வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வாலாஜா படைத்த வரலாறு





அய்யாவை அழைத்து அக மகிழ்ந்த ஊர்

தமிழ்நாட்டில் முதன்முதலாக உருப்பெற்ற நகராட்சி வாலாஜா. சென்னையிலிருந்து வெள்ளை யர் அரசு ஏற்படுத்திய முதல் தொடர்வண்டி வழித் தடம் வாலாஜா. அறிவுலக ஆசான் அய்யாவை அழைத்து வரவேற்பு அளித்து அகமிக மகிழ்ந்த ஊர் வாலாஜா.

தமிழ்நாட்டில் வாலாஜா பெயரில் வாலாஜா நகரம், வாலாஜா ஏரி, வாலாஜாபாத் உண்டு. அந்த வரிசையில்தான் வாலாஜாபேட்டை நகரமும். மத மாச்சரியங்கள் மறந்து அமைதியாய் வாழ்ந்திருக் கும் மக்களிடையே மதவெறியர்களின் ஆரவாரம்-வெற்றுக்கூச்சல். மதவெறிக்களமாக மாறிவிடக் கூடாதே எனும் பதைபதைப்பில் திராவிடர் கழகம்-தமிழர் தலைவரின் கட்டளைக்கிணங்க காரியத்தில் இறங்கியது.

மனிதநேயத்தை மலரச் செய்ய....

மனித ஒற்றுமையை வளர்த்தொடுக்கவும், மனிதநேயத்தை மலரச் செய்யவும், கழக செயல் வீரர்களின் செயல்பாட்டு விளையாக அரக் கோணம் கழக மாவட்டத்தின் சார்பில் வாலாஜா நகராட்சி திருமண மண்டபத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் 200 இளம் குருத்துகள் (மாண வர்களே பெரும்பாலும்) பங்கேற்க சீருற நடை பெற்றது.

ஆகஸ்ட் 7, 8 ஆகிய இரு நாள்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாலாஜாவில் எங்கு பார்த்தாலும் கழக் கொடிகளும், கருப்புச் சட்டைகளின் நடமாட்டத்துடனும் காட்சிகள். மதவெறியை அடிக்கடி தூண்டிடும் தூபம் போட்டிடும் இந்து முன்னணி வகையறாக்களுக்கு வாலாஜா ஒரு முக்கிய கேந்திரம். இந்து மக்களின் உரிமையைப் பாதுகாத்திட வேலூரில் மாநாடு வேறு. இந்த சூழ்நிலையில்தான் இளைய தலைமுறையை மதவாதப் பிடிக்குள் சிக்காமலிக்க தமிழர் தலைவரின் ஆணைப்படி இந்த பயிற்சி முகாம்.

பெரியாரியல் பயிற்சியின் நோக்கம்!

அறிவில் தெளிவை, சிந்தனைப் போக்கில் அறிவியல் மனப்பான்மையை, எந்த ஒன்றையும் பகுத்தறிவு நோக்கில் அணுகிடும் போக்கை- நடைமுறையை மாணவர்கள் - இளைஞர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்பதே பெரியாரியல் பயிற்சி பட்டறையின் நோக்கம். மாவட்ட கழக நிருவாகிகள், கோ.பெருமாள், சொ.சீவன்தாசு, பாணாவரம் மா.பெரியண்ணன் மற்றும் இளைஞரணி, மாணவரணி நிருவாகிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயலாற்றி பயிற்சிப் பட்டறையில் 200 பேர்களை பங்கேற்கச் செய்தது பாராட்டுக்குரியது.

வீ.அன்புராஜ் தொங்டகி வைத்தார்

ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10மணிக்கு பயிற்சிப் பட்டறையை சுருக்கமான தமது வழிகாட்டுதல் உரையோடு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கி வைத்தார். எப்போதும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அவரின் சுறுசுறுப்பு, அளவான பேச்சு, உட்கார்ந்து பணிசெய்ய விரும்பாத நடை, கொள்கையின் மீது அளவற்ற ஈடுபாடு, இயக்கத்தின் போக்கில் புலிப்பாய்ச்சலை, புதுமையை புகுத்திட வேண்டும் என்று அறிவியல் நோக்கு கழகத் தோழர்களின் செயல்பாட்டில் புதுவேகத்தை ஏற்படுத்துவதாய் இருப்பதை நேரில் நிகழ்வுகளில் காணமுடிகிறது.

வாலாஜா வில் தொடக்க நிகழ்வில் பயிற்சி முகாமில் அவரின் பங்கு பணி இருக்கும் போதே- மறுநாள் ஆந்திர தலைநகர் அய்தராபாத்தில் பெரியார் திரைப் பட தெலுங்கு பதிப்பு தொடக்க நிகழ்ச்சி பற்றியும், அய்யா பெரியாருக்கு அங்கு எப்படியாவது சிலையினை திறந்திட வேண்டும் என்பது பற்றியும் ஆன எண்ண ஓட்டம்-செல்பேசி உரையாடல் என அவரின் செயல்பாடு வியக்க வைத்தது. துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில், பொதுச் செயலாளர் கள் கலி. பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி 5 நிமிடத்தில் முடிவுற்று வகுப்புகள் தொடங்கிட வகை செய்து அவர் புறப்பட்டார்.





வாலாஜாவில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற தோழர்கள் (8.8.2010).

தலைப்பும்-வகுப்பும்

புதிய வரவுகளான மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரி யாரை அடையாளப்படுத் திடும் பெரியார் ஓர் அறி முகம் எனும் தலைப்பிலான முதல் வகுப்பினை கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்தார். இயக்க வரலாறு, கடவுள் மறுப்பும் தமிழர் தலைவரின் சிறப்பும் எனும் தலைப்பு களில் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு, இதிகாசப் புரட்டு, எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன், பார்ப் பனர் பண்பாட்டு படை யெடுப்பு பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் ஆகிய தலைப்புகளில் கவிஞ ரும், பெண்ணுரிமை பற்றி துணைப் பொதுச் செயலா ளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, சாமியாடுதல் மோசடியே எனும் தலைப்பில் டாக்டர் இரா. கவுதமன், தமிழரா-திராவிடரா? இந்துத்துவா? ஆகிய தலைப்புகளில் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். பழ.வெங்கடாசலம் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி காஞ்சி கதிரவனின் அறிவியல் விளக்க குறிப்புகள் சிறப்புற அமைந்தன.

இளம் குருத்துகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழர் தலைவர்

இரண்டாம் நாள் முகாமில் தமிழர்தலைவராம் நம் கழகத் தலைவர் சமூக நீதி எனும் தலைப்பில் வகுப்புரிமை வரலாற்றை, இடஒதுக்கீட்டின் தொடரோட்டத்தை மிகவும் எளிமையாக இளம் மாணவர்களும், இளைஞர்களும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் வகுப்பு நடத்தினார்.

திரா விடர் கழகத்தின் அணுகு முறையை பற்றிய வகுப்பு இயக்கத்தின் நடை முறையை-வரலாற்றுப் போக்கை விளக்குவதாய் இயக்க வரலாற்றோடு இணைந்த தமிழர் தலைவரின் வகுப்பு அமைந்தது.

கேள்வியும் கிளத்தலும்

மாணவர்கள் எழுப்பிய அய்ய வினாக்களுக்கு அருமையான விளக்கங்களை பதிலுரையாகத் தந்த தமிழர் தலைவரின் அணுகுமுறை இளைய தலை முறையையும், பெரியார் பெருந்தொண்டர் களையும், இயக்கத்துக்கு அப்பாற்பட்டவாகளை யும் ஈர்ப்பதாய் இருந்தது.

சான்றிதழ் வழங்கினார்

இருநாள் பயிற்சி முகாமிலும் பங்கேற்ற 200 மாணவர்-இளைஞர்களுக்கும் உரிய சான்றித ழினை தமிழர் தலைவர் வழங்கினார். கொள்கை விளக்க நடன நிகழ்ச்சி குடியாத்தம், பெரியார் பிஞ்சுகளான இர.க.அறிவுச்சுடர், இ.அ.மதிவதனி ஆகியோரின் கழக பாடல்களுக்கான பரதநாட் டியம் (நடன நிகழ்ச்சி), அருமையாக அரங்கேற்றப் பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் சொ.சீவன்தாசு நன்றி கூறினார்.

நேரிடை களப்பயிற்சியாக....

பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நேரிடை களப்பயிற்சியாக 8.10.2010 மாலை நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், திறந்தவெளி மண்டல மாநாடும் அமைந்தது. மக்களை வீதிதோறும் சென்று சிந்திக்கத் தூண்டிய நிகழ்வாக மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் அமைந்தது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

ஊர்வலத்தில் வேலூர் மண்டலத்தின் மாவட்ட கழக நிருவாகிகளும், தோழர்களும், கொடி பிடித்த கைகளுடன் முழக்கமிட்டு வந்த காட்சி இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? எனும் கேள்விக் குப் பதிலாய் அமைந்தது.

மகளிரணியினரின் தீச்சட்டி,

இளைஞர்களின் அரிவாள் மீது நிற்பது

காவடி ஆட்டம், முதுகில் அலகு குத்தி

கார் இழுத்து வந்த காட்சி, குபீர் தீ உமிழும்

நிகழ்ச்சி என மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி களை கட்டியது.

திறந்தவெளி மாநாடு

அறிவார்ந்த சமுதாய புனரமைப்புக்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், அய்யாவின் அரிய கருத்துக் கருவூலமான குடிஅரசு தொகுப்புகள் வெளியீடும், போட்டி போட்டு அதனை வாங்கிய காட்சியும், ஒரத்தநாடு ஒன்றியம் விடுதலைக்கு சந்தா வழங்கிய காட்சியும், தமிழர் தலைவரின் சங்க நாதமும் மண்டல மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்வுகள் இளை ஞர்களை எழுச்சிகொள்ளச் செய்வதாய் அமைந் தது. மாபெரும் மக்கள் திரள் கட்சியைத் தாண்டி மதவெறிக்கு எதிராக திரண்டிருந்த காட்சி இயக்கத்தின் மனிதநேயப் பணிகளுக்கு உள்ள மக்கள் ஆதரவை எடுத்துச் சொல்வதாய் அமைந்தது.

மொத்தத்தில் வாலாஜா புதிய வரலாறு படைத்தது என்பதே உண்மை!

- துரை.சந்திரசேகரன்
துணைப் பொதுச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக