செவ்வாய், 16 மார்ச், 2010


இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது! ஏனைய 1000 பேர் பற்றிய விபரங்கள் இல்லை!!
இவ் விடயம் 16. 03. 2010, (செவ்வாய்), தமிழீழ நேரம் 12:43க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திஇரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 000 இற்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு அமைப்பு 10 781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் ஏனைய 1000 பேர் அளவான பற்றிய விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தகவல் வெளியிடப்பட்டவர்களில் 19 – 24 அகவைக்குட்பட்டவர்கள் 4580 பேர்கள் எனவும் 25 – 34 அகவைக்குட்பட்டவர்கள் 4220 பேர்கள் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 19 அகவைக்குட்பட்டவர்கள் பற்றிய தொகையை வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

வெளிவிடப்பட்ட தகவல்களின் படி 8791 ஆண்களும் 1990 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர்களில் 1422 பேர் ஊனமடைந்தவர்களாகும்.

குறித்த 1422 மாற்றுவலு தேவைப்படுவோரின் மேலதிக விபரங்கள் வருமாறு:

முழுமையாக காது கேட்கும் திறன் இழந்தவர்கள் – 04
காது கேட்கும் திறன் பாதிப்படைந்தவர்கள் – 01
முழுமையான கண் பார்வை இழந்தவர்கள் - 03
கண் பார்வை இழந்தவர்கள் - 144
இரண்டு கால்களும் முழுமையாக இழந்தவர்கள் - 05
ஒரு கால் இழந்தவர்கள் - 686
இரண்டு கைகளையும் இழந்தவர்கள் - 17
ஒரு கை இழந்தவர்கள் - 387
ஏனைய உடல்உறுப்புகளை இழந்தோர்கள் - 175
மார்ச் மாதம் முதலாம் திகதி கணக்கெடுப்பின்படி இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் 17 தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 108 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருந்தவர்கள் எனவும் 150 பேர் அளவில் பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுரை 900 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் 11 000 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானார் இப்பதிவுகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெளியாகியிருந்த செய்திகளின்படி 11000 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் பண்ணைகளை அமைத்து அங்கு தடுத்துவைத்து பண்ணை வேலைகளில் ஈடுபடவைத்து தொடர்ந்தும் தடுத்துவைக்கும் சிறிலங்கா அரசின் திட்டம் ஊடகங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி திருமணம் செய்துள்ளவர்களையும் குடும்பமாக தடுப்புமுகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புதுமுறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தகவல் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக