேதி தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் அனைத்து வாகனங்களையும் மறிப்பது என்று ம.தி.மு.க. தீர்மானித்துள்ளது.
÷ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு மற்றும் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். பொருளாளர் ஆர். மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்பட 100}க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
÷கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
÷"தமிழகத்துக்கு வரும் தண்ணீரை மறித்தால், தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் பொருள்களைத் தடுப்போம்; நிரந்தர பொருளாதார முற்றுகை செய்வோம்" என்று கேரள அரசை எச்சரிப்பதற்காக, தமிழகத்தில் இருந்து கேரளம் செல்லும் அனைத்து சாலைகளும் ம.தி.மு.க. சார்பில் மே 28}ம் தேதி மறிக்கப்படும்.
மின் வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது. பெரும்பாலான நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஏப்ரல் 7}ம் தேதி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அமைப்புத் தேர்தல்: ம.தி.மு.க.வின் பிரசாரப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் "மறுமலர்ச்சி கொடிப் பயணம்' தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ பயணம் மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான இடங்களில் கட்சி கொடியேற்றி உள்ளார். மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் இந்த கொடி பயணம் விரைவில் நடத்தப்படும். கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர், ம.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக