ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சென்னையில் 32 கோயில்களை இடிக்க முடிவு


சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்-படுத்தும் வகையில், சாலையை ஆக்கிரமித்து அமைந்துள்ள மேலும் 32 கோயில்களை இடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பில், பொது இடங்கள் மற்றும் சாலை-களில் புதிதாக வழிபாட்-டுத் தலங்களை அமைப்-பதற்கு தடை விதித்து உத்-தரவிட்டது. ஏற்கெ-னவே பொது இடங்-களில் இடையூறாக அமைந்-துள்ள வழிபாட்டுத் தலங்களை என்ன செய்-வது என்று அந்தந்த மாநில அரசுகளே தீர்-மானித்து, நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்-தியது.

இதனடிப்படையில், தமிழகத்தில் போக்கு-வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்-றும் சாலை ஓரம் அமைந்துள்ள வழிபாட்-டுத் தலங்களை இடிக்கும் பணி நடைபெற்று வரு-கிறது.

சென்னை மாநகராட்-சியின் 10 மண்டலங்களி-லும், இதுபோல் சாலையை ஆக்கிரமித்து 200_க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் கண்டறியப்-பட்டு பட்டியல் தயா-ரிக்கப்பட்டுள்ளது. இது-வரை 20_க்கும் மேற்-பட்ட கோயில்கள், மாநக-ராட்சி சார்பில் இடிக்-கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

சென்னை மாநகராட்-சி-யில் அடுத்தகட்டமாக 32 கோயில்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்-ளது. மேலும் போக்கு-வரத்துக்கு இடையூறாக பொது இடங்களில் அமைந்துள்ள வழி-பாட்டு தலங்கள் கண்-டறியப்பட்டு இடிக்கப்-படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக