சனி, 3 ஏப்ரல், 2010

மூலத் திராவிட மொழிக்குச்


குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சகோதர மொழிகளாகும். வேற்-றுமை மனப்பான்மை-யோடு பார்க்கும் மன நிலையை மாற்றிக் கொண்டு நாம் அனை-வரும் திராவிடர், மூலத் திராவிட மொழிக்குச் சொந்தக்காரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கருத்தரங்கில் பெருங்-கவிக்கோ வா.மு. சேது-ராமன் பேசினார்.



செம்மொழித் தமி-ழாய்வு மத்திய நிறுவ-னத்தின் நிதி நல்கையில், குப்பம் திராவிடப் பல்-கலைக் கழகத் தமிழ்த் துறையின் சார்பில் திரா-விட மொழிகளின் ஒப்பி-லக்கியக் கருத்தரங்கின் தொடக்க விழா மார்ச் 31 ஆம் நாள் காலை 11 மணி-யளவில் தொடங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராக. விவே-கானந்த கோபால் வர-வேற்புரை கூற, திராவிட மொழிகளின் ஒப்பிலக்-கியப் புலத்தலைவர் பேராசிரியர் ஜி. லோகநாத ரெட்டி தலைமையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தொடக்க
வு-ரை-யாற்றினார்கள்.

அவர் தமது உரையில், தமிழ், தெலுங்கு, கன்ன-டம், மலையாளம் ஆகிய மொழிகள் சகோதர மொழிகளாக இருந்தா-லும், மேலை நாட்டு மொழிகளுக்கு அளிக்கப்-படும் மதிப்பு அளிக்கப்-படுவதில்லை. வேற்றுமை மனப்பான்மையோடு பார்க்கும் நமது மன-நிலையை மாற்றிக்-கொண்டு நாம் அனைவரும் திராவி-டர்; மூலத் திராவிட மொழிக்குச் சொந்தக்கா-ரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள-வேண்-டும் என்று கூறினார்.

பின்னர் பேசிய பேரா-சிரியர் செ. இராமசாமி, தெலுங்கு இலக்கியத்தை-யும், கன்னட இலக்கியத்-தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள தமிழிலக்-கியம் கற்பது அவசியம் என்-பதை வலியுறுத்தி-னார். கலைச்சொற்கள் உருவாக்கத்தில் தமிழ் மொழியின் தேவையும் உள்ளது என்றார்.

திராவிடப் பல்கலைக்-கழகம் எந்த நோக்கத்-திற்-காக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் மற்றும் காசிப்பாண்டியன் இ.ஆ.ப. ஆகியோரால் உருவாக்கப்-பட்டதோ அந்த நோக்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வாகும் என்பதையும், அதற்காகப் பல்-கலைக்கழகம் பாடுபட-வேண்டும் என்றும் வலி-யுறுத்தினார்.

செம்மொழி தமி-ழாய்வு மத்திய நிறுவனத்-திலிருந்து வருகை தந்த ஒருங்கிணைப்பாளர் பேரா-சிரியர் கு.சிவமணி இத்தகைய கருத்தரங்கை நடத்துவதற்கு அடிப்-படைக் காரணமாக இருந்-தவர் திராவிடப் பல்-கலைக் கழக துணைவேந்-தர் கடப்பா இரமணய்-யாவே ஆவார் என்பத-னைச் சுட்டிக்காட்டிய-தோடு, செம்மொழித் தமி-ழாய்வு நிறுவனத்தின் பணி-களையும் விவரித்தார்.

கருத்தரங்கு இணை ஒருங்கிணைப்பாளர் உத-விப் பேராசிரியர் முனை-வர் பூலோகரம்பை நன்றி நவில, கருத்தரங்கத் தொடக்க விழா நிறைவு பெற்றது.

இக்கருத்தரங்கு ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நடை-பெறும் என்றும், இத்த-கைய அரங்கில் ஒப்பிலக்-கிய ஆர்வலர்கள் கலந்து-கொள்ளவேண்டும் என்-றும் துறைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக