புதன், 11 ஆகஸ்ட், 2010

இலங்கை அரசின் நிவாரணம்: நடவடிக்கை சரியில்லை

லண்டன், ஆக. 11 இலங் கையில் நடைபெற்ற போருக் குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணி களை உரிய முறையில் மேற் கொள்ளத் தவறிய செயலுக்கு, இலங்கை அரசின் அறிக்கை யின் அடிப்படையிலேயே இலங்கை அரசுக்கு, உலகின் பல நாடுகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள் இணைந்து செயல்படும் மூத்தோர் என்னும் அமைப்பின் தலைவர் டெஸ்மாண்ட் டூடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ்க் குடி மக்களின் மீது தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை மற்றும் சித்தரவதை யும், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் காணாமற்போவதும் உண்மையில் பேரச்சத்தை ஏற் த்துவதாக உள்ளது என்று டூடு கூறியதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் தென் ஆஃப்ரிக்க நாட்டின் உண்மையைக் கண்டறிந்து, நிவாரணம் தேடும் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்

எவர் ஒருவரும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கும் அளவுக்கு இலங்கை அரசு தன் செயல்பாடுகளை உயர்த்திக் கொள்ளவில்லை. அரசின் செயல்பாடுகள் மேலும் வெளிப் படையானவையாக இருக்க வேண்டும் என்பதுடன் முறை யான ஊடகச் செய்திகள் வெளியிடப்பட அனுமதிக்கப்படும் ஒரு சகஜமான சூழ்நிலை நிலவவேண்டும் என்று பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மார்ட்டி அஹ்திசாரி கூறினார்.

மனித இனத்தின் துன்பங்களுக்கான முக்கிய கார ணங்களைப் போக்க உலகத் தலைவர்கள் பலரையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த மூத்தோர் அமைப்பை நெல்சன் மண்டேலா 2007 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இலங்கையில் போருக்குப் பின் மேற் கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் இலங்கையில் இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும், அரசினைக் குறை கூறுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் பேரச்சம் தரத்தக்கவை என்று இந்த அமைப்பு தனது அறிக்கையில் குற்றம் சாற்றியுள்ளது.

மனித உரிமைகள் பற்றிய இலங்கை அரசின் மோசமான அணுகுமுறை, நல்லாட்சி தரத் தவறியது, தனது செயல்பாடுகளுக்குப் பொறுப்பாகப் பதில் அளிக்கத் தவறியது ஆகியவற்றைக் கண்டிக்காமல் உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, இது போன்று செயல்பட மற்ற நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மூத்தோர் குழுவில் அயர்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேரி ராபின்சன், அய்க்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், அல்ஜீரிய நாட்டின் முன்னாள் அயல்துறை அமைச்சர் லக்தர் பிராஹிமி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மார்ட்டி அஹ்திசாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக