வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம் சிங்களக் காடையர்களால் உடைக்கப்பட்டு வருகின்றது


போர்க்காலத்திலும் அதன் பின்னரும் அந்த வீட்டினை மிகப் பெறுமதியான பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்துவந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் வீட்டினை உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் தொடராக தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவாலயங்கள் அனைத்தும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ நிலையங்களும், தென்னத் தோட்டங்களும் அமைக்கப்பட்டன. இதனை விடவும் வன்னியில் துயிலுமில்லங்களை அழித்ததுடன் அவற்றில் சிலவற்றில் இருந்து மண் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வீதிப் புனரமைப்பிற்கு அந்த மண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வன்னியில் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்கு மேலாக விடுதிகளை அமைப்பதற்கான முனைப்புகள் முன்னெடுப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிடவும் யாழ்ப்பாணம் வன்னிப் பகுதிகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள், தூபிகள், நினைவிடங்கள் அனைத்தும் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டு சர்வதேச போரியல் தர்மங்களை மீறி அவர்களது காடைத்தனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக