வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மட விவகாரம் - கிரிமினல் வகை


கதம்பம்
சு.அறிவுக்கரசு

"மடம் கட்டி வைத்ததனாலே -தம்பி வசம் கெட்டுப்போனது நம் நாடே"

என்றார் புரட்சிக் கவிஞர். இதைக் கேட்காத காரணத்தால் நிறைய கேடுகள் மடங்களால் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பழைய மடங்களில் நடப்பவை அதிகமாக வெளியே வருவதில்லை; தெரி-வதில்லை. நஞ்சு கொடுத்து பெரிய மடாதிபதியைக் கொல்ல முயன்று மாட்டிக் கொண்ட சின்ன மடாதிபதி-யைச் சில ஆண்டு-களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட மடம் ஒன்று அடையாளம் காட்டியது. அடையாளம் காட்டப்படாமல் அமுக்கப்-பட்டது அநேகம்.

மடாதிபதிகளாக இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கருநாடகா மாநிலம் இப்போது கூட ஓர் அடையாளத்தைக் காட்டியுள்ளது. கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் - எத்தகைய படுபாதகச் செயல்களையும் செய்வதற்கு அஞ்சாத அயோக்கியர்கள் என்பதைக் காஞ்சிபுரம் தேவநாதன் போல, பல உதாரணங்களை ஊர் அறி-யும். அந்த வரிசையில் புதிதாக ஒன்று.

கருநாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோகர்னா எனும் ஊரில் உள்ள மகாபலேசுவரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாம். அந்தக் கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர்கள் செய்து வந்த அயோக்கியத் தனங்கள் பற்றி ஏராளமான புகார்கள். தாங்க முடியாத நிலையில் பா.ஜ.க. அரசு இந்தக் கோயிலின் நிருவாகத்தை ஒரு மடத்திடம் ஒப்படைத்து விட்டது.

மடத்தின் பெயர் ராமச்சந்திரபுர மடம் என்பது. இதன் அதிபதி ராகவேசுவர-பாரதி சாமி என்பவர். கருநாடகத்தைப் பொறுத்தவரையில் மடங்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றவை. ஜாதிக்கு ஜாதி மடங்கள் உண்டு. அந்தந்த ஜாதிமீது இந்த மடங்கள் செல்வாக்கைச் செலுத்தும், தத்தம் ஜாதிக்காரர் வெற்றி பெறவேண்டும் என வேலை செய்யும்- கட்சி பற்றிக் கவலை இல்லை, ஜாதிதான் முக்கியம். முதலமைச்சராக சொந்த ஜாதிக்காரர் வரவேண்டும் என்று ஜாதி மடங்கள் வேலை செய்யும். அந்த அடிப்படையில் லிங்காயத்து ஜாதி முதல் அமைச்சருக்கு வேண்டப்பட்ட மடமோ?

கோயிலின் ஆதிக்கம் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குக் கோபத்தை உண்டு பண்ணிவிட்டது. 14 அர்ச்சகர்களும் ஒன்று சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர். ராமச்சந்திரபுர மடத்தின் மடாதிபதியின் ரகசியங்களை அம்பலப்படுத்தத் திட்டம் போட்டுச் செயல்பட்டனர். இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு முயற்சிகளில் இறங்கியவர் தலைமை அர்ச்சகரின் மகன் கணேஷ் ஜோக-லேஷ்-வர் என்பவர். ராமச்சந்திரபுர மடத்தின் யோக்கியதையைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார், அதன் வாச-கங்கள் நான்காம் தரத்தைச் சேர்ந்தவை. படிக்கப் பல்கூசும். படித்துப் பார்த்ததைச் சொல்ல நாக்கூசும். அந்த அளவுக்கு நாராச நடை.

அத்துடன் நின்றுவிடாமல் கணேஷ் ஜோகலேஷ்வரப் பார்ப்பனர் ஒரு குறுந்-தகடையும் வெளியிட்டார். இந்த சி.டி. பாலிவுட் சினிமா நடிகை ஒருத்தியுடன் சல்லாபிக்கும் ஏடாகூடக் காட்சிகள் இடம் பெற்ற சி.டி.ஆகும். 20 நிமிடம் ஓடக்கூடிய சி.டி. இளவயது பக்தைகள் மடாதிபதியுடன் உரையாடும் கவர்ச்சிகர காட்சிகள், சினிமா நடிகைகள் மடத்-திற்கு வந்து போகும் காட்சிகள், அந்தக் காட்சிகள் பற்றிய கவர்ச்சிகரமான வருணனைகள் என்று அசத்தலான சி.டி. என்கிறார்கள்.

எப்படி எடுத்திருப்பார்கள்? ஏன் எடுத்தார்கள்? காவல்துறை வேறெந்த வழக்கையும் விட மிகத் தீவிரமாக விசாரணை நடத்திப் பின்னணியைக் கண்டு பிடித்துவிட்டார்கள். பாராட்ட-லாம். இதே வேகத்தை - தீவிரத்தை - புத்திசாலித்தனத்தை - கிறித்துவ, இசுலாமி-யர்கள் மீதான தாக்குதல்களின் பின்னணி பற்றியும், வழிபாட்டு இடங்கள் தகர்க்கப்படுவது பற்றியும் விசா-ரித்து உண்மையைக் கண்டறிந்து வெளியிட்டார்களா? விருந்துகளில் கலந்து கொண்ட மகளிர் ஆபாசமாகத் திட்டப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவங்-களின் பின்னணி பற்றி விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுத்தார்களா? ராமன் சேனை என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்து மத வெறியைக் கிளப்பிக் கொண்டு, பிற மதத்தவரைத் தாக்குவதையே தொழிலாகக் கொண்-டிருக்கும் முத்தாலிக் பற்றிய உண்மை-களை வெளிக் கொண்டு வந்து சட்டப்-படி நடவடிக்கை எடுத்தார்களா? செய்யவில்லை. செய்ய மாட்டார்கள். ஏன் என்றால் இவற்றிற்குப் பின்னணி ஆர்.எஸ்.எஸ்.!

ராமச்சந்திரபுரா மடவிவகாரம் என்ன? எல்லாமே திட்டமிட்ட சதி-யாம். மடாதிபதி அப்படிப்பட்டவர் அல்லவாம். அவரைப் போன்ற தோற்றம் உள்ள 26 வயதான ரவி கோடி-யக்-கரா என்று அழைக்கப்படும் பாலச்சந்திர பிரபாகர் கோடியக்கரா என்பவரை வைத்து தயாரிக்கப்பட்ட சினிமா சி.டி.யாம். கன்றுக்குட்டியை அணைத்துக் கொண்டு, முத்தம் கொடுப்பது போலப் பல கோணங்களில் படம் பிடித்தார்களாம். பிறகு தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திக் கன்றுக் குட்டிக்குப் பதில் நடிகையின் உருவைப் புகுத்தித் தயாரித்துவிட்டார்களாம். மூன்று நாள்கள் முயற்சி செய்து- இதனைக் கண்டுபிடித்த கருநாடகக் காவல்துறை மடாதிபதியாக நடித்த ரவி-யையும் சிவராமன் ஆடி, கஜன்னா உபாத்யாயா, உமேஷ் கஜன்னா, சங்கரலிங்கா மற்றும் விஷ்வராஜ் பானிராஜ் கோபி ஆகியோரையும் கைது செய்துவிட்டனர்.

735 ஆபாச சினிமாக்கள் அடங்-கிய கணினி ஒன்றையும் கைப்பற்றி-யிருக்கிறார்கள். கேரளாவின் பொன்-னுமாடி அரசு விருந்தினர் விடுதியில் படமாக்கப்பட்ட நீலப்படம் ஒன்றும் இதில் அடக்கமாம். கேரள மாநிலத் தலை-நகர் திருவனந்த புரத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் பொன்-னுமாடி. ஆக, இது இரு மாநிலக் குற்றம்.

எல்லாம் சரி, இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இத்தகைய சதிச் செயலுக்கும், குற்றங்களுக்கும் மூளையாகச் செயல்பட்ட கணேஷ் ஜோகலேகர், அவரின் தந்தையான தலைமை அர்ச்-சகர், மற்றும் சதியில் சம்பந்தப்பட்ட 14 அர்ச்சகர்கள் கைது செய்யப்பட-வில்லையே, ஏன்?

சூத்திரனுக்குச் சிரச்சேதம் - பார்ப்பனனுக்குச் சிகைச் சேதம் என்பது போன்ற நிலையா?

மகளிர்க்கு 25 விழுக்காடு

பரமண்டலங்களில் இருக்கிற(?) பரமபிதாவிடம் யோசனை கலந்து உத்தரவு பெற்று அமெரிக்க அதிபராக இருந்த புஷ் சண்டை போட்டு நாசம் பண்ணிய ஈராக் நாட்டை மறந்திருக்க முடியாது. அந்த நாட்டில் தேர்தல் நடந்து முடிவுகள் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு நிலை.

தற்போது பிரதமராக இருக்கும் நூரி அல்மாலிக்கின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் பிரதமராகும் வாய்ப்பு பெற்ற இயாத் அல்லாவியின் கட்சிக்கு 91 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவை 45 சன்னி பிரிவு முசுலிம் இயக்-கங்கள். குர்திஷ் இனத்தவர்களின் கூட்டணிக் கட்சிக்கு 45 இடங்களும், இராக்கிய தேசியக் கூட்டணிக்கு 70 இடங்களும் கிடைத்துள்ளன.

மொத்தம் உள்ள 325 இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான 162 இடங்களைப் பெற்றவர்கள் யாரும் இல்லை. ஆட்சி அமைப்பது யார் என்பது இழுபறி. பிரதமராக யார் வருவார் என்பதையும் கணிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு குடிய-ரசுத் தலைவராக யார்? சபாநாயகராக யார் வருவது? எல்லாமே குழப்பம்தான்.

ஆனால் ஒன்றில் ஈராக் சட்டமும், நாடாளு மன்றமும் தெளிவாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் 325 இடங்களில் நான்கில் ஒரு பங்கு இடங்களைப் பெண்கள் நிரப்ப வேண்டும். தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் சரி, அல்லது இட ஒதுக்கீடில் நியமிக்கப்பட்டாலும் சரி, பெண்கள்81 பேர் இருந்தே ஆகவேண்டும்.

எவ்வளவு மனநிறைவான ஏற்பாடு! எல்லாப் புகழும் (அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து கொலை செய்த) சதாம் உசேனுக்கே!

அமெரிக்க அழிம்பு

எவ்வளவு அற்பத்தனமாக அமெரிக்-கர்கள் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பழைய சம்பவங்கள் நிறையவே உண்டு.

1960 ஆம் ஆண்டு. உலக நாடுகள் மன்றத்தில் உரையாற்ற க்யூபாவின் அன்றையப் பிரதமர் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் சென்றிருந்தார். அமெரிக்-காவின் அறிவிக்கப்பட்ட எதிரி அவர். அதனால், நியூயார்க் நகரில் அவர் தங்குவதற்குப் பெரும் ஓட்டல்கள் ( 5 நட்சத்திரம் பெற்றவை) இடம் தர மறுத்து-விட்டன. ஒரு நாட்டின் அதிபருக்கு ஏற்பட்ட நிலை அது. என்ன காரணம் என்பது சொல்லாமலே விளங்கும். ஃபிடல் என்ன செய்தார் தெரியுமா?

உலகநாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளருக்குத் தகவல் அனுப்பினார்_ அய்.நா. மன்றத்தின் புல்வெளியில் டென்ட் அடித்து, தாம் அதில் தங்கப் போவதாக!

அந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள தெரசா ஓட்டலின் அதிபர் காஸ்ட்ரோவைச் சந்தித்துத் தமது ஓட்டலில் தங்கும்படி கேட்டுக் கொண்-டார். நியூயார்க்கின் கருப்பர் வாழும் பகுதியில் இருந்த ஓட்டல் அது. அங்கே-தான் அவர் தங்கினார்.

இதை அறிந்த உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அவரை அந்த ஓட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரின் பெருமை கூடியது. அப்போது அவருக்கு வயது 34 தான்.

தெரசா ஓட்டலுக்கு வந்து ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த முதல் தலைவர் நேரு பண்டிதர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக