செவ்வாய், 4 மே, 2010

ஒற்றைப்பத்தி

மனோரமா

கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்துவிட்டுத் திரும்பு-பவர்கள் விபத்தில் பலியாகி மரணம் அடையும் பரிதாபச் செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.

திருவாரூரையடுத்த எட்டுக்குடி முருகன் கோயி-லுக்குச் சென்று வந்த சென்னை திருவொற்றியூ-ரைச் சேர்ந்த பக்தகள் 5 பேர் சாலை விபத்தில் பரி-தாபமாகப் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டனர் என்பது நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் (29.4.2010).

அதேபோல, கேரள மாநிலம் கானூர் மற்றும் பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேளாங்-கன்னிக்கு மாதாவைத் தரி-சிக்க காரில் வந்தபோது திரு-வாரூர் அருகே அம்மையப்-பன் அருகே நின்று கொண்-டிருந்த லாரிமீது மோதி அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள் என்பது ஏப்ரல் 30 ஆம் தேதி ஏடு-களில் இடம்பெற்ற தகவல்.

ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால், இதுபோல ஆயிரம் ஆயிரம் விபத்து-கள்; அதில் ஆயிரம் ஆயி-ரம் பக்தர்கள் மரணம்!

இவ்வளவுக்குப் பிறகும் கடவுள், கோயில், பக்தி, தரி-சனம், நேர்த்திக் கடன் என்று மக்கள் அலைகிறார்-கள் என்றால், அவர்களின் பக்தியை, புத்தியை என்ன-வென்று சொல்ல!

ஒருகணம் சிந்தித்தால், புத்திக்கு வேலை கொடுத்-தாலே நல்ல முடிவுக்கு வந்துவிடலாமே!

கோயில்களும் சரி, அதற்குள் வைக்கப்பட்டிருக்-கும் கடவுள் சிலைகளும் சரி, மனிதனால் உருவாக்கப்-பட்டவைதானே!

ஓசையுள்ள கல்லை நீர்

உடைத்து ரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை

மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு வைத்த கல்லில்

பூவும் நீரும் சாத்துறீர்!

ஈசனுக்கு உகந்த கல்லு

எந்த கல்லு சொல்லுமே!

என்று சித்தர் பாடினாரே _ கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

இப்பொழுது ஒரு தகவல் தமிழ்த் திரைப்பட உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மனோரமா! திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவில் அவருக்கு மக்கள் கலையரசி என்று பட்டம் கூட வழங்கப்பட்டது. அதற்குத் தகுதியானவர் அவர் என்பதில் அய்யமில்லை.

அவருக்கு மூட்டு வலி-யாம். வயதான காலத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரக்கூடிய தொல்லைதான் இது. இதற்காக கேரளா சென்று ஆயுர் வேத சிகிச்சைகூட எடுத்துக்கொண்டாராம்; குணமாகவில்லையாம்.

அடுத்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தாராம் _ வேலை ஆகவில்லை. இறுதியில் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்-கொண்டு காரில் திரும்புகையில், விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்பதே நமது ஆவல்!

இதற்குப் பிறகாவது மனோரமாக்கள் திருந்துவார்களா? திருந்தவேண்டும் என்-பதே நமது வேண்டுகோள்.

மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?

- மயிலாடன்
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக