திங்கள், 5 ஏப்ரல், 2010

குருவாயூர் கோயில்:


பிற மதத்தவர் நுழையக்கூடாது என்ற தடை தகர்ந்தது!
பாடகர் ஜேசுதாஸ் தாராளமாக செல்லலாம் - நீதிமன்றம்

திருவனந்தபுரம், ஏப். 4_ பொதுவாக இந்து மதக் கோயில்களில் பிற மதத்தவர் செல்லக்கூடாது என்ற தடை உண்டு; ஏன், விளம்பரப் பலகைகூட இந்து மதக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.

குருவாயூர் கோயிலில் இந்த பேதம் நீண்ட காலமாக உண்டு. இப்பொழுது வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம், ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலுக்குள் செல்லத் தடையில்லை என்று மண்டையில் அடித்துக் கூறியுள்ளது.



குருவாயூர் கோயிலுக்குள் செல்ல புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி அளிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குள் இந்து மதத்-தினரை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற கச்சேரியில் பாடுவதற்காக புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ் சென்றார்.

அப்போது, அவர் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்-சினையில் தலையிட்ட அமைச்சர் சுதாகரன், ஜேசுதாசை கோயி-லுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கூறினார்.

வேறு மதத்தவர்கள் கோயி-லுக்குள் சென்றதால், கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி தோஷம் கழித்த சம்பவங்களும் இதற்குமுன் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், குருவாயூர் கோயிலுக்குள் ஜேசுதாசை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி, கோழிக்கோட்டைச் சேர்ந்த லலிதா பாஸ்கரன் என்பவர் கேரள உயர்நீதி-மன்றத்-தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குருவாயூர் கோயிலுக்குச் செல்ல ஜேசுதாசுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அதற்காகப் பொதுநலன் வழக்கு தொடரவேண்டிய அவசியமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக