ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்


திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்-டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்க-வுரையாற்றினார்.

சென்னையில் உலகத் திருக்குறள் மய்யத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா, வள்ளுவர் கோட்-டத் திருக்குறள் உயர் ஆய்வரங்குகள் பத்தாம் ஆண்டுத் தொடக்கவிழா இரண்டுநாள் மாநாடு-கள் (10, 11 இரண்டு நாள்-கள்) சென்னை வள்ளு-வர் கோட்டத்தில் நடை-பெற்றது. முதலாம் நாள் மாலை தொடக்க விழா 10.4.2010 அன்று காலை 10 மணிக்கு மிகச் சிறப்-பாகத் தொடங்கியது.

திருவள்ளுவர் வாழ்த்-தினை திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன் பாடி-னார். திருக்குறள் மாமுனி-வர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு வரவேற்புரை ஆற்றினார். பின்னர் இனமானத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.

அவர் தமது உரையில், 133 திருக்குறள் திருத் தொண்டர்கள் வரலாற்-றினை ஆய்வு செய்யக் கூடிய இந்த மய்ய அறி-ஞர்கள் வரலாற்றில் இடம் பெறவேண்டும்.

தந்தை பெரியார் அவர்-கள் திருக்குறளை மிகப் பெரிய அளவில் ஏற்றுக் கொண்ட ஒன்-றாகும். வேறு நூல்கள் எதையும் ஏற்றுக் கொள்ள-வில்லை.

அறிவுக்கு முதலிடம்

அறிவுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒரே நூல் திருக்குறள்தான். செம்மொழி மாநாட்டின் இலட்சினையிலே திரு-வள்-ளுவர் படத்தினை வைத்து உருவாக்கி இருப்-பது திருவள்ளுவருக்கு மிகச் சிறப்பு செய்வ-தாகும்.

தஞ்சையில் நடத்துங்கள்

இது போன்ற நிகழ்ச்சி-களை சென்னையில் நடத்-தினால் போதும் என நிறுத்திவிடாதீர்கள். தஞ்சைக்கு வாருங்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலே இது போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துங்-கள். இரண்டு நாள் மாநாடு நடத்துங்கள். ஏற்பாடுகளையெல்லாம் நாங்கள் செய்து தருகி-றோம். அடுத்த கட்டமாக திருக்குறள் சார்பாக உள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து மாநாட்-டினை நடத்த வேண்டும்.

தேசிய நூல்- திருக்குறள்

இந்தியாவின் தேசிய பொதுநூலாக திருக்-குறளை வைப்பதற்கு வலி-யுறுத்தவேண்டும். நீதி-மன்றத்தில் பிர-மாணம் எடுப்பதற்கு மத நூல்கள் உள்ளன. மதத்தை ஏற்-காதவர்கள் பிரமாணம் எடுப்பதற்காக திருக்-குறளை வைக்க வலி-யுறுத்த வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்கச் செய்ய வேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை பெரியார் திடலில் நடத்த வாய்ப்பு உள்ள நேரங்-களில் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டு விளக்க-வுரையாற்றினார்.


திருக்குறள் வள்ளி-யம்மாள் தமிழர் தலைவருக்கு திருவள்ளுவர் படத்தினை அன்பளிப்பாக வழங்கினார். இது ஒரு இன உணர்வு விழா-வாக நடைபெற்றது என்-பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக