வியாழன், 8 ஏப்ரல், 2010

விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்

சென்னைப் பெருநகரில் வணிக நிறுவனங்-களில் பெரிய அளவில் தமிழில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படவேண்டும். அதனை-யடுத்து ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என்று சென்னை மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

கருநாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. வட மாநிலங்களில் அனைத்தும் இந்தி மய-மாகவே நீக்கமறக் காட்சி அளிக்கின்றன.
நன்றி-விடுதலை
தமிழ்நாட்டில் காலந்தாழ்ந்தாவது இந்த வகையில் செயல்பாட்டுக்கு வருவது பெரிதும் மகிழத்தக்கதாகும்.

இப்பொழுதே சில ஆங்கில ஏடுகளில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் இந்த முடிவைக் கேலி செய்தும், எதிர்த்தும் கடிதங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

எப்பொழுதுமே இதுபோன்ற தமிழ் ஆர்வ அடிப்படையில் சில நடவடிக்கைகளை அரசு எடுக்கும்பொழுதெல்லாம் பெரும்பாலும் பார்ப்பன சக்திகள், வடவர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றே!

மும்பையில் இதுபோல் எழுத முடியுமா? பேச முடியுமா? கேலி செய்ய முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் அத்தகு அடாவடித்தனமான போக்குகள் இல்லை என்பதால், அதனை ஒரு பலகீனமாகக் கருதி-விடக் கூடாது.

மும்பை நிலைமை இங்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகும் ஒரு சூழலை, அவசியத்தை உருவாக்குவது நல்லதல்ல என்பதே நமது வேண்டுகோள்.

வெளிமாநிலத்தவர்கள் மும்பை போன்ற இடங்களில் பணியாற்றுவது எல்லாம் கேள்விக் குறி ஆக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அதுவும் தலைநகரமான சென்னையை எடுத்துக்கொண்-டால், எங்கு பார்த்தாலும் வடவர்களின் ஆதிக்கம்தான். அதற்கு முன்பெல்லாம் ஒரே ஒரு சவுகார்ப்பேட்டைதான். இப்பொழுது அநேகமாக சென்னையின் வடிவம் முற்றிலும் மாறும் அளவுக்கு சென்னையே சவுகார்ப்பேட்-டையாக ஆகிவிட்டதோ என்று அய்யுறும், அச்சமுறும் நிலைமைதான்.

வடநாட்டுக்காரர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விடுவது கிடையாது. வீடுகளை விலைக்கு வாங்கவும் முடியாது.

சென்னைப் பெருநகரக் குழுமம் கட்டட வரைபடத்திற்கு (பிளான்) அனுமதி அளிக்கும்-போது குறைந்தபட்சம் சில நிபந்தனைகளை வைப்பதுகூட அவசியம் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், தமிழர்கள், பிற மாநிலத்தவர்கள் என்கிற வேற்றுமை வெளிப்படையாகத் தெரிந்து, அதனால் பிரச்சினைகள் வெடிக்கக்கூட வாய்ப்பு உண்டு. அந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், சகலரும் கலந்து வாழக்கூடிய அன்னியோன்ய-மாகப் பழகக் கூடிய ஒரு சூழலை ஏற்-படுத்துவதுதான் நல்லது.

ஒரு காலகட்டத்தில் வடவர் ஆதிக்கச் சுரண்டல் மாநாடுகளும், வடவர் கடைகள் முன் மறியல் போராட்டமும் திராவிடர் கழகத்தால் நடத்-தப்பட்டதுண்டு. மீண்டும் அந்த நிலை உருவாக-வேண்டுமா? வேண்டாமா? என்பது வடவர்-களின் நடவடிக்கைகளைப் பொறுத்ததுதான்.

இன்னொரு முக்கியப் பிரச்சினை. நாட்டுக்-காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்கள் சில முக்கிய சாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அண்ணா சாலை, தந்தை பெரியார் நெடுஞ்சாலை, காமராசர் கடற்கரைச் சாலை, வ.உ.சிதம்பரனார் சாலை என்று பெயர்கள் சூட்டப்பட்டன.

ஆனால், இன்னும்கூட வணிக நிறுவனங்-களில், மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்-சாலை என்றும், வெறும் கடற்கரைச் சாலை என்றும் வால்டாக்ஸ் சாலை என்றும் விளம்பரப் பலகைகளில் எழுதப்பட்-டுள்ளன.

ஏடுகள், இதழ்கள், தொலைக்காட்சிகள்கூட இந்த வகையிலே சிறிதும் பொறுப்பற்ற தன்-மையிலே எழுதப்படுகின்றன, உச்சரிக்கப்படு-கின்றன. இவற்றிற்கும் ஒரு முடிவை ஏற்படுத்த-வேண்டும். அரசு நினைத்தால் இதனை ஒரு நாளிலேயே சாதித்துக் காட்டிட முடியும் என்பதால், இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமாய் வலியுறுத்துகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக