வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடன்களாம்


ஏப். 15_ புதுக்கோட்டை மாவட்-டம் பொன்னமராவதியை அடுத்த கொன்னையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா நடந்ததாம். இத்திருவிழாவை முன்-னிட்டு சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள மக்கள் பல நேர்த்திக் கடன்களைச் செலுத்-தினார்-களாம். அது வழக்கமா-கவும் நடந்து வருகிறது. அதாவது கோயிலுக்கு வரும்போது அரிவாள் கம்புகளுடன் வருவது, கோயிலில் உருண்டு வரு-வது, பால்குடம் எடுப்பது போன்று சேறு சகதியை உடலில் பூசிக்கொண்டு கோயிலுக்கு வருவதும் இப்-படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடன்களாம்.

கோயிலுக்குப் போவ-தற்-குக் காரணம் தெரி-யாமல் மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அய்யா தந்தை பெரியார் காலந்-தொட்டு சொல்லிக் கொண்-டிருக்கிறோம். அதில் பக்தியின் பெயரால் எவ்-வளவோ மூடத்தனங்-களும், முடை நாற்றங்-களும் நடந்து கொண்-டி-ருக்கின்றன. அதன் உச்ச கட்டமாக குளங்களில் உள்ள சேற்றைப் பூசிக்-கொண்டு அப்படியே கோயிலுக்கு வருவது அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. நாம் கோயிலுக்குப் போகப் போவதில்லை என்ற போதிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களே அவர்-கள் ஆண்களாக இருந்-தாலும் பெண்களாக இருந்தாலும் அன்று-தான் புத்தாடை உடுத்தி வெள்ளை வேட்டி சட்-டையில் அழகாக வந்தி-ருப்பார்கள். அவர்களு-டன் இந்த சேறு பூசிய பக்தர்களும் தங்கள் நேர்த்திக் கடனைத் தீர்க்க வரும்போது எப்-படியிருக்கும் என்று கற்பனை மட்டும் செய்து பார்த்தால் புரியும் நாமி-ருப்பது கணினி காலத்-திலா அல்லது காட்டு-மிராண்டி காலத்திலா என்று. கலாச்சாரம் என்ற பெயரில் அடுத்த தலைமுறையான இளஞ்-சிறார்களையும் அழைத்-துச் சென்று இந்ந சேற்-றுக் கலாச்சாரத்தில் இறக்கி விடத்தான் வேண்-டுமா? பக்தர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
நன்றி- விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக