இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்-களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன் பாரதிதாசன்.
ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது _ மயிலாடு-துறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.
இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!
தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின் ஒப்பு-வமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!
தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலை-யைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும் என்-பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடை-யாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.
இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்-னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.
சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்-கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை _ நயமானவை.
நாடி முத்து வேடப்பனிடம்
இன்றியமையா ஒன்றுக்காகக்
கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்
வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்
குறளில் கோயிலே இல்லையம்மா
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடிமுத்து நவிலுகின்றான்;
தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்
கோவில் இல்லையா குறளில்?
ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!
இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.
இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.
மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற அர்த்த-முள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்-பட்டது. கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த யோசனையாகும்.
திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயி-லையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உரு-வத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பது-தானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?
இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்-குமார் தெரிவித்தாலும், இதற்கு அடி-யெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்-பதை, கவிஞரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.
அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!
வியாழன், 29 ஏப்ரல், 2010
மோடிவித்தை!

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்-கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்-வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.
இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதி-களில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்-ணீரைப் பயன்படுத்தி குஜ-ராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்ட-மான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.
பரவாயில்லையே. நற்செய்தி தானே _ இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;
இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பது-தானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர-தாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்-புக்குச் சொந்தக்காரர்.
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்ப-தோடு -_ இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!
பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்-காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.
நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்-களே _நினைவிருக்கிறதா?
மை நாதுராம் கோட்சே போல்தா _ என்பதுதான் அந்த நாட-கத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசு-கிறேன் என்பது தலைப்பு.
நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்ல-வில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது-தான் அந்த நாடகத்தின் அடிநாதம் _ உச்சகட்டம் (சிறீவீனீணீஜ்)
இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்-ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்-மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?
படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!
- மயிலாடன்
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
ஒரு உண்மை விளக்கம்
பிரபாகரனின் தாயாரைத் திருப்பி
அனுப்பிய பாவிகள் யார்?
ஒரு உண்மை விளக்கம்
நாள்: 25.4.2010 ஞாயிறு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்:
பெரியார் திடல், சென்னை_7, வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,
தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சிறப்புரை: தமிழர் தலைவர்
கி.வீரமணி, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், பேராசிரியர்
சுப.வீரபாண்டியன், நன்றி: இரா.வில்வநாதன்.
திராவிடர் கழகம்

புதன், 21 ஏப்ரல், 2010
மக்கள் தொகைக் கணக்கெடுப்பும்
நமது முக்கிய வேண்டுகோளும்
சென்னையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களுள் முக்கியமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பானதாகும்.
(1) நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்,- சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்து-கிறது.
கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மத நம்பிக்கையற்றவர் , நாத்திகர் (athiest) என்று தெரிவிக்குமாறு பகுத்-தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இது ஏழாவது தீர்மானமாகும்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெறும் மக்கள் தொகை என்பது மட்டு-மல்-லாமல் வேறு பல தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
ஆடு, மாடுகள் உள்பட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப்-பெட்டிகள் வரை கேட்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்ளும் கணக்கெடுப்பு மட்டும் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுங்கூட நடுவண் அரசு கேளாக் காதுடையதாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக்கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி கே. எர்ரான் நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தென்ன? 1931_க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பெறவில்லை. எனவே அத்தகு கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டதே_ அப்படியிருந்தும் பிற்-படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மேற்-கொள்ளப்படாதது_ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதை இருளில் மூழ்கடிக்கும் சதியாகும் என்று எழுதியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் புஜ்பால் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெளிவாக ஒன்றை நினைவூட்டி உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளி விவரங்கள் திரட்டப்படவேண்டும் என்று காகாகலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணயமும் வலியுறுத்தி-யிருப்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
திராவிடர் கழகம் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் தேவை-யில்லை என்பதற்கான நியாயபூர்வமான அல்லது சட்ட பூர்வமான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமலேயே_- அதேநேரத்தில் அத்தகு விவரங்கள் திரட்டாத ஒரு நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு ஆணையத்தின் கணக்-கீட்டின்படி) பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதும், உரிமைகளைத் தடுப்பதுமாகும். இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இடையில் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. மறுபரிசீலனை செய்து, நாட்டின் பெரும்பான்மையரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யுமாறு நடுவண் அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்த மிக முக்-கியமான பிரச்சினை குறித்து பிரதமரை வலி-யுறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
(2) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் என்ற கலத்தில் மதமற்றவர் (ழிஷீஸீ-க்ஷீமீறீவீரீவீஷீ) நாத்திகர் (கிலீமீவீ) என்று சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு என்கிற புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. உலகிலேயே தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், - மத மறுப்பாளர்கள் புள்ளி விவரம் அதி-காரப்பூர்வமான புள்ளி விவரத்தில் இடம் பெற-வேண்டாமா?
தோழர்கள் இந்த முக்கியமான பிரச்சினையில் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இனம் என்று வரும்போது திராவிடர் என்று கூறப்படவேண்டும். இது வரலாற்று ரீதியான உண்-மையாதலால் அதனையும் பதிவு செய்யவேண்டும்.
சிந்து சமவெளி நாகரிகம் உள்பட திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலை-யிலும், பார்ப்பனர் அல்லாதார் எனும் கண்-ணோட்டத்திலும் இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி -விடுதலை

வைகுண்ட சாமிகள்
வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்-கொடி தூக்கிய பெரு-மகனார் ஆவார்.
கன்னியாகுமரிக்கு அரு-கில் பூவண்டன்-தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்த-வர் (1809)
முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்-கிய பெயரைச் சூட்டக்-கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு_ புதுப்-பெயர் முத்துக் குட்டி.
அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமை-கள் அறவே மறுக்-கப்பட்ட பரிதாபத்துக்குரிய-வர்களாக அவர்கள் ஒடுக்-கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலை-களில் நடக்க உரிமை-யில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.
மன்னர் ஆட்சி மனு-தர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்-குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.
அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்-திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்-தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீ-கர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்து-மாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
காவி நிறத்தில் வெள்-ளைத் தீபச் சுடரைத் தாங்-கிய கொடியை அறிமுகப்-படுத்தினார். ஒரு வகை-யில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.
மன்னரையும் பார்ப்ப-னர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்-கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.
இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்-கள் எழுப்பி, தேர்த் திருப்-பணியையும் நடத்தியுள்-ளனர்.
எந்த உருவ வழி-பாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.
கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலை-களின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்-துவம் புரிகிறதா?

இந்தி செய்த உதவி!
சக்ரவர்த்தி ராஜ-கோபாலாச்சாரியாரால் (ராஜாஜி) சென்னை மாகா-ணத்தில் கட்டாய இந்தி புகுத்-தப்பட்ட நாள் தான் இந்நாள் (1938).
சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சர் என்ற முறை-யில், 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய கையோடு கட்டாய இந்தி-யையும் திணித்தார்.
இந்தியைப் புகுத்திய-தற்குப் பிரதமர் ஆச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்-போது குறிப்பிட்டார்.
1926 ஆம் ஆண்டி-லேயே இந்தியின் இரகசி-யம்பற்றி எழுதினார் தந்தை பெரியார். தமிழிற்குத் துரோ-கமும் _ இந்தியின் இரகசிய-மும் (குடிஅரசு, 7.3.1926) என்ற தலைப்பில் எழுதி-யிருந்தார்.
1931 இல் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய புராணக் கதை களைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வட மொழி முதலிய மொழி களை நமது மக்கள் படிக் கும்படிச் செய்வது, பார்ப் பனீயத்துக்கு மறைமுக மாக ஆக்கம் தேடுவ தாகும் என்று 1931 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கப்-பட்டது. அதைத்தான் 1938 இலும் லயோலா கல்லூரியி-லும் ஆச்சாரியார் எதிரொ-லிக்கிறார்.
பார்ப்பனர்களின் உள்-ளத்து ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும் நச்சுப் பொருள் எவ்வளவுத் தொலைநோக்-கோடு துல்லியமாகக் கண்-டறிந்து வெளிப்படுத்தப்பட்-டுள்ளது என்பதை நினைக்-கும்பொழுது மிகுந்த ஆச்-சரியமாகவே இருக்கிறது.
ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பும், அதனால் ஏற்-பட்ட எதிர்ப்பும்தான் தமிழ்-நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களால் முழங்கச் செய்தது.
கட்சிகளை மறந்து ஜாதி மதங்களைத் துறந்து தமி-ழர்கள் என்ற உணர்வுடன் தந்தை பெரியார் தலைமை-யில் தமிழர்களை ஓரணியில் திரட்டியது ஆச்சாரியாரின் இந்தித் திணிப்புதான்.
இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் தலைமை தாங்கிப் போர்க்குரல் எழுப்பி, இன-மான, மொழிமான, தன்மான எழுச்சிப் பேரலையைத் தமிழர்கள் மத்தியில் எழுப்-பியதன் விளைவுதான் பெண்கள் சென்னையில் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுக்-கும் உணர்வை ஊட்டியது (13.11.1938).
இறுதி வெற்றி தமிழர்-களுக்கே. கட்டாய இந்தி தொலைந்தது (21.2.1940).
எப்படியோ ஆச்சாரி-யாரின் சமஸ்கிருதத்தின் குட்டியான இந்தித் திணிப்பு தமிழர்கள் தம் தலைவரை அடையாளங் காணவும், தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வெடித்துக் கிளம்-பவும் பேருதவி செய்தது என்பது மட்டும் உண்மை!

சபரிமலையில் தமிழன்
இரண்டாம் தரக் குடிமகனா?
சு. செந்தில்குமரன்
மாநிலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதேறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை சென்றுவரு-கிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும் போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்-களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...
ஒன்பது முறை பெரிய பாதையில் எரிமேலி,காளைகட்டி, அழுதா நதி, அழுதா ஏற்றம் , கல்லிடுங் குன்றம், அழுதா இறக்கம், கருங்குழி மாரியம்மன் கோவில், கரிமலை ஏற்றம், கரிமலை பகவதி கோயில், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பா, கன்னி மூல கணபதி , நீலிமலை ஏற்றம், நீலிமலை இறக்கம், சரங்குத்தி சபரி பீடம், சன்னிதானம், பதினெட்டு படிகள், அய்யப்பன் , புல்மேடு என்று பயணித்து, பம்பாவிலும் சன்னிதானத்-திலும் புல் மேட்டிலும் இருந்து ஜோதி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் ஓரிரு முறை சித்திரைக் கனி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் நன்கு ஆய்ந்து நான் எழுதும் கட்டுரை இது. மெக்காவிற்கு அடுத்த-படியாக உலகின் இரண்டாவது பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரி-மலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்-வமும் முருகன்தான். சரியாகச் செல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தேடு கண்ணில் நீர் பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும் _ சற்றுக் கூர்ந்து கவனித்தால்.
தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத் தடுக்கவேண்டும்.
தேடியபோது அவர்களின் கண்ணில்-பட்டதுதான் மலைகளுக்கும், அருவி-களுக்கும் அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன் கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும், நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப் பிரிவினை வஞ்சகம் தெரியாது.
அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின் வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா வம்சத்திலே, வடக்கன் வம்சத்திலே வந்த-வன் அல்ல. இதை அப்படியே சொன்-னால்-தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற நிலைமை அந்தக் காலத்தில்.
தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்-பதைவிட, பல மலைகள் கடந்து அய்யப்பனை பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறி-யிருக்கிற மக்களை, 42 நாள் கட்டாய-மாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை பயணத்-தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்-குவித்த தன்மை.
முருகனின் தம்பியானார் அய்யப்-பன், சிவன் என்ற பொதுவான தகப்-பனின் மகன் என்பதால். தவிர, அய்-யப்பன் கோயில் பயணத்தின் பெரும்-பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்-பான்மையாக வசித்த பகுதிகள். மொழி-வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதி-களாகவே இருந்தன.
எனவே, சபரிமலை என்பது தமிழர்-களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை செய்பவர்கள் தவிர, இன்-றைக்கும் பல மலையாளிகள் சபரி-மலைக்கு இருமுடி சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம்படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல் மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
சபரிமலையைப் பிரபலமாக்கியவர்-கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள். இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜ-மாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில் இருந்த-போதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்-கிற குறுகிய பாதைகள்கூடக் கிடை-யாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற அய்யப்ப சாமிகள் இரு-முடி-யோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.
வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள். அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர். மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.
ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமை-யுடன், சபரிமலைக்கு இவ்வளவு பெய-ரும், புகழும் கிடைத்ததில் தமிழர்-களுக்கு கணிசமாகப் பங்கு உண்டு. ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...
ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம் இப்போது எதற்கு? என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்-படு-கிறது. ஆனால், அய்யப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளி-யீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும் இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.
அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன், அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.
இப்போது அயாள் ஒரி பாண்டி-யானு... என்று பாண்டி என்ற சொல்-லையே கேவலமாகச் சொல்லும் மலை-யாளிகளால், அய்யப்பனே அந்தப் பாண்டியின் மகன் என்ற உண்-மையை ஏற்க விரும்பவில்லை. சபரி-மலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் சாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்-காலமான அய்தீகம். அங்கும் வழி-படும் பக்தர்கள் ஏராளம். அதைத் தடுத்தால் அவர்களும் கேரளாவிற்-குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்-யப்பனின் தீவிர பக்தரான செங்-கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.
பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை போகிறீர்களா? கேரளா-வின் பதிவு எண் கொண்ட வாகனத்-தில் போனால் பிரச்சினையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடைய-முடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.
இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்-டாம் படிவரையே வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும் ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளி-லும் கோயிலிலும் பெரும்பாலும் அய்யப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான். அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலை-யாளிகள் நடத்தும் கடைகள், சன்னி-தானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
தவிர்க்க முடியாதது மலையாள காவல்-துறையினரின் அராஜகம். எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளி-டம் மென்மையாகவும், தமிழர்களிடம், கடுமையாகவும் நடந்துகெள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி அய்யப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.
அந்த ஆசையில் தமிழ் பக்தர்கள் கியூவில் நிற்க, அது நடை அடைக்க-வேண்டிய நேரமாகவும் இருந்து, அந்த சமயத்தில் தமிழ் பக்தர்களுக்குப் பின்னால் மலையாளிகள் வந்து.. அவர்கள் நடை அடைக்கும்முன்பு அய்யப்பனைப் பார்க்க ஆசைப்பட்டு-விட்டால் போச்சு. மலையாள காவல்-துறையினரிடம் கண் காட்டினால்,
அவர்கள் தமிழ் பக்தர்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, மலையாள பக்தர்கள் பார்க்க வசதி செய்து தருவார்கள். பாவம் பாண்டிய பந்தள ராசன்!
இப்படியாக, தமிழன் வளர்த்த சபரி-மலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்-பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்-கையை வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காள-ஹஸ்தி பேன்ற தமிழனின் பக்தி கலா-சாரச் செல்வங்கள் வேறு மாநிலங்-களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம் இழந்தான்.
ஒருவேளை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்தி-ருந்-தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை-யாவது குறைந்திருக்கும்.
அப்படியில்லை. விளைவு?-
இவர்களை நம்புவதைவிட, கட-வுளை நம்புவதே மேல் என்ற மன-நிலைக்கு தமிழன் வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்-தாலும் பரவாயில்லை என்று ஓடி வணங்கி, தான் சிறுகச்சிறுக சம்-பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று மாநில அரசுகளுக்குக் கொட்டி-விட்டு அவப்-பெயரையும் சம்பாதித்து வருகிறான்.
அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.
சரணம் சொல்வதும், சரணம் அடை-வதுமே தமிழனின் தலையெழுத்தாகி-விட்டதோ!
www.viduthalai.com

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)