செவ்வாய், 6 ஏப்ரல், 2010

செல் பேசியில் தமிழ் மொழி


இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள். ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.


நொக்கியா 2730
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 10,000 ரூபாவிற்கு (100 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம்

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன். நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டசிடுவது என்று கேட்க பில்ட்டப்பு கொடுத்த மு.மயூரனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
http://www.mayuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக