http://www.viduthalai.com/
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு _ பரவலாக எதிர்பார்க்கப்படக் கூடிய சமூகநீதிச் சித்தாந்தம் ஆகும்.
மக்கள் தொகுதியில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக்கூடியவர்களுக்கு அனைத்துத் தடத்திலும் உரிய பிரதிநிதித்துவம், உரிமை தேவை என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே!
சமூக அமைப்பில் ஆண் ஆதிக்கம் என்பது நங்கூரம் பாய்ச்சி இருப்பதால், இதற்குப் பெரும்பாலும் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகின்றனர். குடும்ப அமைப்பிலிருந்து நாடு வரை இந்த நிலைதான் கோலோச்சி நிற்கிறது.
சமூக மாற்றங்கள் வேகமாக நடந்துவரும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பிரச்சினையிலும் புரட்சி ஏற்பட்டு வருவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
காலத்தின் இந்தப் பார்வையை உணராதவர்கள் யாராக இருந்தாலும், ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.
பெண்கள் வளர்ச்சி என்பது படிப்படியாக பல்வேறு எதிர்ப்பு முனைகளைச் சந்தித்து நடந்துகொண்டுதானிருக்கிறது. இந்துச் சட்டத் திருத்தம் என்ற கட்டம் வந்தபோது எவ்வளவு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. கொள்கைக் காரணமாக அண்ணல் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வரவில்லையா?
பெண்களுக்குத் திருமண வயது உயர்த்தப்பட-வேண்டும் என்ற நியாயமான _ அறிவியல் ரீதியான குரலுக்குக்கூட எவ்வளவு பெரிய எதிர்ப்புப் புயல்கள் எல்லாம் தலைதூக்கி நின்றன.
33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அண்-மைக்கால கோரிக்கையால் அரசியல் கட்சிகளும், ஆண்களும் நடந்துகொண்டுவரும் போக்கை உணர்ந்தவர்களுக்கு உண்மை விளங்காமற் போகாது.
இன்றுவரை ஆதிக்கம் என்ற அகந்தை ஆண்களைவிட்டு அகலவில்லை என்பதுதான் அது.
இந்தியா முழுமையும் 28 மாநில சட்டப்-பேரவைகளில் 4030 உறுப்பினர்கள் இருக்கி-றார்கள் என்றால், அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 311 மட்டும்தான்.
60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர் ஒருவரும் இல்லை.
பெண்கள் 10 விழுக்காடு உள்ள சட்டமன்-றங்கள் இந்தியாவில் வெறும் எட்டு மட்டுமே. இந்த நிலையில், எதிர்ப்பின் காரணமாக 33 சத-விகிதத்தைக் குறைக்கலாமா என்ற ஒரு கருத்துக்-கூட சன்னமாக நுழைக்கப்படுகிறது.
பெண்கள் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் ஆதரவு அளிப்பதாகக் காட்டிக்கொண்ட பாரதீய ஜனதா, உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதாக இப்பொழுது சொல்கிறது. கோணிப்பைக்குள் இருந்த பூனை இதன்மூலம் வெளியில் வந்துவிட்டது.
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது மத ரீதியானது. எனவே, எதிர்க்கிறோம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
உள் ஒதுக்கீட்டால் சிறுபான்மையினர் மட்டும்தானா பயன் அனுபவிக்கப் போகிறார்கள்? மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பலன் அனுபவிப்பார்களே! அப்படியென்றால், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்-கும் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதானே பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு? இதன்மூலம் பாரதீய ஜனதாவின் உயர்ஜாதி சிந்தனைப் போக்கு வெளியில் வந்துவிட்டதே!
பாரதீய ஜனதாவில் சுஷ்மா சுவராஜ்களுக்கு இடம் உண்டே தவிர, உமாபாரதிகளுக்கு இடம் கிடையாதே!
இப்பொழுது நாடாளுமன்றத்தில் 59 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், இதில் 45 பெண்கள் உயர்ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம்! இந்த அறிகுறியை அடையாளம் காண-வேண்டாமா?
1990 இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியான_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கணக்குத் திறக்கப்பட்டது. கல்வியில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன் விளைவு என்ன? 20 ஆண்டுகளுக்குப் பிறகும்-கூட இன்னும் நடைமுறைக்கு வர முடியாத ஒரு தேக்க நிலைதானே!
அனுபவம் தந்த இந்தப் பாடத்தை தயவு செய்து அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்வார்களாக!
திங்கள், 22 மார்ச், 2010
உலக தண்ணீர் தினம்..
தண்ணீர் தினம்
தண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை
பெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது? காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ? அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.
மக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.
உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு
உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.
சுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில்! இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம்! ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.
நீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது மக்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.
இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.
நமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறை.
நம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
வாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.
சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.
மழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.
தண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது
பாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.
அல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றிருந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே!
ஞாயிறு, 21 மார்ச், 2010
நூல் மதிப்புரை
மனுநீதி - ஒரு மறுபார்வை
ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து
மனுநீதி_- ஒரு மறுபார்வை எனும் தலைப்பிலான நூல் மிகச் சிறப்பாக ஆய்வு செய்து எழுதிப் படைக்கப்பட்ட நூல். மனு-தருமம் என்றே பலரும் கூறும் இந்நூல் யாருக்கான தருமங்களைக் கூறுகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது இந்நூல். ஒரு குலத்துக்கான தருமம் என்பதனை விரி-வாக-வும் அக்குலம் பார்ப்பன குலம் என்பதையும் தெளிந்த நீரோடை போன்ற தமிழ் நடையில் வடித்துத் தந்திருக்கிறார் பேராசிரியர் ப.காளிமுத்து.
மனுதருமம் என்பது பெரும்பான்மை மக்களுக்கு மனு அதருமம் என்றே காட்சி தரும் நிலையை இந்நூலைப் படிக்கும் எவரும் தெற்றெனத் தெளியலாம். உலகின் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் மகளிர்க்கான மனுதருமம் எத்தகைய கேடானது, - தீதானது, - மகளிரைக் கீழாக நினைக்க வைப்பது என்பதை மிகவும் ஆவேசத்தோடு ஆசிரியர் விளக்கியிருக்-கிறார். இந்தியச் சமூகத்திற்கு சட்டநூல் தந்த முதல்வர் (திவீக்ஷீ லிணீஷ் நிவீஸ்மீக்ஷீ) என்று பீற்றப்படும் மனு, வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் எந்த அளவுக்குக் கேடு பயக்கும் சட்டங்-களைக் கூறியிருக்கிறார் என்பதை அந்நூல் பகுதிகளில் எடுத்துக் காட்டி விவரித்திருக்-கிறார். ஆனாலும் கூட, இந்த மனு நூலின் அடிப்படையிலும் ஏனைய முனிவர்களின் பிதற்றல்களின் அடிப்படையிலும் இந்தியர்-களில் பெரும்பான்மையினரான இந்துக்-களுக்-கான குடிமைச் சட்டம் (சிவில் சட்டம்) தொகுக்கப்பட்டுள்ளது என்பது அவலம் மட்டுமல்ல, கேவலமும் கூட!
அப்பேர்ப்பட்ட மனுநூலை ஒருவர் எழுதவில்லை; பலரும் பலகாலத்தில் எழுதி இருக்கிறார்கள் என்பதை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறுவியதை இந்நூல் குறிப்பிடுகிறது. ரிக் வேதமும், கீதையும் 4 மனுக்கள் என்றும் மனுநூலே 7 மனுக்கள் என்றும் குறிப்பதையும் இந்நூல் சுட்டுகிறது. காலவளர்ச்சியில், பலபேர் தொகுத்து வைத்த மனித விரோதக் கருத்துகளே மனுநீதி என்பதை விதவை மறுமணம்பற்றி இருவேறு கருத்துகளைக் கூறுவதில் இருந்தே அறியலாம். முற்பகுதியில் மறுமணம் கூடாது எனும் மனு பிற்பகுதியில் குழந்தை பாக்கியத்திற்காகச் செய்து கொள்ளலாம் என அனுமதிக்கிறது. ஒருவரல்ல, பலர் எழுதியதன் தொகுப்பே மனுதருமம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் கூட, உயர்நீதிமன்றங்களில் கூட மனுவுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். காட்டாக, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என உயர்நீதி-மன்-றமே தடுத்தது. ஆனால், சில ஆண்டுகளில் மாநில ஆட்சியாளராக வந்துவிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் சிலை வைத்துட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவு சிலகாலம் மட்டுமே செல்லுமோ?
சென்னை உயர்நீதிமன்றத்தல் நிரம்ப சமத்காரமாக மனுநீதிச் சோழன் சிலை வைக்-கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சோழ அரசன் இருந்ததே கிடையாது என்பதை இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார் பேராசிரியர் காளிமுத்து. களப்பிரர் காலம்_ இருண்ட காலம் எனும் கருத்துகூட, மனுநீதிச் சோழன் திருவாரூரை ஆண்ட சரித்திரம் போலப் பொய்தான் என்பதை மயிலை சீனி.-வேங்கடசாமி போன்ற ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். களப்பிரர் காலத்தில் அல்லலுற்றது தமிழ்நாடு அல்ல, தமிழ்நாட்டில் இருந்த பார்ப்பனர்களே என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி முந்திய கருத்தினை நூலாசிரியர் எடுத்-தாண்டிருப்பது நெருடலாக உள்ளது.
பார்ப்பனரும், அல்லாதாரும் சேர்ந்து உணவு அருந்துவது சாத்திர விரோதம் என்று வ.வே.சு. அய்யர் கூறி, சேரன்மா-தேவி குருகுலத்தில் காட்டிய பாகுபாடு காந்தியாரால்கூட ஒப்புக் கொள்ளப்பட்டு பெரும் விளைவைத் தமிழ்நாட்டில் 1925 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது என்பது திராவிடர் இயக்கத்தின் தொடக்க கால வரலாறு. இந்தச் சாத்திரம் எந்தச் சாத்திரம் என்பதை நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்-கிறார். (பக்கம் 53). இதன் தொடர்பாக இவ்-வர-லாற்றுக் குறிப்பை உணர்த்தியிருந்தால் இன்றைய இளைய தலைமுறையும் எதிர்-வரும் தலை முறையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
உடலிலும் பிறப்புறுப்பிலும் நெய் பூசிக் கொண்டு, ஒருவனின் மனைவி தன் கணவன் அல்லாத வேறு ஆடவனுடன் (ஏழு தலைமுறை தாண்டியும் போகலாம்) உடல் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளும் நியோகம் எனும் முறையை மனுநூல் விதித்திருப்பதை எடுத்துக் காட்டி-யுள்ளார். இந்த முறையில் பிறந்தவர்கள் நியோகி (பார்ப்பனர்கள்) என்று அழைக்-கப்படுகின்றனர். அந்தப் பார்ப்பனப் பிரிவினர் ஆந்திர மாநிலத்தில் அதிகம். அவர்களில் ஒருவரான காலஞ்சென்ற பி.வி.நரசிம்மராவ் இந்தியாவின் தலைமை அமைச்சராகவே பதவி வகித்தார். இந்த வகை நியோக சம்போகம் கைம்பெண்-களுக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதி வழங்கும் நிலையில் யார் யார் சாட்-சியம் அளிக்கத் தகுதியானவர் என்பதைக் கூட மனுநூல் குறிக்கிறது; ஆனால் மக-ளிரின் சாட்சியத்தை ஏற்கக்கூடாது என மனுநூல் தடை செய்வதையும்கூடக் குறிப்-பிட்டிருக்கிறார். நீதிபதிகளுக்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன_- ஜாதி அடிப்படையில்தான்! வழக்குகளை விசா-ரிக்-கும் வரிசை முறை பற்றி கூட, விஸ்தார-மாகக் கூறுகிறது மனுநூல்! இதிலும் ஜாதி-தான் அடிப்படை. முதலில் பார்ப்பனர் சம்பந்தப்பட்ட வழக்குகள், பிறகு க்ஷத்திரியர், பிறகு வைசியர், கடைசியில் சூத்திரர் சம்-பந்தப்பட்ட வழக்குகள் என்று மனுதருமம் முழுக்க சர்வம் வருண மயம் ஜகத்_தான்!
