ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து

தந்தை பெரியார்

5.9.1970 முதல் 10.9.1970 வரை மதுரை மாவட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு

நம் இயக்க பிரசாரம் தான் மக்களை மாற்றமடையச் செய்து வருகிறது. மற்ற இயககங-களுக்கு எல்லாம் வேறு வேலை இருககிறது. தேர்தலில் ஈடு-படுவது, பதவிக்குச் செலவது என்பது இருககிறது. நம் இயக்கம் ஒன்று-தான் தேர்த-லுக்கு நிற்காமல் பிரசாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்கிறது. இந்நாட்டிலுள்ள பெருமபாலான மக்களின் நம்பிககைக்கு, நடப்பிற்கு விரோத-மான கருத்துகளை எடுத்துச் சொல்லிவரு-வது நம் இயக்கம் ஒன்று தானாகும். இத-னால் எந்தச் சிறு பலனும் நாம் அடைவது கிடையாது.

1925-இல் சுயமரியாதை இயக்கம் ஆரமபிக்கப்பட்டது. அன்று நம் கொள்கை எதுவோ அது தான் இனறைக்கும் நம் கொள்கை-யாகும். இடை-யில் நம் மக்களின் நலனை முனனிடடுக் காமராஜரை ஆதரிக்க நேர்ந்த போது, சமுதாயக் கொள்கைகள் தீவிர-மாக பிரச்சாரம் செய்யாமல் இருக்க வேணடியதா-யிற்று. தற்போது நம் கொள்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் சமுதாயக் கொளகை-களைத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றோம். இந்தியாவி-லேயே சமுதாயததிற்காக இருக்கிற இயக்கம் திராவிடர் கழகம் ஒன்றுதான் ஆகும். அது அரசியலில் ஈடுபடு-வது கிடையாது- பதவியை இலடசியம் செய்வது கிடையாது.

திராவிடர் கழகத்திற்குக் கடவுள், மதம், சாஸ்திரம், தேசம், மொழி இவறறில் பற்று கிடை-யாது. மனித சமுதாயப் பற்று ஒன்று தான் உண்டு. தேசப்பற்று, மதப்பற்று, மொழிபபற்று, கடவுள் பற்று என்பது எல்லாம் வாய்பபால் ஏறபடு-வதே ஒழிய, இயற்கையானதல்ல. இதெலலாம் காலப் போக்கில் சுய-நலககாரர்களின் பிரசாரத்தால் ஏறபட்டதேயாகும்.

என்னைப் பொருத்தவரை இநநாட்டை இநநாட்டுககாரன் ஆள வேண்டும் என்கிற கடடாயம் கிடையாது. எந்த நாட்டுக்காரனாக இருநதாலும், நம்மை மனிதனாக மதித்து நடத்தக் கூடியவனாக இருந்தால் அவனை நான் வரவேற்பேன்.

நாம் மனிதர்களாக வாழவது பெரிதா? நம் மதம், நம் மொழி, நம் நாடு, நம் கட-வுள் என்று சூத்திரர்களாக, இழி-மக்களாக அறிவற்றவனாக இருப்பது பெரிதா? நம்மை நாய்க்கன், மராட்டி-யன், சேரன், சோழன், வெங்காயம் எல்லாம் ஆண்டி-ருக்கின்றான். அதன் பயன் என்ன? நாம் சூத்திரரகளாகத் தானே இருக்கினறோம்?

நம் இழிவை நீக்குகிறவன் எவன் ஆட்சி செய்தாலும் அவனை வர-வேறபேன். நம் மக்களுக்கு அறிவை கொடுககக்கூடிய மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழியை வரவேற்பேன். பொது-வாக நம் மக்களுக்கு நமக்கு என்ன தேவையோ, அதை எது கொடுககிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

இப்போது இந்தியா சுதநதிரம் அடைந்து- அது ஏற்படுததிக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அர-சமைபபுச் சட்டம் என்ன என்றால், மதம் பாது-காக்கபபட வேண்டும் அவனவன் நமபிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் எனபதாகும். இந்தச் சட்டத்தைக் கொண்டு நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடி-யாது. இந்த சட்டத்தை மதிக்காத வேறு எவ-னாவது வந்தால்தான் இந்த இழிவு ஒழிக்கப்பட முடியும். அடுத்து நம் மககளின் இழி-விற்குக் காரணமாக இருப்பது, அவரகள் நம்பி வணங்குகின்ற கட-வுளே ஆகும். அறிவோடு பார்ததால் எந்த மனி-த-னுமே கட-வுளை நம்புவது கிடையாது. பட்டை அடித்துக் கொள்ப-வன், நாமம் போட்டுக் கொளகிறவன் எல்லாம், தம் மடத-தனத்தால் போட்டுக் கொளகின்ற-வனே தவிர பக்திக்காகப் போட்டு கொள்வது கிடை-யாது.

இந்த நாட்டு மக்களின் இழிவினைப் போக்க வேண்டு-மானால் அது நம் இயக்கம் ஒன்றினால் தான் ஆகும். நம் மக்களின் இழிவை நிலை நிறுத்து-வதறகுக் கடவுள், மதம், சாதி, சமீப காலம் வரை இருந்த ஆட்சி, அரசியல் கட்சி-கள் யாவும் பாதுகாப்பாக இருககின்றன. நம் இயக்கம் ஒன்று தான் இவை யாவும் ஒழிக்கப்பட்டு நம் சமுதாய இழிவு நீக்கத்திற்காகப் பாடு-பட்டு வருகிறது. நம் நாட்டில் தோன்றிய சமுதாய சீர்திருத்த-வாதிகள் எனபோர்கள் அனை-வரும் கட-வுள், மதம், சாதி, பழைமை காப்பாற்றபபட வேண்டும்,- அதில் கைவைக்கக் கூடாது என்று சொல்லி அவற்றைக் காப்பாற்று-வதை சீர்திருத்தமாகக் கொண்டிருந்த-வர்களே ஆவார்கள்.

இந்தக் காந்தி, மகாத்மா என்று பார்ப்பானால் பட்டம் சூட்டப்பட்டவர். அவரை அறியாத பாமரப் பொது மக்கள் இவரை பெரிய மகாத்மா என்று சொலவாரகள். எங்களைப் பொருத்த-வரை அவர் சாதாரண மனிதர் தான். அவர் பெயரைச் சொல்லி ஓட்டிற்கும், பத-விக்கும் நிற்பவர்கள்தான் அவரைப் பெரிய மனிதராக்கிக் காட்டுகிறார்கள். மக்களி-டையே அவருக்குச் செலவாக்கு இருப்பதால், இன்றைய ஆட்சியாளரும் அவர் பெய-ரைச் சொல்லிக் கொண்டு அதன் மூலம் பலன் பெறப் பார்ககினறனர். இந்தக் காந்தி வருணாசிரமம்,- சாதி காப்பாறறப்படவேண்டும் என்று சொல்லி அதற்காகத் தொணடாற்றி வந்தவரே ஆவார். தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனி கோயில், தனிப் பள்ளிக் கூடம், தனிக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கவேணடும் என்று சொனனவர்தான். அதன்படி நடந்து கொணடவர்தான். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாதவர் ஆவார்.

காங்கிரசில் சாதி முறை காப்பாறறப்பட-வேண்டும். சாதி முறைப்படி நடந்து-கொள்ள வேண்டும் என்று சொன்னதாலேயே நான் அதை விட்டு வெளியேறினேன். நமககிருக்கிற சூத்திரத் தன்மையைப் பற்றி, இழிசாதி- ஈனசாதித் தன்மையைப் பற்றி யாருமே கவ-லைப்படவில்லை. நம் பண்டார சன்னதிகள் முதற்கொண்டு இதை ஏற்றுக்கொண்டு இருபபவர்களே ஆவார்கள். இந்த இழிநிலைக்கு 4-ஆம் சாதித் தன்மைக்கு அடிபபடையாக இருப்பது கடவுள் ஆனதால், அதை ஒழிக்க-வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகினறோம். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான் இதற்காகத் தொணடாற்றி வருகிறது. தி.மு.கழ-கத்தின் கொள்கையும் இது தானாகும். அர-சியலில் ஈடு-பட்டிருப்பதால் வெளியில் சொலலாமல் மறைத்துக் கொண்டிருககின்றனர்.

இந்தக் கோயில்களை எலலாம் இடித்துத் தரைமட்டம் ஆக்க வேணடும், அதில் உள்ள குழவிக் கற்களை எல்லாம் உடைத்து ரோட்டிற்கு ஜல்லி-யாகப் போட வேண்டும். பார்ப்பானை எல்லாம் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அல்லது அவன் நமமோடு சேர்ந்து மணவெட்ட, மூட்டை சுமக்க, ஏர் உழ வரவேண்டும். அரசாங்கம் நாம் சொல்கிறபடி நடக்கககூடியதாக இருக்க-வேண்டும். கோயில்களை இடிக்க, சிலை-களை உடைக்க, கோயில் கட்டு-வதைத் தடுக்க அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இருக்கவேணடும். தேர்த திருவிழா- உறசவங்களை எல்லாம் தடை செய்யக் கூடிய-தாக இருக்க வேண்டும். இந்தக் கோயிலகளுக்கு உற்சவங்களுக்கு, திரு-விழாக்களுக்கு செலவழிக்கிற பணததைக் கொண்டு மககளுக்கு விஞ்ஞான, அதிசய- அற்புதங்களைக் கண்டுபிடிககச் செலவிட வேண்டும். அபபடிச் செய்தால் நாம் மற்ற மேல் நாட்டுககாரனைவிட, சிறந்த விஞஞானச் சாதனஙகளைச் செய்ய முடியும். இபபோது நாம் மேல் நாட்டுககாரன் கண்டு பிடித்த சாதனஙகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

                                                                                                                                                                         விடுதலை- 3.9.1970

பெரியார் பிஞ்சு பழகு முகாம்

விநாயகனை கைது செய்து




கோவை, செப்.12- மூலக்கடவுளாம், முழு முதற்கடவுளாம், எதையும் விக்னம் இல் லாமல் நிறைவேற்றுப வன் எனக் கூறப்படும். விநாயகன் கடவுள் - சிவ பெருமானின் மூத்த மகன் என்று ஆத்திகர் களால் அழைக்கப்படும் விநாயக கடவுளை கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி காவல்துறையினர் கைது செய்து சிறை வைத்தனர்.

விநாயகனை கூண் டோடு தூக்கும் பொழுது தடுத்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 146 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதுபற்றிய செய்தி வரு மாறு:

கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன் னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. மூன்றரை அடி உயர விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் வைத் தனர். சதுர்த்தி விழாவை யொட்டி, 20 ஆண்டு களாக அந்த இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைப் பது வழக்கமாம். கடந்த ஆண்டு இந்து முன்ன ணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை வைக்கவில்லையாம்.

இந்த ஆண்டு வழக் கம் போல் சிலை வைப்பதற்கு காவல்துறை யினரிடம் இந்து முன்ன ணியினர் அனுமதி கோரினர். சிலை வைக்கக் கூடாது காவல்துறை எதிர்ப்பு

வேண்டுகோளை நிராகரித்த காவல்துறை யினர் , பிள்ளையார் பொம்மையை வைக்கக் கூடாது என தடை விதித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர், பொறுப்பாளர் குணசே கரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் இரவு அங்கே வைத்தனர். தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் நாகராஜன், உதவி ஆணையாளர்கள் குமாரசாமி, பாலாஜி சரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித் தனர். காவல்துறையினரிடம், முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்ற னர். இதை கவனித்த பெண்கள், விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப் படுத்தவிடாமல் தடுத் தனர்.

இதையடுத்து, காவல் துறையினரால் அங் கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி னர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண் களை தவிர்த்து, விநாய கர் சிலையை காவல் துறையினரால் கைப் பற்ற முடியவில்லை. விநாயகன் கைது!

அதனால், கடவுள் விநாயகனையும், பெண் களையும் சேர்த்து கைது செய்து காவல்துறை யினர் வேனில் ஏற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை பாது காப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங் களை காவல்துறையினர் தேடி அலைந்தனர். விசேச நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த தால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண் ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர் களை இறங்க அறிவுறுத் தினர். ஒருவரும் இறங்கா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினர், கைது செய்தவர்களை காவல் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர். விநாயகனையும் இறக்கி வைத்தனர். இதை யடுத்து, கைது செய்யப் பட்டவர்களுக்கு மதிய உணவு காவல்துறையின ரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனை வரும் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனராம்.

நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய் யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் காவல் பயிற்சி மைதானத் திலேயே வைக்கப்பட் டனர். இதனிடையே இந்து முன்னணி நிரு வாகிகள் மற்றும் காவல் துறையினருக்குமிடையே சிலை வைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடந்ததாம். இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்பட வில்லையாம்.
                                                         நன்றி- விடுதலை

தந்தை பெரியார் 132 வது பிறந்த நாள் விழா

வியாழன், 9 செப்டம்பர், 2010

தமிழ் இனி தலைநிமிரும்!

ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?

முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.

நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.

ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!

இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!

                                              நன்றி-  தினமணி (09-09-10)  

மகிழ்ச்சி தரும் தகவல்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு
                          மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, செப். 9- ஜாதி வாரி கணக்கெடுப்புப் பற்றி முடிவெடுக்க இன்று மத்திய அமைச்சரவை கூடியது.


இக்கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தனியாக ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்குள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.


--------------------------------------------------------------------------------

புதன், 8 செப்டம்பர், 2010

விநாயகர் சதுர்த்தியா?


வரும் 11 ஆம் தேதி சனியன்று விநாயகர் சதுர்த்தியாம். இந்து மதத்தின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதன் கடவுள்களின் பிறப்பு, வளர்ப்பு, செயல்பாடுகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

இவற்றைவிட அருவருப்பு ஆபாசம், படு முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது - கேள்விப் படவும் முடியாது. கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஆபாசத்தின் ஊற்றுகள் இவை.

பிள்ளையார் என்ற விநாயகன் பிறப்புப்பற்றி ஒரு கதையா? இரு கதைகளா? உண்மையாக இருக்கும் எதற்கும் எப்படி பல பிறப்புகள் இருக்க முடியும்?

பிறப்பு என்பது எப்படி ஒருவருக்குப் பலவகையாக இருக்க முடியும்? பார்வதிதேவியின் அழுக்கிலிருந்து பிறந்தார் பிள்ளையார் என்று சொன்னால், அது அரு வருப்பாக இருந்தாலும், அறிவுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும், பிறப்பு என்பதால் அது ஒன்றோடு ஒன்றாக மட்டுமே நிறுத்தப்பட்டு இருக்கவேண்டும்; நந்தவனத்துக்குச் சென்றபோது, அங்கு ஓர் ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்ததைப் பார்த்த பார்வதிக்கும், பரமசிவனுக்கும் காமவெறி எடுத்து, பரமசிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் உருமாறிப் புணர்ந்து பெற்ற பிள்ளைதான் பிள்ளையார் என்பது இன்னொரு பிறப்புக் கதை.

இன்னொரு பக்கத்தில் என்ன சொல்லுகிறார்கள்? கடவுள் பிறப்பு - இறப்பு அற்றவர் - உருவம் அற்றவர் என்று கதைக்கின்றனர். அப்படி சொல்லுபவர்களே இப்படி கடவுள் பிறப்புக் கதைகளை ஆபாசமாகத் தீட்டி வைத்துள்ளனர். அவற்றுக்குத் தடபுடலாக விழாவும் கொண்டாடுகின்றனர்.

இந்தப் பிள்ளையார் பிரம்மச்சாரி என்பது ஒரு புராணம் - இல்லை, இல்லை; சத்தி, முத்தி என்று இரண்டு மனைவிகள் உண்டு என்பது இன்னொரு புராணம்.

தாயைப்போலவே தனக்குப் பெண்டாட்டி வேண்டும் என்று கேட்டதாக இன்னொரு புராணம்.

வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது, புத்தர் பிறந்த பிறகு எப்படி கிருஷ்ண அவதாரம் என்ற ஒன்றைக் கற்பித்து, புத்தர் போதித்த நெறிமுறைப் பண்புகளுக்கு மாறாக கிருஷ்ணன் என்ற காமக் கடவுளைக் கற்பித்து மக்களைப் பாலியல் உணர்ச்சிப் பக்கம் தள்ளி, இந்து மதத்திற்கு உயிர்ப் பிச்சை கொடுத்தார்களோ, அதேபோல, புத்தர் விகாரங்களை உடைத்து, அந்த இடங்களில் எல்லாம் இந்த விநாயகனைக் கொண்டுவந்து வைத்துவிட்டனர். புத்தருக்கு விநாயகர் என்ற பெயருண்டு - விநாயகர் என்றால் தலைவன் என்று பொருள். இந்தப் பெயர் மோசடி, ஆள் மாறாட்டம் செய்து, புத்தர் சிலைகள் இருந்த இடங்களில் எல்லாம் இந்த விநாயகன் சிலைகளைக் கொண்டுபோய் வைத்துவிட்டனர். ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட பவுத்தமும் தமிழும் என்னும் நூலைப் படித்தால் நன்கு அறியலாம்.

இந்த விநயாகன் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான். சோழ நாட்டின் அமைச்சராக விருந்த சேக்கிழார் படையெடுத்துச் சென்று புலிகேசி யைத் தோற்கடித்து, வாதாபியை வெற்றிகொண்டு, அதன் அடையாளமாக அங்கு இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து திருச்செங்காட்டாங்குடியில் கோயில் எழுப்புவித்தான் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறுகிறார். திருஞானசம்பந்தனின் பாடல் வரிகளும் இதற்குச் சாட்சியம் கூறுகின்றன.

மகாராட்டிரத்தில் பாலகங்காதர திலகர் என்கிற சித்பவன் பார்ப்பனர்தான் இந்த விநாயகரைப் பெரும் அளவுக்குப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிடிப்பை ஏற்படுத்தியவர்.

தமிழ்நாட்டில், பிள்ளையார் ஊர்வலம் என்பதெல் லாம்கூட, அந்த ஆசாமி அம்மாநிலத்தில் நடத்தியதன் பிரதிபலிப்புதான். மகாராட்டிரத்தில் ஒருமுறை பிளேக் நோய் ஏற்பட்டபோது, அந்த நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை ஒழிக்க வெள்ளைக்கார அரசு திட்டம் தீட்டிச் செயல்படுத்தியபோது, விநாயகன் வாகனமான எலியை மிலேச்சனான கிறிஸ்துவன் வெள்ளைக்காரன் கொல்லுவது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகும் என்ற வெறிப் பிரச்சாரம் கிளப்பப்பட்டதால், இரு வெள்ளைக்கார அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது எத்தகைய கொடுமை!

இதில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். கடவுள் வழிபாட்டில் சில நிலைப்பாடுகளைக் கூறி வைத்துள்ளனர்.

துவிஜர்களாகிய பார்ப்பனர்களுக்குத் தெய்வம் - கடவுள் என்பது அக்னி; முனிவர்களுக்குத் தெய்வம் என்பது இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் என்பது சிலையில். சம பார்வை உடையவர்களுக்குத் தெய்வம் என்பது எங்கும் - என்று உத்தர கீதை கூறுகிறது.

இதன்படி பார்த்தால் பிள்ளையார் சதுர்த்தி கொண் டாடி பிள்ளையார் சிலையைக் கும்பிடுபவர்கள் யார் என்றால்- புத்தி குறைந்தவர்கள் என்று பெறப் படுகிறது.

பிள்ளையார் சிலையை மட்டுமல்ல; கோயில் களுக்குச் சென்று சாமி சிலைகளைக் கும்பிடுவோர் அனைவருமே புத்தி குறைவானவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்பீர்!

www.viduthalai.com