சனி, 3 ஏப்ரல், 2010

மனிதனைக் கடவுள் படைக்கவில்லை!

இடைவெளி சுருங்குகிறது

சு. அறிவுக்கரசு

அறிவியல் ஆய்வுகள் முற்றுப் பெறுவது இல்லை. அவை முடிவற்றவை. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நடைபெறக் கூடியவை. நடைபெறவேண்டியவை. ஆய்வு முடிந்து விட்டது என்று யாரும் ஓய்வு கொள்ள முடியாது. ஆய்வு... ஆய்வு... மேலும் ஆய்வு... என்று போகப் போகப் புதுப்புது முடிவுகள் தோன்றும்... தெரிய வரும்... அதன் பிறகும்... அதன் பிறகும்... இதுதான் அறிவியலின் சிறப்பே!

எந்தக் கேள்விக்காவது விடை தெரியவில்லை என்றால் அதனை நிரப்பு-வதற்குப் பக்தர்களுக்குக் கிடைத்துள்ள பதம்தான் கடவுள் என்பது. கோடிட்ட இடங்களை நிரப்புக எனும் கேள்விக்குப் பள்ளியில் பதில் எழுதிய பழக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை அவர்-களுக்கு. ஆனால்... அறிவைப் பயன்-படுத்துபவர்களுக்கு...? ஆய்வு தேவைப்-படுகிறது. விடையைக் காணும் முயற்சி-யில் இறங்கவேண்டி வருகிறது. செய்-யும்போது விடை கிடைக்கிறது - காலந்தாழ்ந்தாவது!

விநாடி வினா-விடை நிகழ்ச்சியைப் போல, இயற்கை தொடர்பான அனைத்-திற்கும் விடை அளித்திட வேண்டும் என எதிர்பார்ப்பது அவசரக்காரனுக்கு அடையாளம் மட்டும் அல்ல... அறிவற்ற அவசரமும் கூட!

ஆற அமர ஆராய்ச்சி செய்ததன் பயனாக மனிதனின் (பரிணாம வளர்ச்சி) படிநிலை வளர்ச்சி பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய படிநிலை புலப்பட்டிருக்-கிறது என்பது, இயற்கை (Nature) ஏட்டில் மார்ச் 25 ஆம் தேதி ஏட்டின் மூலம் தெரிய வருகிறது (தரவு: தி இந்து 25.3.2010).

சிம்பன்சி வகைக் குரங்குகளிலிருந்து படிநிலை வளர்ச்சி அடைந்து இன்றைய மனிதன் உருவானான் எனும் முடிவில் ஒரு தொடர்பு (லிங்க்) கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஒத்துக் கொண்டிருந்த நிலை இதன் மூலம் மாறுகிறது. உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் புத்தி-யைப் பயன்படுத்துபவர்களுக்கு உண்டு; வரும்! பக்தியில் திளைப்பவர்களுக்கு வரவே வராது. - பூனைக்கு இறக்கை உண்டு, நான் பார்த்தேன் என்பார்கள், இந்த வேதத்தில் கடவுளால் அருளப்-பட்ட வாசகம் தெரிவிக்கிறது என்பார்கள்.

இதோ தொடர்பு

இத்தகைய முக்கியமான தொடர்புச் சங்கிலி புதிய மரபணுவை வரிசைப்-படுத்தி ஆய்ந்ததில் கிடைத்துள்ளது. அந்த மரபணு மிடோ கான்ட்ரியால் டி.என்.ஏ. எனப்படுகிறது. சுருக்கமாக mt DNA என்கிறார்கள். இந்த மர-பணுவை மனிதனுக்கு முந்திய ஓர் உயிரில் (Hominin) இருந்து எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்த உயிர் ரஷியாவின் சைபீரியப் பாலை நிலப் பகுதியான அல்டாய் மலை-யில் வாழ்ந்ததாகும். தற்கால மனிதர்-களும், அவனுக்கும் முந்திய நியாண்டர்தால் மனிதனும் வாழ்ந்திருந்த காலத்தில் உடன் வாழ்ந்த உயிராகும். இந்த உயிர் அல்டாய் மலையில் டெனி-சோவா குகையில் வாழ்ந்துள்ளது 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்குப் பயன்பட்டுள்ளது. இதன் காலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்கிறார்கள்.

தற்கால மனிதர்கள் (ஹோமியோ சேபியன்கள்) நியாண்டர்தால் மனிதர்-கள் ஆகியோருக்கும் அல்டாய் மலை-மனிதனுக்கும் மாறுபாடுகள் தெரிகின்-றன. இத்தகைய மாறுபாடுகளின் அளவை நெக்ளியோடைட் (Necleotide) என்பதால் நிருணயிக்கி-றார்கள். அதன்படி, ஹோமியோசேபி-யன் மனிதனுக்கும் நியாண்டர்தால் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டின் அளவு 202 என்றும், இதுவே அல்டாய் மனிதனுக்குள்ள வேறுபாடு அளவு 385 என்றும் கணக்கிட்டுள்-ளனர். என்றால், வேறுபாட்டின் அளவை விளங்கிக் கொள்ளமுடியும். இந்த ஆராய்ச்சி முடிவு மனிதப் படிநிலை வளர்ச்சி எனும் மரத்தில் துண்டு விழுந்த இடத்தை நிரப்புகிறது. கோடிட்ட இடத்தை அறிவியல் தொடர் ஆராய்ச்சி நிரப்பியிருக்கிறது. அவசரக்கார, அறிவற்றவர்கள் போலக் கடவுளைக் கொண்டு நிரப்பவில்லை.

படிப்படியாய்...

சிம்பன்சி குரங்கு இனத்தின் ஒரு கிளைப் பிரிவாக 60 லட்சம் ஆண்டு-களுக்கு முன்பு மனித இனம் பிரிந்-தது. அல்டாய் மனிதன், நியாண்-டர்தால் மனிதன், ஹோமோசேபியன்-(இன்றைய)மனிதன் ஆகியோரின் மூதாதை ஒருவராகவே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் கிளைகளாக வளர்ச்சி பெற்றது என்பது முடிவு. அல்டாய் மனிதன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்துள்ளான் என்று நிறுவியுள்ள-னர். இவர்களுக்கு 100 கி.மீ. தூரத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்தி-ருக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில் ஹோமோ புளோரசியன்கள் எனும் மனிதர்கள் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருந்தனர் என்பதை முந்திய ஆய்வுகள் எடுத்துக் காட்டி-யுள்ளன. 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோஎரக்டஸ் எனும் மனித இனத்தவர் ஆப்ரிக்கக் கண்-டத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்-ளனர். இவர்களுக்குப் பிறகு வேறு இரண்டு வகையினர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்பதையும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்-கின்றன. இவர்கள் ஹோமோ ஹெய்டல்பெர்ஜென்சிஸ் அல்லது ஹோமோ ரொடீசியன்சிஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இவ்வகையினர் நியாண்டர்தால் மனித இனத்தின் மூதாதையர். 3 லட்சத்-திலிருந்து 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்றும் இன்றைய மனித இனத்தவர் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்பதும் ஆய்வுகளின் மூலம் அறியப்படும் உண்மை.

மனித இனம் உருமலர்ச்சி பெற்று வளர்ந்த பகுதி, பூமிப்பந்தின் மய்யப் பகுதியாகவும் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாகவும் இருக்கின்ற காரணத்தால், மனித இனத்தின் எலும்புகள், பற்கள் போன்றவை மட்கிஅழிந்து போகாமல் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து போய்-விட்டது. இதனால் ஆய்வுக்கும் மர-பணுக்களைக் கண்டறியும் சோதனை-களுக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், குளிர்ப்பகுதி-யான கிரீன்லாந்தில் கிடைத்த எஸ்கிமோ ஆணின் மயிரிலிருந்து எடுக்கப்பட்ட நியூக்ளியர் மரபணுக்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஊக்கம் தருவதாக உள்ளது. மயிர் என்று அலட்சியப்படுத்தப்படாமல் ஆய்வுக்குப் பயன்படுவதாக இருப்பதால், ஆய்வுகள் தொடரும் எனும் நம்பிக்கை நிறையவே வளர்கிறது. வெப்பப் பகுதிகளில் கிடைக்கும் மயிர்களிலிருந்து மரபணு பிரித்தெடுக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

சிறு துரும்பு வேண்டுமானால் பல் குத்த உதவலாம். ஆனால் அதனிலும் மெல்லிய மயிர் - மரபணு - மனிதனின் படிநிலை வளர்ச்சி- ஆகியவை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மனிதனைக் கடவுள் படைத்தது எனும் மடமையை உடைக்க உதவுகிறது.

புத்தி வந்தால் பக்தி போகும்!

சானியா மிர்சா


டென்னிஸ் விளை-யாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திரு-மணம் தேவையற்ற சர்ச்-சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்-த-ரா-பாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை _ இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ள-லாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்பு-கின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங் தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியி-ருக்கின்றனர்.

ஒருவர் யாரைத் திரு-மணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதி-காரம் கொடுத்தவர்-கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மத-வெறி-தான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்-சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திரு-மணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்-தால் திருமணம் செய்து-கொள்ளப் போகும் இரு-வரும் இஸ்லாமியர்கள் _ மத மறுப்புத் திருமணம்-கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்-தான் முஸ்லிமை திரு-மணம் செய்துகொண்-டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்-தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்த-போதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படை-கள் எதைத்தான் செய்ய-மாட்டார்கள்?

மத உணர்வோடு இது-போன்ற போக்கிரித்தன-மான வேலைகளில் ஈடு-படுபவர்களை இரும்புக்-கரம் கொண்டு ஒடுக்க-வேண்டாமா?

வன்முறைக்கு வைத்-தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

- மயிலாடன் www.viduthalai.com

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம் சிங்களக் காடையர்களால் உடைக்கப்பட்டு வருகின்றது


போர்க்காலத்திலும் அதன் பின்னரும் அந்த வீட்டினை மிகப் பெறுமதியான பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்துவந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் வீட்டினை உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் தொடராக தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவாலயங்கள் அனைத்தும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ நிலையங்களும், தென்னத் தோட்டங்களும் அமைக்கப்பட்டன. இதனை விடவும் வன்னியில் துயிலுமில்லங்களை அழித்ததுடன் அவற்றில் சிலவற்றில் இருந்து மண் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வீதிப் புனரமைப்பிற்கு அந்த மண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வன்னியில் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்கு மேலாக விடுதிகளை அமைப்பதற்கான முனைப்புகள் முன்னெடுப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிடவும் யாழ்ப்பாணம் வன்னிப் பகுதிகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள், தூபிகள், நினைவிடங்கள் அனைத்தும் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டு சர்வதேச போரியல் தர்மங்களை மீறி அவர்களது காடைத்தனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகைப் படைத்தது கடவுள் என்ற நம்பிக்கைக்கு கல்தா!


உலகம் தோன்றியது எப்படி?
பெருவெடிப்பு (பிக் பாஃங்க்) சோதனை வெற்றி

ஜெனீவா, ஏப். 1_- உலகம் எப்படி தோன்றி-யது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, பிக் பாங் (பெருவெடிப்பு) பரி-சோதனை வெற்றியடைந்-துள்ளது. அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த உலகம். இப்போ-தும் அந்த வெடிப்பினால் இந்த உலகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த உலகம் பழைய நிலைக்கு அதா-வது மீண்டும் ஒன்று திரண்டு விடும் என்பது தான், நவீன அறிவியலில் இந்த உலகம் தோன்றிய-தற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், பிக் பாங் தியரி (பெரு-வெடிப்-புக் கொள்கை) எனப்-படும். இந்த பெருவெடிப்-புக் கொள்கையைப் பரி-சோதிப்பதற்காக, பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லை-யில் அமைந்துள்ள சுவிட்-சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்-சிக்கான அய்ரோப்பியக் கூட்டமைப்பான, செர்ன் (சி.இ.ஆர்.என்.,), பூமிக்-கடியில் 27 கி.மீ., அள-வில் ராட்சத சுரங்க வடி-விலான ஒரு பரிசோத-னைக் கூடத்தை அமைத்-துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்-மாண்ட சக்தி மதிப்-பிடப்-படும்.

இந்தக் கூடம், லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும். கடந்த ஆண்-டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்-கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்-களை மோதவிட்டு முதற்-கட்டப் பரிசோ-தனை நடத்தப்பட்டது. இந்-நிலையில், புதிய அறிவிய-லில் உலகத் தோற்றம் குறித்த பல்வேறு சந்-தேகங்களுக்கு விடை-யளிக்கும் விதத்தில் இரண்-டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்-கின்-றன. இதைத் தொடர்ந்து, செர்ன் அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்-ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கை-தட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில், இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்-கும் என்று நம்பப்படு-கிறது. ஒரே நாளில் இதற்-கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்-கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், உல-கம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்-படும். வரலாற்றுப்பூர்வ-மான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆவியா? வாயுவா?

செய்தியும் - சிந்தனையும்

ஏடுகளிலும், இதழ்களிலும்தான் எத்தனை எத்தனை செய்திகள், தகவல்கள், ஒப்பனைகள்!

ஏதாவது ஒரு துரும்பு கிடைத்தால் அதைத் தூணாக்கிக் காட்டினால்தான் மக்கள் மயங்குவார்கள்; அற்ப விட்டில் பூச்சிகளாக தங்களால் விரிக்கப்பட்ட வலையில் வீழ்வார்கள் என்கிற தந்தி-ரத்தை ஏடு நடத்தும் வியாபாரிகள் கண்டு-பிடித்துள்ள தொழில் நுட்பம்.

காது, மூக்கு வைத்து கதை கட்டினால்-தான் மக்கள் வாய் பிளப்பார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டார்கள்.

திடீர் என்று ஒரு தகவல்: வேப்ப மரத்தில் பால் வடிகிறது _ பக்தர்கள் கூட்-டம்! (இது எதனால் வருகிறது என்று தாவர இயல் அறிஞர்கள் தெளிவுபடுத்திய பிறகும்கூட, தங்களின் வியாபாரத் தந்திரத்தை கைவிடுவதாக இல்லை).

காளைமாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். உருவம் என்று இன்னும் சில நாள்கள் கழித்து அவிழ்த்து விடுவார்கள்.

அதற்குப்பிறகு அம்மன் கண்கள் திறந்தன_ அதில் கண்ணீர் வடிந்தது என்று கட்டி விடுவார்கள்.

இப்படி குறிப்பிட்ட காலத்திற்கொரு-முறை மாயாஜால வித்தைகளைக் கட்டுரைகளாக்கி மக்களின் பர்சுகளைக் காலி செய்து விடுவர்கள்.

இப்பொழுது கரூர் பக்கத்திலிருந்து ஒரு தகவல்_ குமுதம் ரிப்போர்ட்டர் (1.4.2010) கட்டிக் கொண்ட புண்ணியம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவில் உள்ள தரகம்பட்டியருகில் உள்ளது சந்தனத்தான் மேடாம்.

இரவு நேரங்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறதாம்.. யாரோ சொன்னார்களாம். இது ஒன்று போதாதா? தொலைக்காட்சி-களும், ஊடக செய்தியாளர்களும் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சில பெரிசுகளை சந்தித்துப் பேட்டிகள். டி.வி.யில் முகம் தெரியும் என்ற ஆசை பெரிசுகளுக்குக்கூட பீறிட்டு விட்ட கால கட்டம் இது. அவரவர்களும் மனம் போன வாக்கில் அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆவி, பிசாசு, முனீஸ்வரன், கொள்ளிவாய்ப் பிசாசு என்கிற சமாச்-ரங்கள் எல்லாம் பெரும்பாலும் நம் நாட்டுக் கிராமத்துப் பெண்களிடத்தில்தான் ஸ்பரிசம் அதிகம்.

கருப்பாய் வாந்தி எடுத்தான் என்று ஆரம்பித்து கடைசியில் குடை குடை-யாய் வாந்தி எடுத்தான்; காக்கா காக்-காயாய் வாந்தி எடுத்தான் என்கிற-வரை வால் நீண்டு கொண்டு போகுமே!

அந்தப் பகுதியில் பார்ப்பனர்கள் ராஜாக்களிடமிருந்து பெற்ற தங்கக் காசுகளைப் புதைத்து வைத்திருந்தன-ராம். அதைக் கேள்விப்பட்ட கொள்-ளையர்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற-போது, புதைத்து வைத்த இடத்தைப் பார்ப்பனர்கள். சொல்ல மறுத்து விட்டனராம்.

கொள்ளையர்கள் அந்தப் பார்ப்பனர்களைக் கொன்று போட்டுச் சென்று விட்டனராம். அந்தத் தங்கக் காசுகளை யாரும் எடுத்துப் போய் விடக் கூடாது என்று கொலை செய்யப்பட்ட பார்ப்பனர்களின் ஆவி இரவு நேரங்களில் நெருப்பாய்க் கொதிக்கின்றனவாம்!

இன்னொரு தகவல்:

ராஜா ஒருவர் நடனப் பெண்ணிடம் தவறாக நடந்து வந்ததாகவும், அந்த நடனப் பெண் அரண்மனைக்குள் தீக்-குளித்து பலியானதாகவும், அந்தப் பெண்ணின் ஆவிதான் தீயாக எரிகிறது என்றும் இன்னொருவர் கதைத்துள்ளார்.

அடேயப்பா, இவர்களெல்லாம் சினிமா கதை மற்றும் வசனம் எழுதக் கிளம்பினால், எழுத்தாளர்கள் எல்-லாம் வீட்டுக்குப் போகவேண்டியது-தான்!

அந்த இடத்திற்குச் சென்றவர்கள் ஆவி அடித்து செத்துப் போய் விட்டார்களாம்.

அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பெண் கிணத்தில் விழுந்து செத்துப் போச்சாம் ஆனால் காலில் செருப்புடனும், கையில் கொடு வாளுடனும் சென்ற-வரை அந்த ஆவியால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்!

அப்படியென்றால் ஆவியின் சக்தியைவிட செருப்புக்கு அதிக சக்தி உண்டு என்று தானே அர்த்தம்?

இவ்வளவையும் ஒண்ணே முக்-கால் பக்கம் எழுதித் தள்ளிவிட்டு கடைசி ஒரு பத்தியில், இதுகுறித்து கரூர் அரசு கல்லூரி வேதியியல் பேரா-சிரியர் ஜஸ்வந்த் தெரிவித்த கருத்-தினை வெளியிட்டுள்ளது.

பாழடைந்த கிணறுகளில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன் என்கிற விஷவாயு உருவாகித் தீப்பந்துபோல் எரியும். அதேபோல சில இடங்களில் புதையுண்ட மரங்கள் மக்கிப் போய் பீட் (றிமீணீ) வகை கரிகள் உருவாகும். இப்படி மாஸ்கேஸ், பீட் ஃபார்மேஷன் ஆகிய இருவகை செயல்பாடுகளால் மட்டுமே இந்தப் பகுதியில் நெருப்பு உருவாகலாம். அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட பெரிய குழி இருந்து, அது காலப் போக்கில் மூடப்படும்போது அதனடியில் பெரிய வெற்றிடம் உருவாகும். அதனால்தான் கல்லைத் தூக்கிப் போடும்போது சத்தம் வருகிறது. உள்ளே இருக்கும் மக்கிய பொருள்கள் பகலில் அடிக்கிற வெயிலை உள்ளே கிரகித்துக் கொள்வதால், இரவு நேரங்களில் சூடான வாயுவாக வெளியேறும்போது, ஜுவாலையாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது என்றார்.

குமுதம் ரிப்போர்ட்டர்,
1.4.2010 பக்கம்!)

கடைசியாக என்ன எழுதுகிறது இந்த ரிப்போர்ட்டர்? என்னவாக இருந்தால் என்ன? சந்தனத்தான் மேட்டில் தீயோடு தினந்-தோறும் அந்த நடனக் கதையும், புதுப்-பொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது _ சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் என்கிறது இந்த இதழ்:

இப்படி ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த இதே கால கட்டத்தில் திருவில்லிப்புத்தூரையடுத்த தைலாபுரம் ஊரணியிலிருந்து ஒரு தகவலை தினமலர் (28.3.2010) வெளி-யிட்டுள்ளது.

அந்தத் தகவல் இதோ: ஊரணியில் தீப்பொறி பாதிப்பு ஏற்படாது: கனிமவளத் துறை ஆய்வில் தகவல் விருதுநகர் மாவட்டம் திருவில்லி-புத்தூரை அடுத்த அழகாபுரி அருகே இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட தைலாபுரம் ஊரணியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்-கெட் விளையாட, ஸ்டெம்ப் நடு-வதற்காக மண்ணை தோண்டியுள்-ளனர். அப்போது திடீரென வெள்ளை புகை வந்து தீப்-பொறி வந்துள்ளது. இதையடுத்து,ஏற்பட்ட பரபரப்பால் ஊரணியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கனிம வளத்-துறை அதிகாரிகள் வந்து மண்ணை பரிசோதனை செய்தனர். அத்துறையை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: ஊரணி மண்ணில் சுண்ணாம்பு படிவம் உள்ளது. இப்படிவம் உள்ள இடத்தில் மண்ணை வெயில் நேரத்தில் தோண்டி-னால், புகையோ, தீயோ ஏற்படாது. இரவு நேரத்தில் பகலில் அடிக்கும் வெயிலை சுண்ணாம்பு படிவம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இரவில் சுண்ணாம்பு படி-வத்தை கடப்பாரை கொண்டு தோண்டும் போது புகை, தீப்பொறி வரும். நாங்கள் பகல் நேரத்தில் பரிசோதித்ததில் எந்த வித புகையோ, தீயோ ஏற்படவில்லை. இருந்தும் இரவிலும் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க-வுள்ளோம். மற்றபடி மீத்தேன் போன்ற விஷ வாயுக்களோ, எரிமலையோ இல்லை. இது குறித்து மக்கள் பீதி-யடைய வேண்டாம், என்றார்.

ஒரு முட்டாள்தனமான_ அறிவுக்குப் பொருத்தமற்ற ஒன்றை, மூடநம்பிக்கை-யில் மூழ்கிப் போன மக்களின் வாயி-லிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பீதியைக் கிளப்பும் வகையில் இதழ்கள் வெளியிடுகின்ற-னவே_ அறிவியல் கண்டுபிடித்த கருவி-களைக் கொண்டு அச்சிட்டு களேபரம் செய்கிறார்களே!

இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் குடிமக்களின் அடிப்-படைக் கடமையா?

மக்களிடம் விஞ்ஞான மணப்பான்-மையை ஒவ்வொரு குடிமகனும் பரப்ப, வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பது, ஏடுகளுக்கும், இதழ்களுக்கும், ஊடகங்-களுக்கும் பொருந்தாதா?

லண்டன் தொலைக்காட்சியில் உத்திராட்சக் கொட்டையின் மகிமையை ஒளிபரப்பிய நிலையில், அரசு உடனடி-யாக அதனை மேலும் ஒளிபரப்ப விடாமல் தடை செய்ததே! அது நாடா _ இது நாடா?

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?

கருஞ்சட்டை

பார்ப்பனியமும் – சென்னை பதிவர் குழுமமும்

யார் அழைத்தென்றே தெரியாமலே மற்றுமொரு பதிவர் சந்திப்பு மாதிரி குழுமினோம். பெயர் பட்டியலில் இருந்த லக்கியும் நான் பொறுப்பள்ள என சொல்ல இதனை ஆரம்பித்து வைத்தது யாரோ வாசுதேவாயா தண்டோராய கேபிளாய நமஹ.

வழக்கம்போல் பேப்பரும் பேனாவாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் போட்டோவில் மிடுக்காகவும் நேரில் தளர்வாகவும் இருந்த மற்றொமொர் பார்ப்பனர். School புத்தி. எனது பையனை UKG படிக்கும் schoolலின் வளாகத்தில் கையில் பேப்பரும் புத்தகங்களுமாய் கடைசி நேரத்திலும் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பார்ப்பனியமுகங்கள் நினைவில் வராமலில்லை.

கடைசிவரை வடை கிடைக்கவில்லை, டீயும் இரண்டு மாரி பிஸ்கட்டும் கிடைத்தது. சரக்கு வழியில்லாமல் சென்றதால் யாரும் சரக்கு வாங்கிதரவில்லை. அப்புறம் ஆபிஸ் வந்து ஏஸியை போட்டுட்டு ஆர்.ஸியை திறந்தேன். சொல்ல மறந்துட்டேன் சிவராம் பேசும் போது முதலில் கையைதட்டி பின்னூட்டமிட்டேன்.

உரையாடல் அமைப்பு தன் சொந்த காசு போட்டு செலவு செய்யக்கூடாது என்று ஆர்வமிகுதியில் பேசினார், டீ.வி.ஆர். வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க.அதற்கு பைத்தியக்காரன் எழுந்து நாங்கள் தற்கொலை தான் செய்துக்கொள்வோம். இப்படிதான் இருப்போம் இதுதான் எங்களுக்கு பிடித்து இருக்கிறது. யாரிடமும் சென்று யாசகம் கேட்கமாட்டோம் என்று சொன்னது அவரது சார்ப்னஸயும் அல்ர்ட்னஸையும் பறைசாற்றியது.

என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்? அவர்களே தங்களை முன்னின்று ப்ரதானமாய் அனைத்திலும் முன்னிருத்திக்கொள்வது ஏன்? Reverse psychology உள்ளுக்குள் வீக்கா feel பண்ணறதாலயிருக்குமோ?

ஒரு புத்தகத்தில் ‘சாரு’ சொல்லுவார். ”அது என்ன விசுவ் இந்து பரிசத், பஞ்ரங் தள், பி.ஜே.பியை விடுங்கள் மத்த எல்லா கட்சிகளிலும் இவர்களே முக்கியமான பதவிகளில் ஆக்கரமித்து கொள்வது எப்படி?’ என.

எல்லோரும் பேசுகையில் அமைதி காத்த கூட்டம் சுகுணாதிவாகர் பேசும்போது மட்டும் சலசலவென சத்தம் அதிகமான போது, சடாரென எழுந்த நர்சிம், ’பேசுராங்கயில்ல அமைதியாயிருங்க’ என சத்தமிட்டுபின் அமைதியானது கூட்டம்.இது ஒன்றே போதும் அவர் தலைவராக, பல்வேறு சாதனைகள் அவர்பின் இருப்பினும்.

அப்புறம் வேறு யாருக்கொல்லாம் பதவிகள் கொடுக்கலாம். லக்கி(உபதலைவர்), கேபிள் சங்கர்(கொ.ப.செ), வானம்பாடிகள்(அமைப்பாளர்). உறையாடல் அமைப்பு ஒரு உள்துறையாக(கட்டற்ற சுத்ந்திரத்துடன்) செயல்படலாம். வால்பையன் போன்றோர் பகுத்தறிவு பட்டறை நடத்தலாம். என்னை போன்றோர் கவிதை எழுதி மற்றோர் உயிரை வாங்கலாம்.


(தமிழ் ஏன் தாழ்ந்து கிடக்கிறது என்று? தமிழ்நாட்டின் பிராமண புத்திஜீவி வர்க்கம்தான் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்களுக்குத்தான் இங்கே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கூடியவர்களாகவும், பேசக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரிந்த கலை இலக்கியம் என்ன? எஸ்.வி. சேகர், க்ரேஸி மோகன் நாடகம், ஜனரஞ்சகப் பத்திரிகைகள்… அவ்வளவுதான். -
www.charuonline.com

நித்யானந்தா உள்ளிட்ட மோசடி சாமியார் கும்பலை கைது செய்க!


உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துகளை அரசுடைமையாக்குக!
கி.வீரமணி வேண்டுகோள்!


ரூ.5 ஆயிரம் கோடியில்
நித்யா சுகபோக வாழ்க்கை அம்பலம்

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த திருவண்ணா-மலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற ஓர் 32 வயது இளைஞன் திடீரென நித்தியானந்தாவாக அவதாரம் எடுத்து, காவி உடை தரித்து, உள்நாட்டிலும், வெளி-நாட்டிலும் ஆன்மிக வியாபாரம் செய்து, சுமார் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளைச் சேர்த்து, பல ஊர்-களிலும் மடங்கள், தியான பீடங்கள் என்று அமைத்து, அதில் சினிமா நடிகைகள், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணவிலக்குப் பெற்ற பெண்கள், விதவைகள், குடும்பப் பெண்கள் முதலிய பலருடன் யோகா, தியானம் என்பவைகளைக் காட்டி அவர்களின் கற்-பையும் சூறையாடி, சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது!

இந்த கிருஷ்ணருக்கு வந்து பணிவிடை செய்த பெண்களுக்கெல்லாம் கோபிகா என்ற அடை-மொழியில் பெயர்கள்! என்னே ஆன்மிகம்! என்னே கடவுள் பக்தி!!

லீலைகள் - அசிங்கங்கள்

இளம் பையன்கள் எல்லாம் கடத்தப்பட்டும், ஓடோடி வந்து இந்த ஆ_சிரமத்தில் தங்கியவர்களுடன் லீலை-கள் ஆத்ம போதனை என்று எழுதமுடியாத அசிங்-கங்களின் அரங்கேற்றங்கள் எல்லாம் நடந்ததுபற்றி, தொலைக்காட்சிகளும், மீடியாக்களும், நக்கீரன் போன்ற ஏடுகளும் வண்டி வண்டியாக தகவல்களைத் தந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன!

தவியோ தவி என்று தவித்து!

பல படித்த பாமர முண்டங்கள் இந்த மோசடிப் பேர்வழி விரித்த ஆன்மிகப் பயிற்சி தியான, யோகா பயிற்சி வலைகளில் நன்றாக மாட்டிக்கொண்டு, அறுத்-தெறியத் தெரியாது வேடனிடம் சிக்கிய புள்ளி மான்-களாக ஆகி, தவியோ தவி என்று தவிக்கின்றார்கள்! அவமானத்தில் தலைகுனிவுடன் உள்ளார்கள்.

ஏதோ ஒரு குப்பையைக் கிளறினால் ஏதேதோ வரு-மாமே அதுபோன்று இந்த ஆசாமிபற்றி வரிசையாக அருவருப்புச் செய்திகள்.

சொகுசானந்தாவுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள்?

குறுகிய காலத்தில் இந்த சுந்தர கோஷ் சொகு-சானந்தாவுக்கு இவ்வளவு சொத்துகள் சேர்ந்தது எப்படி?

இந்த மோசடிப் பேர்வழியை வளர்த்துவிட்ட குற்றவாளிகள்_ பெரிதும் வார ஏடுகளே!

மீடியாக்களின் எல்லை மீறல் விளம்பரங்கள் _ விதவிதமான போஸ்களில் அந்தப் பித்தலாட்டக்-காரனின் படம், வாரந் தவறாமல் கட்டுரை _ அதையும் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் சி.டி., புத்தகங்கள் தமிழ், இங்கிலீஷ் மற்றும் பல மொழிகளில் எழுதிட பல கூலி _ போலி எழுத்தாளர்கள் (நிலீஷீ, ஷ்க்ஷீவீமீக்ஷீ, பிவீக்ஷீமீறீவீஸீரீ), ஏஜண்டுகள், கங்காணிகள் இத்தியாதி! இத்தியாதி!!

அமைச்சர்கள், அதிகாரிகள்

இதில் ஒரு மகாவெட்கக்கேடு, நன்றாகப் படித்த-வர்-கள், பெருநிலை அதிகாரிகள், கருநாடக முதலமைச்சர் போன்ற பெரும் பதவியாளர்கள் எல்லாம் அவருடைய மடத்திற்கும், கூட்டங்களுக்கும் சென்றதால், அதைவிட பெரு விளம்பரம்; தொத்து நோய் போன்ற பக்திப் பரவசம்; பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டு, ஒரு கார்ப்பரேட் (வியாபாரக்) கம்பெனி போல இவரது அமைப்புகள் நடந்தன!

வெளிநாட்டில், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் இவரது லீலா வினோத திருவிளை-யாடல்-க-ளுக்கு தனித்தனி பாஷ் (றிஷீலீ) மாட மாளிகை, கோபு-ரங்-கள், கோயில்கள் என்ற திரையுடன்!

சீடர்கள், சீடிகள் எல்லாம்!

இப்போது இங்குள்ள சீடர்களால், சீடிகள் எல்லாம் அம்பலத்திற்குப் பல செய்திகளை அடுக்கடுக்காகக் கொண்டு வரப்படுகின்றனவோ, அதுபோல அமெரிக்-காவில் இவரது கிருஷ்ண லீலைகளை அமெரிக்கவாழ் சீட கோடிகளே, அங்குள்ள அரசு (பிராசிகியூஷன்) வழக்குரைஞருக்குப் புகார் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

பல இடங்களிலும் அப்ரூவர்கள் யாரும் கேட்-காமலேயே சுயம்புவாகக் கிளம்புகின்றனர்!

நித்யானந்தா என்ற காவி உடை ஏமாற்றுப் பேர்வழி ஆன்மிக வேடத்தில் பல மோசடிகள் செய்து வருகிறார்.

தேசத்தின் மானம் கப்பல் கப்பலாக ஏறி!

1. கலிபோர்னியாவில் நித்யானந்தா பவுண்டேசன் 2. லைஃப் பிள்ளீஸ் பவுண்டேசன் 3. நித்திய யோகா 4. வேதிக் டெம்பிள் 5. தியான பீட பவுண்டேசன் என்று பல வகையிலும் 2003 இல் தொடங்கி அவ-ரோடு ஒட்டி உறவாடிய பக்தன் டக்ளஸ் மெக்கெல்லர் என்ற அமெரிக்கர் அந்த கலிபோர்னியா அட்டர்னி _ ஜெனரலுக்குப் புகார் மனுக்களை ஆதாரத்தோடு தந்து, கிரிமினல் மற்றும் சிவில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ள செய்தி, நாறடிக்கின்றது!

இந்தத் தேசத்தின் மானம், மரியாதை எல்லாம் கப்பல் கப்பலாக ஏறி வெளிச்சம் போட்டுக் காட்டி நம்மை வெட்கப்பட வைத்து வருகிறது!

நித்யானந்தா டக்ளஸ் மெக்கல்லர் என்பவர் சுவாமி நித்திய பிரபா கூறுகையில், அறையில் பெண்களுடன் இருக்கும்போது அறைக்கு வெளியே என்னைத்தான் பாதுகாவலராக நிறுத்தி வைப்பார் என்றும், நித்யானந்தா நடத்தும் யாகங்களில் _ யாக குண்டத்தில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்-தாரு; அவங்க பேரு எனக்கு நினைப்பில்லே, ஆனா அவர்-கள் திருமணம் ஆனவங்க என்பது மட்டும் தெரி-யும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கி-யிருந்தார். அந்த நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சுகிட்டேன். அதைப் பத்தி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்த வழியாம்!

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னாரு என்று கூறு-கிறது அந்தக் கடிதம். அது மட்டுமா?

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை!

பிரத்தியேகமான அறை

சனாதன கோயிலில் நித்தியானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்திற்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது! ................ இதற்குமேல் எழுதி நம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆன்மிகத்தை உலகமயமாக்கி...?

இதுபோன்ற பல்வேறு குற்றங்களை _ சர்வதேச ரீதியில் செய்து, ஆன்மிகத்தை உலக மயமாக்கி கோபியர் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா என்ற கலியுக புருஷன் இந்த கிரிமினல் பேர்வழி சட்டத்தின் பிடிகளிலிருந்து தப்பிட, ஆசிரமத்தை வேறு ஒரு ஆனந்தாவிடம் விட்டுவிட்டு, இவர் தனியே ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக ஒரு கபட நாடகம் போட்டுள்ளார்! இதை அரசுகள் ஏற்கப் போகின்றனவா? சட்டப் பிடியிலிருந்து தப்புவதற்குத்தானே இந்த தற்காலிக ஏற்பாடு?

மோசடி கும்பலுக்கு
சரியான தண்டனை

காலாவதியான மருந்துகள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எவ்வளவோ, அதைவிட மோசமான தேசியக் குற்றம் _ காலாவதியான பக்தி, மத வேடங்கள் அணிந்து பல்லாயிரக் கோடிகள் சொத்து சேர்த்த குற்றவாளி ஏதோ ராஜபோக வாழ்வு வாழ விட்டுவிடுவதாகும்.

1. இந்த மோசடிக் கும்பலைக் கைது செய்து சட்டத்-தின்முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கவேண்டும்.

அரசுடைமையாக்க வேண்டும்!

2. அந்த ஆசிரமங்கள் _ உள்நாட்டு, வெளி-நாடு-களிலும் உள்ளவைகளை அரசுடைமைகளாக்கி எடுத்துக்கொண்டு, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திடவேண்டும்.

கருநாடக அரசும், மத்திய அரசும் இதுபற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது.

அரசுகள் வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், நாட்டுக் கண்ணோட்டத்தோடு, பார்க்க முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.