மகளிரைப் பழிக்கும் மனுதருமம் என ஓர் இயலையே ஆக்கி அளித்திருக்கிறார். மனுநூல் கொடுமைகளையும் தமிழ்நூல் தகைமைகளையும் ஒப்பிட்டுக் காட்டியி-ருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நல்ல நெசவுக்கூறையில் தங்க இழை ஊடுருவது போன்று புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளை எடுத்து ஆண்டிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
பெண்ணையும் தந்து பொன்னையும் கொட்டிக் கொடுக்கும் வரன் தட்சணை முறை, எல்லாவற்றிலும் தட்சணை பார்க்கும் பார்ப்பனரின் பழக்கம் என்பதையும், பொன்னோ பொருளோ பரிசமாகக் கொடுத்து (முலை விலை) பெண்ணைக் கொள்வது தமிழரின் பழக்கம் என்பதையும் எடுத்துக் காட்டி எழுதியிருக்கிறார். இந்த இடத்தில் நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் என்போரின் செயல்முறைகள்பற்றி நயமாக இடித்துரைப்பது, சரியான பெரியாரிஸ்ட் என்பதற்குச் சான்றாக உள்ளது.
புதையல் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மனுதருமம் கூறுவதை-யும், கரிகால் பெருவளத்தான் காலத்தில் புதையல் பற்றி நடந்த வழக்கையும் ஒப்-பிட்டுக் காட்டி தமிழரின் செம்மாந்த பழக்க வழக்கங்களைப் பெருமைபடப் பேசுகிறார்.
தமிழரின் பண்பையொட்டியவாறுதான் ஆங்கிலேயர் அமைத்த Treasure Trove Act இருக்-கிறது. பல கொலைகாரர்கள், பழங்-காலத்தில் தண்டிக்கப்பட்டதே கிடையாது_ -அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்-தினால் என்று கோபப்படுகிறார் - நியாயமாக! மனு தருமத்திற்கு எதிராக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனச் சட்டம் கொண்டு வந்த காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் மெக்காலேவைக் கண்டிக்கிறார்கள்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொலை செய்த பார்ப்பானுக்குத் தூக்குத் தண்டனை உறுதி என்பதை அறிந்துகொண்ட திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர், தீர்ப்பு நாளுக்கு முந்திய இரவு 12 மணிமுதலே நடை முறைக்கு வரும் வகையில் தூக்குத் தண்ட-னையை ரத்து செய்து சட்டம் போட்டார் என்பதை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். (படிக்க. சங்கராச்சாரி-_யார்?)
நூலின் அருமை, பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு ஏராளமான மனுதருமக் கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்-ளன இந்நூலில். இளைஞர்கள் படித்து எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் ஆற்றொழுக்கு நடையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள நூல். எங்கே பிராமணன் என்று தேடுகிறார்கள். ஹிந்து மகா சமுத்திரம் என்று காட்டுகிறார்கள். வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று கேட்கிறார்கள். அனைத்துக்கும் ஆணி அடித்தாற் போன்ற விடைகளைத் தரும் நூல் - ஆரியக் கொட்டத்தை அம்பலப்படுத்தும் நூல் மனுதருமம் ஒரு மறுபார்வை! எல்லோரும் வாங்கிப் படித்துத் தெளிவு பெறவேண்டும்.
http://www.viduthalai.com/
- சு.அறிவுக்கரசு
விடுதலை

திருமணமான மகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு உரிமை உண்டு
நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூரு, மார்ச் 21_ இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மூதாதை-யரின் பூர்வீக சொத்தில் திருமணமான மகளுக்கும் சம பங்கு உண்டு என்று கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்து கொடுக்க மறுப்பு
பெங்களுருவைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண்ணுக்கு அவரது சகோதரர்கள் மூதாதை-யர் சொத்தில் பங்கு கொடுக்க மறுத்தனர். திருமணமான பிறகு சொத்-தில் உரிமை கொண்-டாட முடியாது என்று கூறினர்.
இதையடுத்து அந்தப் பெண் கருநாடக உயர்-நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என். குமார், ஏ.என். வேணுகோ-பால், கவுடா ஆகி-யோரைக் கொண்ட அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:
கூட்டு வாரிசுரிமை கொண்ட பாரம்பரிய அல்லது மூதாதையரின் சொத்தில் திருமணமான மகளுக்கு சம பங்கு உண்டு.
1956-ஆம் இந்து வாரிசு-ரிமைச் சட்டம் அம-லுக்கு வந்த நாளில் இருந்து நிலுவையில் உள்ள எல்லா வழக்கு-களுக்கும் இது பொருந்தும்.
இந்த வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-_ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மிக முக்கியமானது. இதன்படி ஓர் இந்துப் பெண் தனது பிறப்பால் மூதாதையர் சொத்துக்கு உரிமை படைத்தவர்களாக இருந்-தார்-கள். இந்த சட்டத் திருத்தம் அமலாக்க தேதி டிசம்பர் 24, 2004 என்ப-தால் இந்த காலக்கட்டத்-திற்குப் பிறகு தான் மூதா-தையர் சொத்தில் மகள் பங்கு கேட்க முடியும்.
சொத்து கேட்பதை தடுக்க முடியாது
எனினும் 2004 டிசம்-பருக்கு முன்பே வாய் வழி ஒப்பந்தம் மூலம் சொத்து பிரிக்கப்பட்டு இருந்தால்கூட சொத்தில் பங்கு கேட்பதில் இருந்து பெண்களை தடுக்க முடியாது.
பதிவு செய்த பாகப்-பிரிவினை தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வந்த சொத்துகள்-மீது மட்டும் தான் பங்கு கேட்டு வழக்கு தொடர முடியாது.
இவ்வாறு தீர்ப்பில்-கூறப்பட்டுள்ளது.
இந்த நீண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி என். குமார் கூறுகையில், ஒரு மகன், தனக்கு மனைவி வரும் வரை தான் பெற்-றோருக்கு மகன்; ஆனால் ஒரு பெண், வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு மகளாகவே இருக்கிறார் என்றார்.

சனி, 20 மார்ச், 2010
விடுதலைப்புலிகள் கேட்டதை தற்போது தமிழ் கட்சிகள் கேட்கமுடியாது

ராஜபக்ச
செய்திகள்எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத்தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல்லாம் கேட்க முடியாது. வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது என சிறிலங்கா அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் ‘ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்றார்.
“ஸ்ரெய்ட் ரைம்ஸ்’ பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமா?
பதில்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நான் பதற்றமற்ற நிலையில் உள்ளேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது எனக்கு முக்கியமான விடயமல்ல.
ஏனென்றால், நான் அரசதலைவராகத் தெரிவு செய்யப்பட்ட வேளை என்னிடம் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளுமன்ற சபாநாயகரை எதிர்க்கட்சியினரே நியமித்தனர்.
நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை நான் கலைத்த வேளை, சபாநாயகர் உட்பட 47 புதியவர்கள் எனது கட்சியில் இருந்தனர். எனக்கு பெரும்பான்மையும் இருந்தது.
ஆகவே, நான் எண்ணிக்கை குறித்து கவலையடையவில்லை. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறுவோம். எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அரசமைப்பை மாற்றுவதற்கு உதவும்.
இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை.
கேள்வி: விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னமும் செயற்படுகிறார்களா?
பதில்: இலங்கைக்குள் செயற்படுவதை விட, அதற்கு வெளியேதான் அதிகளவிற்கு செயற்படுகின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுக்கென நிகழ்ச்சி நிரல் உள்ளது. அவர்கள் இதில் வாழ்கின்றனர்.
கடந்த காலம் போன்று தமிழர்கள் தற்போது நிதி வழங்க முன்வராததால் விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் பொறுத்தவரை இங்கே ஏதாவது நடக்க வேண்டும்.
கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதன் அதிகாரங்களைக் குறைப்பீர்களா?
பதில்: இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். நாடாளுமன்றம் இவ்வாறான விடயங்களை கடந்த காலங்களில் கையாண்டுள்ளது. ஆகவே, நாடாளுமன்றமே இதனைத் தீர்மானிக்கட்டும்.
கேள்வி: நாடாளுமன்றம் நீங்கள் சொல்வதைத் தானே செய்யும்?
பதில்: எனக்குத் தெரியும். அவ்வாறே கருதுகிறேன். என்றாலும், சில மாற்றங்கள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடுடைய அரசதலைவர் முறையை நான் விரும்புவேன். அல்லது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் பிரதமரையும் விரும்புவேன். அல்லது ஓய்வுபெற்று சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று அரசிற்கு ஆலோசனை வழங்க விரும்புவேன்.
ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறையில்லாவிட்டால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது.
கேள்வி: பூரண நல்லிணக்கத் திட்டம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?
பதில்: இதனையே நான் நம்புகிறேன். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. இதேபோன்று அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை.
கிராமமொன்றிற்கோ அல்லது நலன்புரி முகாமிற்கோ சென்று உங்களுக்கு அரசமைப்பு மாற்றம் வேண்டுமா எனக் கேளுங்கள். எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண்டும், எனது குழந்தைக்கு கல்வி வேண்டும் என்ற பதிலே வரும்.
இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்தால் புதிய நடைமுறையும், புதிய அரசியல்வாதிகளும் உருவாகலாம்.
இதற்காகவே நான் தேர்தலை நடத்தினேன். வடபகுதி மக்கள் எனக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தும் தேர்தலை நடத்தினேன். என்றாலும் எனக்குக் கிடைத்த வாக்குகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
கேள்வி: தீர்வு என்ற வகையில் சமஷ்டி கொள்கை தகுதிவாய்ந்தது இல்லையா? இந்தியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இது பலனளித்துள்ளதே?
பதில்: சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமான வார்த்தை. அது பிரிவினையுடன் தொடர்புபட்டுள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெற அல்லது விலகத் தீர்மானித்தால் சமஷ்டி பற்றிப் பேசுவதே சிறந்த வழி, அதற்குப் பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நான் ஓர் அரசியல்வாதியல்லவா? உண்மையான நிலைவரம் என்னவென்றால், இது இந்தியா போன்று பாரிய நாடல்ல. இலங்கையின் வரலாற்றை மறக்க முடியாது.
தற்போது அனைத்து முதலமைச்சர்களும் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடிகின்றது.
என்றாலும், அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கினால் தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்வார்கள்.
இந்தியத் தமிழர்கள் தமது பகுதிக்கு வரமுடியாது என அவர்கள் தெரிவிக்கவும் கூடும்.
கேள்வி: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? குறிப்பாகப் பொலிஸ் மற்றும் காணி மீதான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
பதில்: இதுகுறித்து நாங்கள் ஆராய வேண்டும். 13 ஆவது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்கிவிட்டோம். நிலங்கள் தொடர்பாகச் செய்வதற்கு எதுவுமில்லை.
வடக்கில் மாகாணசபை இல்லாத போது என்னால் என்ன செய்யமுடியும்? எவ்வாறெனினும், மத்திய அரசின் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.
நீர்ப்பாசனக் குளங்களைத் தமது நண்பர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிலர் வழங்குகின்றனர். பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரை எனது மக்கள் இதனை வழங்கவேண்டாம் என்றே தெரிவிப்பர்.
சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றவேளை, என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள். அவரது தொகுதிக்குள் அவரை நுழைவதற்கு அந்த மாநில முதலமைச்சர் அனுமதி வழங்க மறுத்தார்.
அவர்கள் பொலிஸின் கட்டுப்பாட்டிற்காக அடிபணிகின்றனர்.
இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன்
நான் இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன். இதே தவறை நான் செய்வேன் எனக் கருதுகிறீர்களா?
கேள்வி: விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறுவீர்களா?
பதில்: இல்லை. செயற்படாமல் இருக்கும் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக இலங்கைக்கு வெளியே அவர்கள் உள்ளனர். தலைமைத்துவம் அழிக்கப்பட்டதால் அனைத்தும் முடிவடைந்து விடவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்களே ஆகின்றன. பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைப் போராளிகள் செயற்படாமலுள்ளனர்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தற்கொலைப் போராளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தினர். அவர்கள் கொழும்பிலும் ஏனைய வெளிநாடுகளிலும் உள்ளனர். பலர் அவர்களைப் பயன்படுத்தலாம்.
பொன்சேகா ஒரு முட்டாள் மன்னிப்பு வழங்கு சாத்தியம் இல்லை
கேள்வி: பொன்சேகா குறித்த உங்களது உணர்வலைகள் என்ன? நீங்கள் திட்டமிட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தின் கீழ் அவரையும் அரவணைக்க முடியாதா?
பதில்: அவர் ஒரு முட்டாள். நவம்பர் 16ஆம் திகதி அவர் இங்கு எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அரசதலைவர்த் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீரா என நான் அவரைக் கேட்டேன். அவர் இல்லையென்றார்; அதுபற்றிச் சிந்திக்கவில்லை என்றார். இறுதியாக என்னைச் சந்தித்த போது கூட அவர் இதுபற்றிக் கூறவில்லை.
நான் அவரிற்கு ஆலோசனை வழங்கினேன். அரசியல், இராணுவத்திற்குரியது அல்ல என்றேன்.
இராணுவத்தில் நீங்கள் உத்தரவிட்டால் அவர்கள் பின்பற்றுவார்கள். அரசியலில் வேறு மாதிரி. உங்களை விமர்சித்தவர்களிடமே நீங்கள் செல்கிறீர்கள் என்றேன். அவர் இதுவும் அரசியல்தானே என்றார்.
நான் நீங்கள் அவதானமாக இருங்கள், அவர்கள் ஒருநாள் உங்களைக் கைவிடுவார்கள் என்றேன்.
சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அவர் தன்னை அரசியலுக்குத் தயார்ப்படுத்தாத முட்டாள் என்றார்.
சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு
போப் தலைகுனிவு
வாடிகன், அமெரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்-களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ள-தாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்-லாந்து, ஜெர்மனி, நெதர்-லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்-திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்-தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்-வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்-டுள்ளன. இதனால், வாடி-கன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தம-டைந்துள்ளார்.
போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ஆம் ஆண்டு முதல் 81ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்-மனி-யில் உள்ள பாதிரி-யார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்-டது தொடர்பான புகார்-கள் வந்த வண்ணம் உள்-ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தி-னார்.
சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்-களுக்கு அவர் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்-ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனப்பாதிப்பை அமைதிப்-படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார்.-இதற்கி-டையே அயர்லாந்-தைச் சேர்ந்த கத்தோ-லிக்க தலைவர்கள் நடந்த தவ-றுக்கு மன்னிப்பு கேட்-டுள்-ளனர். அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாற்-றிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, என்னால் பாதிக்கப்பட்ட-தாக கருதுபவர்கள் அனை-வரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இன்றைய நிலையில், ஜெர்மன் தேவாலயங்-களில் உள்ள பாதிரியார்-கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏரா-ளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்ப-தாகவும் தெரிவிக்கப்-பட்டது.

பெண்களின் நோய்களை குணப்படுத்த பிரம்படியாம்!

சாமியாருக்கு வலைவீச்சு
லக்னோ, மார்ச் 18_- நோய்களை குணப்-படுத்-துவதாகக் கூறி பெண்-களை பிரம்பால் அடித்-தும், உதைத்தும் வந்த மந்திர வைத்திய சாமி-யாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வரு-கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநி-லம் இடா மாவட்டத்தில் சிட்புரா என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள காளி கோயிலில் நேக் சிங் என்ற சாமியார் பெண்-களை அடித்து, உதைத்து, விசித்திரமான முறையில் நோய்களை குணப்படுத்-துவதாக தகவல்கள் பரவின.
பெண்களுக்கு மட்-டுமே மந்திர வைத்தியம் பார்க்கும் இவர், பாதிக்-கப்பட்ட பெண்களை காளி கோயிலில் உட்கார வைத்து தாறுமாறாக அடித்து உதைக்கிறார். பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைத்-தும், கன்னத்தில் ஓங்கி அறைந்தும், திடீரென வயிற்றிலும், முதுகிலும் குத்து விட்டு அலற வைக்கிறார். சில சமயங்-களில் தலை மீது கூட ஏறி நின்றிருக்கிறார் என கிராம மக்கள் கூறுகின்ற-னர். இந்த அடிதடி மந்-திர வைத்தியத்தின் மூல-மாக புற்றுநோய் உள்-ளிட்ட பல்வேறு நோய்-கள் குணமாகிவிடுவதாக தகவல் பரவியது. காளி ஆத்தாள் தன் உடலில் புகுந்து, நோயாளிகளை தன் கையாலேயே அடித்து நோய்களை வாங்கிக் கொள்கிறாள் என்று இவர் கூறுவதை நம்பி ஏராளமான முதிர்கன்னி-கள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கடந்த சில நாள்களாக அடி வாங்கிக் கொண்டி-ருந்தனர். இந்நிலையில் இது-பற்றிய தகவல் தேசிய பெண்கள் ஆணை-யத்-துக்கு செய்தி அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்-பட்டது.
உடனடியாக இது-குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உ.பி அர-சுக்கு உத்தரவிடப்பட்-டது. இதையடுத்து இடா மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சிட்-புரா கிராமத்துக்கு சென்-றது. காவல்துறையினர் அங்கு வரும் தகவலை அறிந்த சாமியார் தப்பி-யோடி விட்டார். அவ-ரைக் கைது செய்ய காவல்துறை-யினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)